Viswaroopam – an interaction with friends about the novelவிஸ்வரூபம் நாவல் – நண்பர்களோடு கலந்துரையாடல்


அன்பு நண்பர்களே

இந்த வாரம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியான விஸ்வரூபம் நாவல் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பதிப்பாளர்களான கிழக்கு பதிப்பகத்தோடு சேர்ந்து ஒரு நூல் அறிமுக விழா பிப்ரவரியில் நடத்த திட்டம் உண்டு.

அதோடு கூட பிப்ரவரி 17 அல்லது 24 தேதி மாலை சென்னை கடற்கரையில் ஒரு சந்திப்பு வைத்துக் கொள்ளலாமா?  நண்பர்கள் நாவலைப் படித்து உரையாட கிட்டத்தட்ட 4 வாரங்கள் நேரம் கிடைக்கும்.

உங்கள் பின்னூட்டங்களின் அடிப்படையில் நாள் தீர்மானிக்கப்படும்.. பத்ரியோடு இது குறித்துப் பேசுகிறேன்.விஸ்வரூபம் விற்பனையில்

அன்புடன்

இரா.முருகன்