Archive For The “இது புதுசு” Category

பெரு நாவல் ‘மிளகு’ – முதல் கருத்துகள்

By |

பெரு நாவல் ‘மிளகு’ – முதல் கருத்துகள்

நண்பர் திரு காளிபிரசாத் ரங்கமணி ஆரம்பித்த வேகத்தில் கடகடவென நூறுபக்கங்கள் கடந்தன. பழைய காலக் கதையில் திடீரென முன்னோக்கி வந்து ஏற்கனவே நன்கு பரிச்சயமான திலீப், அகல்யா, கொச்சு தெரசா பரமேஸ்வரனின் நினைவுகள்… அது ஒரு சர்ப்ரைஸ்.. போகிற வேகத்தில் மூன்று நாட்களில் படித்து விடுவேன் என நினைக்கிறேன். .. மிளகோடு துவங்கியுள்ளது இவ்வருட புத்தக கண்காட்சி புது வரவுகளின் வாசிப்பு நண்பர் மீனாட்சிசுந்தரம் முரளி நானும் வாங்கி வாசிக்க ஆரம்பித்து உள்ளேன். மனதிற்கு உகந்த எழுத்தாளர்….




Read more »

ஆனந்தரங்கப் பிள்ளை சொல்லிப்போக ராமோசி ராயன் எழுதிய டயரிக் குறிப்பு

By |

ராமோஜியம் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி. நாவல் சென்னை புத்தகக் கண்காட்சி 2022 கிழக்கு பதிப்பகம் அரங்கில் கிடைக்கும்   முரட்டாண்டி சாவடி வந்தாகி விட்டது. அடங்கொப்.. துயுப்ளே பேட்டை வந்தாச்சு. ”துரை உங்களை உக்கார சொன்னார்” என்று  பாரா காவல் வீரர்களின் தலைவன் கிரிமாசி பண்டிதன் சொல்லி விட்டுத் திரும்பிப் போனான். துரை விடிகாலையிலேயே இங்கே கிளம்பி வந்துவிட்டார் போல. கோயிலுக்குப் போய் பூசை வைக்கிற சீலத்தை என்ன காரணமோ இந்த வாரம் வேண்டாம்…




Read more »

18. துபாஷ் ராமோசி ராயன் 1745 புதுச்சேரி – சில குறிப்புகள் (என் நாவல் ராமோஜியம்)

By |

an excerpt from my novel RAMOJIUM – novel available in Kizhakku Padhipagam stall in Chennai Book Fair 2022 முரட்டாண்டி சாவடி என்று சொல்லாதே என துரை கட்டளையிட்டால் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே. வீட்டுக்குள் வேணுமானாmல் முரட்டாண்டி, வரட்டாண்டி, பரட்டாண்டி எதுவும் சொல்லிக் கொள்ளட்டும். வெளியே வந்து, ஊர்ப் பெயரைத் துரை கேட்டால் அவன் ஆணைப்படி தியூப்ளே பேட்டை   என்று சொல்ல மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்? அந்த மனுஷனைப் பாவம்…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ வெளியீடு

By |

பெரு நாவல் ‘மிளகு’ வெளியீடு

பெரு நாவல் ‘மிளகு’ வெளியாகியுள்ளது, நேற்று சென்னை புத்தகக் கண்காட்சி 2022-இல். எழுத்து பிரசுரம் – ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் வெளியீடு. சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். 10% தள்ளுபடி விலைக்கு வாங்கலாம்.




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – Sankaran goes under the surgeon’s scalpel

By |

an excerpt from my ready-to-be-published novel MILAGU அப்படியாக அலோபதி அறுவை சிகிச்சை நடத்தி சங்கரனின் நாசியைச் சரிபண்ணலாம் என்ற முடிவுக்கு மறுபடி வந்தாகி விட்டது. இந்த மாதிரி அறுவைசிகிச்சை நடத்த புது டில்லி லாஜ்பத் நகர் பகுதியில் பிரபலமான மருத்துவ மனையில் கௌரவ சர்ஜனாக இருக்கும் சுக்தேவ் சாமிநாதன் பெயர் பெற்றவர் என்று தெரிய வந்தது. அவர் மகப்பேறு மருத்துவரும் கூட. அதென்ன பெயர் சுக்தேவ் சாமிநாதன் என்று விசாரிக்கத் தெரிய வந்த மேலதிகத்…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – Chinna Sankaran regains his olfactory prowess

By |

An excerpt from the novel MILAGU expected to hit the book sellers the coming week சின்னச் சங்கரன் சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருந்தார் – ப்ரம்மம் ஒகடெ, ப்ரம்மம் ஒகடெ. தெலுங்குப் பாட்டு. அன்னமாச்சார்யாவின் கீர்த்தனை. பௌளி ராகத்தில் அமைந்தது. சங்கரனுக்கு தெலுங்கு தெரியாது. பௌளி மட்டும் இல்லை. எந்த ராகத்திலும் பாடத் தெரியாது. இந்தப் பாட்டும் முதல் வரியைத் தவிரப் பாடத் தெரியாது. பாட்டை நிறுத்தி அப்பா அப்பா என்று…




Read more »