இந்தியாவின் மகளுக்கு இங்கே இடமில்லையா?

Watched Leslee Udwin’s India’s Daughter made for BBC.

More than the culprit and the perpetrator of the heinous crime mentioning nonchalantly he raped Nirbhaya to teach her a lesson about staying out late at night, it is the learned defence counsel solemnly declaring that women have no place in Indian culture leaves one deeply disturbed. I can’t curtail my wild imagination of him becoming a sagacious judge sometime in the near or far off future.

——————————————-

ஒரே புராணத்தை
ஒன்பது வருடமாகக்
கதை சொல்லிவரும்
காலட்சேபக் காரர்.

‘ஆதௌன கீர்த்தனாரம்பத்திலே’ என
ஆரம்பித்தாலே
அழுது விடும் பக்தர்கள்.

கடவுள் கிடக்கட்டும்
கதை சொல்லியே நம.

———————————————-

காலச் சக்கரத்தின் சுழற்சி –

70-களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ACWD Automatic Cumulative Wedding Deposit என்ற பெயரில் graded recurring deposit திட்டம் தொடங்கியது. மாதம் 100 ரூ வீதம் 12 மாதம், அடுத்த ஆண்டு மாதம் 200 ரூ, அதற்கடுத்த ஆண்டில் 300 ரூ – இப்படி பத்து ஆண்டு அதற்கு மேல் செலுத்தி வட்டியோடு கணிசமான தொகை கிடைக்க வழி செய்த திட்டம். மக்ளின் திருமணத்துக்கு உதவும் என்று விளம்பரம் செய்யப்பட்ட திட்டம் இது. வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

கிட்டத்தட்ட இதே நேரத்தில் கரூர் வைஸ்யா பேங்க் இதே போன்ற ‘திருமகள் திருமணத் திட்டம்’ அறிமுகப் படுத்தியது. அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்ற திட்டம்.

அப்போது ‘பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க, நிறையச் செலவழித்துத் திருமணம் செய்து கொடுக்க மறைமுகமாக வங்கிகள் தூண்டுகின்றன இம்மாதிரியான திட்டங்கள் மூலம்’ என்று கருத்தாக்கம் உருவாகி (அரசியல் கட்சிகளின் பங்கும் சமூக ஆர்வலர்களின் பங்கும் இதில் உண்டு) எதிர்ப்பு எழுந்தது.

இப்போது அம்மாதிரியான வங்கித் திட்டங்கள் ‘உங்கள் மகன் அல்லது மகளின் திருமணச் செலவுகளுக்கு உதவ என்று விளம்பரம் செய்யப் படுகின்றன.

//WEDDING DEPOSIT:
Take the strain out of savings. Investment in convenient monthly instalments, which are stepped up every year. You decide once and start the account; it gain momentum as months roll by. At the end you receive a lumpsum amount with compounded interest. Amount comes handy to celebrate the marriage of your daughter or son. The account can be opened for 63, 84 or 120 months.//

2015 – அரசின் சுகன்யா சம்ருதி திட்டம் பெண் குழந்தையின் எதிர்காலத்துக்கான சேமிப்பு – மகளின் கல்யாணம் அல்லது உயர் கல்விக்கு என்று குறிப்பிடப் படுகிறது. உயர் கல்வி சரி. கல்யாணம்?

—————————————————————————–

சொன்னேனே, கடலை மிட்டாய்லே இருந்து கக்கூஸ் வரைக்கும் இனிமே இந்தியிலே தான் பெயர் எழுதுவாங்க போலிருக்கு..

சுரக்‌ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா, ஜீவன் ஜ்யோதி பீமா யோஜனா, வித்யாலக்‌ஷ்மி கார்யக்ரம், ஜன் தான், ஜன் கல்யாண் ‪#‎பட்ஜெட்2015‬

என்ன கண்றாவிடா இது..
———————————-
ஹங்கேரியில் ஒரு சின்ன கிராமம். அதுக்கு ஒரு மேயர். பதினெட்டு பேர் மக்கள் தொகை. ஆறு குதிரை. ரெண்டு பசுமாடு. மூணு ஆடு. சின்னதா ஒரு கோழிப் பண்ணை. புல்வெளி.

கிராமத்தை தினசரி 500 பவுண்ட் (ரூ 48000) கொடுத்து வாடைகைக்கு எடுத்துக்கலாம். மேயர், குதிரை, இன்ன பிற உங்கள் பணியில் அந்த ஒரு நாள் மட்டும்.

அது மட்டுமில்லே, அன்றைய துணை மேயர் நீங்க தான்.

முக்கியமாக ஒண்ணு, நீங்க உங்க இஷ்டப்படி அந்த்க் கிராமத்துக்குப் பெயர் சூட்டலாம் (ஒரு நாள் மட்டும்).
கிராம மேம்பாட்டுக்கான திட்டம்னு மேயர் சொல்றார்.

————————————-

வட்டப் பந்தை வட்டமடிக்கும்
மற்ற பந்தும் போகும் மாண்டே

மாளா ஒளியாம் ஞாயிறும் கூட
மற்றோர் யுகத்தில் கரிந்து போகும்

கரிந்தும் எரிந்தும் வெடித்த பின்னும்
உதிக்கும் குழம்பில் உயிர்கள் முளைக்கும்.

செய்யுள் போலொரு காதல்…

எனக்குப் பிடித்த வரிகள். கமல் ஹாசன் கவிதை ‘சாகாவரம்’ (உத்தம வில்லன் திரைப்படப் பாடல்)

——————————–

ஜிம்பாவே தேசியத் தலைவர் ராபர்ட் முகாபே 91-ம் பிறந்த நாள் கொண்டாடியிருக்கார்.
கிடா வெட்டி விருந்து வேணாம்னு யானை வெட்டிச் சமைச்சு சாப்பிட்டிருக்காங்க.

அது மட்டுமிலே, சுருக்கமாகச் சொன்னா, ஒரு zoo -வையே தின்னு தீர்த்தாச்சாம்.

91 வயசிலே யானை மாமிசம்.. எவ்வளவு ஜெலூசில் குடிச்சாரோ!
——————————–
Leonard Nimoy, Mr Spock of ‘Star Trek’, dies at 83.

We’ll miss the Vulcan. I loved watching Star Trek : The next generation for Spock, long back.

Vulcan salute, Spock. RIP

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன