எஸ்.பொ? நோ போ

 

Paa.Jayaprakasam sir sent me an invite for a function to felicitate the Australian based Eelam Tamil writer EssPo this Saturday. This is the mail i sent to Paa.Je

அன்புள்ள ப.ஜெயபிரகாசம் சார் நலமாக இருக்கிறீர்களா? நான் நல்ம்.

எஸ்.பொ என்ற முழுக்க முழுக்க சுயநலவாதியை, சுரண்டல்காரரை நீங்கள் அறிய மாட்டீர்கள். அவர் சிட்னியில் இருந்து மறுபடி மறுபடி தொலைபேசி தன் கடைசியாக வெளிவந்த முன்னீடுகள் புத்தகத்துக்கு முன்னுரை தரச் சொன்னார்.
எஸ்.பொ என்ற அற்புதமான படைப்பாளி மேல் நான் கொண்ட மதிப்புக்கு சாட்சி நான் எழுதிய முன்னுரை. ஒரு வாரம் பேய் போல் சொந்த, அலுவலக வேலைகளை நிறுத்தி வைத்து, 500 பக்கம் அச்சடித்துப் பொட்டலம் கட்டிக் கொடுத்த காகிதங்களைப் பொறுமையாக அச்சுப்பிழை கடந்து படித்து, ரசித்து எழுதியது அது. மொத்த உழைப்பு 15 மணி நேரம் பாழாகிப் போயிருக்கிறது.

என்னிடம் மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தை சொல்லாமல் வேறு ஒருவரிடம் (அவரும் உங்கள் அழைப்பிதழ் படி சனியன்று பேசுகிறார்) முன்னுரை வாங்கி வெளியிட்டு விட்டார் எஸ்.பொ. புத்தகம் வெளிவந்த விவரத்தைக் கூட என்னிடம் சொல்லவில்லை. கம்ப்யூட்டர் துறையில் 24*7 வேலைக்கு நடுவே இலக்கியப் பணி புரியும் என்போன்ற ஒருவனுக்கு 15 மணி நேர உழைப்பு விரயமாவதன் துன்பம் மகா கொடுமையானது.

எஸ்.பொவுக்கு நான் எழுதி புத்தகத்தில் இருந்து உதிர்ந்து விழுந்த அந்த முன்னுரை அப்புறம் யுகமாயினி பத்திரிகையில் வெளிவந்தது. அதை இக்கடிதத்தோடு அனுப்பியிருக்கிறேன், எஸ்.பொவுக்கு விழா? நிச்சயம் நோ போ இந்த இரா.முருகன்

anputan
era.murukan
13/4/2011

I have never raised my voice against a fellow writer in my life. This is the first and last time I am doing so, Inshah Allah

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன