Archive For The “பொது” Category

யட்சன் வந்த 1940 – ராமோஜியம் தொடக்கம் – பகுதிகள்

By |

யட்சன் வந்த மதறாஸ் 1940 நாவல் மரத்தின் கிளையில் உட்கார்ந்திருந்த யட்சன் ”இந்தக் கதையை எழுதி விட்டு வேறே வேலை பார்” என்று சொன்னான். நான் மரத்தடியில் பழம் கிடக்கிறதா என்று பார்க்கப் போனபோது அவன் லாலலா என்று கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி என்னை அழைத்தான் – ”ராமோஜி, ஓ ராமோஜி! சற்று கவனி”. ”எனக்குத் தமிழ் சரியாகப் பேசவே தெரியாதபோது என்னத்தை எழுத?”, என்று கேட்டேன் தரையில் உதிர்ந்து விழுந்த நாவல் பழத்தைப் பொறுக்கியபடி. “எல்லாம்…




Read more »

வேறு யாரும் செமி பிக்‌ஷனைத் தமிழில் இதுவரை கையாண்டிருக்காத பட்சத்தில், முதல் முறை தமிழில் இது இடம் பெற்ற நாவல் ராமோஜியம் தான்

By |

வேறு யாரும் செமி பிக்‌ஷனைத் தமிழில் இதுவரை கையாண்டிருக்காத பட்சத்தில், முதல் முறை தமிழில் இது இடம் பெற்ற நாவல் ராமோஜியம் தான்

ராமோஜியம் நாவலை எழுதியபோது – 2 தமிழ் நாவலில் வேறு யாராவது செய்திருக்கிறார்களோ தெரியாது – ராமோஜியம் நாவலில் நான் semi-fiction கதைக்கருப்பொருள் – நடை உத்தியைக் கையாண்டேன். semi-fiction என்பது – Semi-fiction is fiction implementing a great deal of non-fiction, for example: a fictional depiction “based on a true story”, or a fictionalized account, or a reconstructed biography புனைவிலிருந்து அ-புனைவும் அ-புனைவில் இருந்து…




Read more »

ராமோஜியம் நாவலை எழுதியபோது – 1

By |

ராமோஜியம் நாவலுக்கும் அதற்கு முந்திய 1975 நாவலுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. 1975 எமர்ஜென்சி காலகட்டத்தில் நிகழ்வது. எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலை காலகட்டத்தைப் பற்றியதல்ல அது. அதேபோல் ராமோஜியம் நாவலின் பெரும்பகுதி 1940-களில் நிகழ்வது. 1940-களின் முக்கிய நிகழ்வான சுதந்திரப் போராட்டம் அந்தப் பகுதிகளுக்குக் களன் அமைத்துத் தரும். காந்திஜியும், கஸ்தூர்பாவும், சக்கரை செட்டியாரும், சர்ச்சிலும், வேவல் துரையும், சென்னை கவர்னர் ஆர்தர் ஹோப் துரையும், கலாசார மைல்கற்களான சபாபதி சினிமாவும், ஆல் இந்தியா ரேடியோவில்…




Read more »

ராமோஜியம் – பின்கதை

By |

இன்னும் இருக்கா, இவ்வளவுதானா? யட்சன் கேட்டான். எழுதிக் கொண்டே போனால் நிகழ்ந்து கொண்டே இருக்கும். எங்கேயாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? நான் பதிலுக்குக் கேட்டேன். எழுத ஆரம்பித்த ராமோஜி இல்லையே முடிக்க வந்திருப்பது? நியாயமான கேள்வி அவன் பின்னும் கேட்டது. ஏற்கனவே சொன்னேனே. இருநூறு வருஷத்தில் பத்து ராமோஜிகளாவது பிறந்து சுவாசித்திருக்கலாம. அடுத்த ராமோஜிகள் வந்து கொண்டிருக்கலாம். எல்லோருடைய ராமோஜி கதைகளும் ஒன்றாக, இது என் ராமோஜியம். நான் கேட்டது, பார்த்தது, கேட்டவர்களும் பார்த்தவர்களும் சொல்லக் கேட்டது…




Read more »

நாவல் ‘ராமோஜியம்’ நிறைவு பெறுவது இப்படித்தான்

By |

– காலையில் குக்கரை எடுத்து வரும்முன் குடையைத் தோளில் மாட்டியபடி வந்த எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடு, ”வீட்டுக்குள் எர்த் செக் பண்ணிட்டீங்களா? ப்ளக் பாயிண்ட் எல்லாம் சரியா இருக்கா? பவர் சாக்கெட் லோடு தாங்குமான்னு பார்த்தாச்சா? பார்க்காம குக்கரை ஆன் பண்ணினா ப்யூஸ் போயிடுமே” என்று தொழில் வார்த்தைகளை சரமாரியாக உதிர்த்தார். ”நாயுடு, அதெல்லாம் ஷோரூம் காரங்க பார்த்துப்பாங்க. வந்து பார்த்துட்டு ஏதாவது சொன்னா நாம மாத்திக்கலாம்” என்று நைச்சியமாகச் சொன்னேன். ”சரி என்னமே சொல்றீங்க.. நல்லா…




Read more »

ராமோஜியம் – நிறைவு செய்யும் அத்தியாயத்தில் இருந்து

By |

கும்பகோணம் ஸ்டேஷனில் போய் நேரே ரெண்டு செகண்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கினேன். ஃபார்ஸ்ட் பேசஞ்சர் ரயில் கிட்டத்தட்ட காலியாகவே வந்தது. ரெண்டாம் வகுப்பில் எங்களைத் தவிர யாருமில்லை. ஃபாஸ்ட் பாசஞ்சர் என்றால் என்ன என்று டிக்கெட் சோதிக்க வந்த டிக்கெட் இன்ஸ்பெக்டரைக் கேட்டேன். ”ஒரு ஸ்டேஷன் விட்டு ஒண்ணு இப்படி நின்னு போனா ஃபாஸ்ட் பேசஞ்சர் சார், எல்லா ஸ்டேஷன்லேயும் நின்னா வெறும் பேசஞ்சர். எங்கேயும் நிக்க மாட்டேன்னு சொல்லிட்டு கிராசிங்க், செக்கிங், ட்ராக் ரிப்பேர்னு எல்லா…




Read more »