Archive For The “பொது” Category
”குந்தி வீட்டுக்காரர் சினிமாவிலே ஆர்ட் டைரக்டராம்..” “என்னது, ஆர்ட் டைரக்டரா?” “ஆமா, அப்படித்தான் சொன்னா குந்தி”. பூணூலை கயிறு மாதிரி கனமாகப் போட்டுக்கொண்டு ஆசாரம் கொண்டாடிக்கொண்டு வருகிற சினிமாக்காரரைக் கற்பனை செய்யவே சிரமமாக இருந்தது. எதற்கு சினிமா சான்ஸ் அதிகமான பம்பாயை விட்டு இங்கே தென்னிந்தியாவின் மூலையில் மதறாஸுக்கு குடும்பத்தோடு வந்திருக்கிறார் அந்த தேஷஸ்த பிராமணர்? சாயந்திரம் ஆபீஸ் விட்டு வரும்போது அந்தப் பக்கம் இயல்பாகப் பார்க்க, எழுந்து வந்த சிரிப்பை அடக்கியபடி நகர்ந்தேன். உள்ளே இருந்து…
”ராமோஜி சார், காப்பி குடிச்சீங்களா?” சனிக்கிழமை காலை ஓசி காப்பிக்காகவும், அதோடு ஊர் வம்புக்காகவும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, தோளில் குடையைத் தொங்கவிட்டுக்கொண்டு மெல்ல நடந்து வந்தார் எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடு. நான் வீட்டுத் திண்ணையில் சுதேசமித்திரன் படித்தபடி இருந்ததைப் பார்த்து அவர் படியேறி வந்தது அரை மணி நேரம் முன்பு. வந்ததும் குடையை சுவரில் ஓய்வாகச் சாய்த்து வைத்தார் அவர். அப்புறம் ”உங்க வைஸ்ராய் என்ன சொல்றார்?” என்று அக்கறையாக விசாரித்தார். என்னமோ நானும், வைஸ்ராய்…
திரும்ப நடக்கும்போது காளிங்க ரத்தினம் சார் கொடுத்தனுப்பிய காணிக்கை இருநூறு ரூபாய் நினைவு வர உடனே நின்றேன். அவசரமாகக் கைப்பையில் தேடினேன். எங்கே போனது அது? படபடப்போடு கைப்பையைக் கொட்டிக் கவிழ்த்து எடுத்துப் பார்க்க, அந்தக் காணிக்கைப் பணத்தைக் காணவே காணோம். ஆனால், ’முப்பது ரூபாய் இதர செலவினங்கள்’ கவர் பத்திரமாக இருந்தது. காளிங்க ரத்தினத்தின் காணிக்கை வைத்த கவரைத்தான் தேவனாஞ்சேரி கந்தனுக்குக் கொடுத்தேன் என்று புரிந்தது. இருநூறு ரூபாயா? தானம் செய்தாலும் அளவு பார்த்துச் செய்ய…
உப்புக்காரத் தெருப்பையன் டிரைவர் என்னை ஓரமாகக் கூட்டிப் போனான். ”சார், தப்பா எடுத்துக்க மாட்டீங்களே. இங்கே இருந்து மூணு மைல்தான் கருகாவூர். நீங்க நடையை எட்டிப் போட்டாக்கூட போயிடலாம்.. நான் இவங்களை நம்ம கார்லே கும்பகோணம் கொண்டு சேர்த்துடறேன்.. அப்புறம் ஆண்டவனோ, பராசக்தியோ, இயற்கையோ, விதிச்சபடி ஆகட்டும்”’ ரத்னா கேட்டபடி பின்னால் நின்றவள் உடனே கூடைகளை விட்டோபா உதவியோடு இறக்கி வைத்தாள். நான் சுருக்கமாக அந்த மாட்டுவண்டி இளைஞனிடம் எல்லாம் சொன்னேன். கை கூப்பி நின்றான் அவன்….
ஒரு வருடம் மட்டும் தான், கூட ரெண்டு மாதம், சரி, நான் இருந்த அந்தக் குறுகிய பொழுதில் பிடித்துப்போன ஊர் இது. பிறந்து வளர்ந்த மதறாஸ் கூட அப்புறம் தான். ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு முகமும் நினைவில் மட்டுமில்லை ஆழ்ந்த உறக்கத்தின் போது கனவிலும் வந்து போகுமளவு என்னை பாதித்த ஊர் இது. ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன். ரத்னா இங்கே வராமல் இருந்தால் நான் மட்டும் வந்திருந்தால் குடந்தை என்னை இத்தனை ஆக்கிரமித்துக்…
”ஏம்பா நீ போன வாரம் நான் பார்த்தபோது காப்பி போட்டுட்டிருந்தியே” என்று விசாரித்தபடி திரும்பினார் விட்டோபா. ”ஆமா காப்பி மாஸ்டர் வரலேன்னு முதலாளி அங்கே அந்த மூலைக்கு போகச் சொன்னார். காப்பி மாஸ்டர் போயாச்சு.. அட இருக்காருங்க.. மெட்றாஸோட போயிட்டார்.. எல்லோரும் மெட்றாஸை விட்டு வரும்போது இவர் அங்கே காபிக்கடை இல்லே டீக்கடை போட்டிருக்கார்.. நல்லா போகுதாம்”. பச்சையப்பன் தெருப்பையன் என் தகவலுக்காகவும் சொன்னான். ”இங்கே காப்பி கோட்டை ஆச்சே.. டீ எப்படி போவுது?” என்று கேட்டபடி…