இதுபோதும் இப்போதைக்கு வெண்பாக்கள்

வெள்ளை ஒயினருந்தி ஓர்குவளை பீர்மாந்தல்
சள்ளையில்லை பீர்முந்தி பின்னாலே – கள்ளு
மெதுமெதுவாய் ஹாங்ஓவர் மேனிவிட ஓர்நாள்
இதுபோதும் இப்போதைக் கு

“beer before wine and you’ll feel fine; wine before beer and you’ll feel queer”

வேலியில் ஓணான் வெகுகாலம் ஈயுவிடல்
சோலியின்றி வாக்கெடுப்பு சும்மாப்பின் – ஓலம்
தடாலென தாவீத் அடாவடி தப்பு
சுடாதீங்க ராணியம் மா

ஈயுவிடல் – EU exit (European Union exit) – Brexit
தாவீத் – David Cameron

The Queen, with a lot of firepower.

சுடுநீர் உறைந்திடும் காய்ச்ச அடுப்பில்
எடுபால் பனித்திரள் பாளம் – படியும்
வயிரத்தில் ஊசியெனப் பெய்பனிமெய் நோகும்
மயிர்க்கூச் செறியும் சிகை

#polar_vortex #cold_snap

பூசைக்கு சாமியும் நேசிக்க ஆரணங்கும்
ஓசைக்கு கீதமும் நூல்பயில – பாசையும்
ஆசை பலப்பல ஆளாட்கு வேறெனினும்
மீசை இணைத்தசோத ரர்

Lost In History‏ @HistoryToLearn
Identical twins with a shared mustache, 1890.

பின்னலில் சூடிய பிச்சிப்பூ பார்ப்பதாய்
கன்னத்தில் முத்தமிட்ட கால்நொடியில் – இன்றுயிர்க்க
சின்னதொரு கையசைவில் பின்நகரும் முட்களொடு
பின்னாலே போகுமோகா லம்

Weird History‏

Bolivia’s Congressional Clock is backwards in order to encourage people to think differently.

ஓவியத்தில் உட்கார்த்தி ஓய்ந்த கலைஞனுக்கு
சீவியமின் னோராண்டு சிக்கலில்லை – நோவும்;
இசைபட வாழும் இருமுதியோர்க் கென்றும்
அசலும் நகலில் உயிர்ப்பு

Weird History‏ @weird_hist
Actual subjects of American Gothic.

தையலுக்கு நூலேன் தளிகைசெய் வீட்டிலிரு
அய்யன் அகத்தானே உன்தெய்வம் – வைதுதிட்டி
தாக்கித் தரையினில் வீழ்த்திச் சிறைவாசம்
வாக்களிக்கச் சென்றால்குற் றம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி, இருபதின் முதல் பத்து வரை அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. வந்தாலும் நடப்பாக்குவது சுலபமாக இல்லை. இது 1852-இல் ஓட்டுப் போட்ட பெண்மேல் ஏவப்பட்ட வன்முறை

பல்துலக்க ஆல்வேலும் பக்குவமாய்ச் சீவியது
சொல்சிறக்க வால்மிளகில் சொட்டிவைத்த – நல்லதேன்
எல்லேயில் பாரீஸில் ப்ராங்க்பர்ட்டில் கார்டுதேய்த்து
நல்லாத்தா நாற்பதுடா லர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன