Archive For மே 5, 2020
அவர் போன பிறகு கதவு அடைத்து வந்தேன். “புவி, உங்க படம் நான் தசாபதி தான் முதன்முதலா பார்த்தேன். அதுக்கு முந்தி ஆக்ட் கொடுத்திருக்கீங்கன்னு சொன்னீங்களே”, ரத்னா சொன்னாள். ”ஓ நான் நாலு வருஷம் முந்தி, அவன்.. கோஷ்.. ஏமாத்திட்டுப் போனதுமே நடிக்க ஆரம்பிச்சுட்டேன்”. ”ராஜ முந்திரியிலேயா?” நான் கேட்டேன். ”இல்லை, மதறாஸ். திரும்பி வந்தாச்சு” என்றாள். புரியாமல் பார்த்தோம். ”ராஜமுந்திரிக்கு அஞ்சு மைல்லே கோலமூரு தான் என் பூர்விகம். அப்பா பத்து ஏக்கர் நிலம் வச்சிருக்கார்.பி.ஏ…
வெளிவர இருக்கும் என் அடுத்த நாவல் ‘ராமோஜியம்’ – சில பகுதிகள் தெலக்ஸ் தலையைச் சாய்த்தபடி சிரித்தாள். ”எம்விஎம் செட்டியார் சார் அடுத்த படம். காரைக்குடி பக்கம் கல்லல்னு ஒரு ஊர். பக்கத்திலே செம்மண் பிரதேசத்துலே அவசர அவசரமா ஸ்டூடியோ டெவலப் பண்ணி அங்கே தான் ஷூட்டிங் எல்லாம்.. படிச்சிருப்பீங்களே பத்திரிகையிலே”. இது என்னைக் கேட்டது. பின்னே இல்லையா? பாராயணமே பண்ணி இருக்கிறேன். ”நாங்க கும்பகோணம் போறோம்” என்றேன் பெருமையோடு. ”அதான் கேட்டேன், அடுத்த தேன் நிலவான்னு…..
உள்ளே உட்கார்ந்ததும் மெத்தை தைத்த இருக்கையில் படுத்துப் பார்த்தாள். ”என்னங்க, படுக்க இடம் சரியா இல்லையே”. நான் அவளை எழுந்து நிற்கச் சொல்லிவிட்டு, பின்னால் தாழ்ப்பாள் போட்டு மாட்டி இருந்த மெத்தைப் படுக்கையை மெல்ல இறக்கினேன். ஓஓஒ என்று குழந்தை போல் குதூகலித்து, சந்தோஷப்பட்டு, ஒரு நிமிடம் படுத்து எழுந்து, உயரத்தில் உட்கார்ந்து சிரித்தாள். ரயில் கிளம்பினதும் இந்த மெத்தையை இறக்கலாம் என்று அதை திரும்பப் பொருத்தி வைத்தேன். ”நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமா இந்த இடம்?…
வெள்ளி ராத்திரி எட்டரைக்கு எழும்பூரில் போட்மெயில் ஏற ஆட்டோ ரிக்ஷாவில் ஏறிப் போனோம். கேளப்பனின் நண்பர் மாதவன் அவர் கூப்பிட்டனுப்ப வந்திருந்தார். கொச்சி அருகே லந்தன் பத்தேரி தீவுவாசியாம். ”அங்கே எப்பவும் தண்ணிக்கு நடுவே இருந்துட்டு, இங்கே கோடையிலே தண்ணீர் இல்லாம, செப்டம்பர்லே ஒரே கொட்டாக மழை கொட்டித் தீர்க்க பார்த்துக்கிட்டிருக்கேன்” என்றார். அவர் சொல்லும்போதே சட்டச்சட சட்டச்சட என்று இடி இடித்து, மழை பொழிய ஆரம்பித்தது. ராத்திரி எட்டரைக்குத்தானே போட்மெயில்? சாப்பிட்டே போயிடலாம் என்று ரவா…
”தம்பி ஒரு உதவி செய்யணும்” என்றார் காளிங்க ரத்தினம். சொல்லுங்க சார். ”திருக்கருகாவூர் நீங்க போகச் சொல்ல, இந்தக் காணிக்கையையும் கருக்காத்த நாயகி அம்மா உண்டியல்லே சேர்த்துடுங்க..” சட்டைப் பையில் ஒரு பழைய பர்ஸில் இருந்து நூறு ரூபாய் இரண்டை எடுத்துக் கொடுத்தார்.இரண்டாக மடித்தே யுகக் கணக்காக சட்டையில் இருந்திருக்க வேண்டும் அந்த நோட்டுகள். ”அவசியம் சார், போட்டுட்டு வந்து.. வந்து எப்படி உங்ககிட்டே செஞ்சாச்சுன்னு சொல்றது?” ”நீங்க புவிப் பொண்ணு கிட்டே சொல்லி விடுங்க.. போதும்…..
நான் காளிக்கு அடுத்த நாற்காலியில் உட்கார்ந்து, ரத்னா எங்கே என்று பார்வையால் தேடினேன். இந்தப் பக்கம் தெலக்ஸ் புவனாவும் அந்தப் பக்கம் சி.டி.சந்திரகாந்தமும் கையை விரித்துக் காட்டிக்கொண்டிருக்க, ஏக காலத்தில் அவர்களுக்கு ரத்னா கைரேகை பார்த்துப் பலன் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கு கைரேகை பார்க்கத் தெரியும் என்று எனக்கே அப்போதுதான் தெரியும். இந்த சி.டி.சந்திரகாந்தம் தான் தசாபதியில் தெலக்ஸ்க்கு நிகரான பிரபலம் அடைந்தவள். மூன்று அழகிகள் ஒரே இடத்தில் இருந்து சிரிக்க, சண்டை ஏதும் அதுவரை வரவில்லை…