Archive For The “இது புதுசு” Category
லெனி ரைபென்ஸ்தால் 2003 செப்டம்பர் உதிர்த்துப் போனது சார்புநிலை எதையும் கைக்கொள்ளாத, நிறுவனங்களின் அதிகாரத்தை எதிர்ப்பதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட எட்வர்ட் சையத் என்ற அறுபத்திரெண்டு வயதுக் கலை இலக்கிய விமர்சகரை மட்டும் இல்லை. சதமடித்துக் கொசுறாக இன்னொரு ரன்னும் போட்டு, ஆனாலும் சமூக வாழ்க்கையின் இருண்ட விளிம்புகளிலேயே கடந்த அறுபது ஆண்டுகளைக் கழிக்க வேண்டி வந்த லெனி ரைபென்ஸ்தாலையும் தான்.
Paa.Jayaprakasam sir sent me an invite for a function to felicitate the Australian based Eelam Tamil writer EssPo this Saturday. This is the mail i sent to Paa.Je அன்புள்ள ப.ஜெயபிரகாசம் சார் நலமாக இருக்கிறீர்களா? நான் நல்ம். எஸ்.பொ என்ற முழுக்க முழுக்க சுயநலவாதியை, சுரண்டல்காரரை நீங்கள் அறிய மாட்டீர்கள். அவர் சிட்னியில் இருந்து மறுபடி மறுபடி தொலைபேசி தன் கடைசியாக வெளிவந்த முன்னீடுகள்…
இன்னொரு குதிரை இரா.முருகன் குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான். அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள். வாஸ்து தேவதைகளைத் தெரிந்தவர்களுக்குக்கூட அஸ்து தேவதைகளை அவ்வளவாகத் தெரியாது. இதுகள் சதா வானத்தில் சஞ்சரித்தபடி, யாராவது ‘எழவு விழ’, ‘நாசமாகப் போக’, ‘சனியன் பிடிக்க’ போன்ற அசுபமான பிரயோகங்களை உதிர்த்தால் உடனடியாக ஆமோதிப்பு தீர்மானம் நிறைவேற்றி அந்தப்படிக்கு காரியங்கள் நடக்க வைப்பதையே முழுநேரம் வேலையாகக் கொண்டவை.
தியூப்ளே வீதி – 4 இரா.முருகன் வேகுவேகுவென்று சைக்கிள் மிதித்துக் கொண்டு போனோம். மண்டையைப் பிளக்கும் வெய்யில் நெற்றியில் வியர்வையைப் படர்த்தியது. அது கண்ணை மறைத்து வழிய காலேஜுக்குப் பறக்கும்போதுதான் தங்கு ரிக்ஷாவைப் பார்த்தோம். தங்கு என்ற தங்கசாமியை எல்லோருக்கும் தெரியும். வேலிக்காத்தான் செடிகளுக்கு ஊடாக தனித்துத் தெரியும் தரிசு பீடபூமியான ஆவாரங்காடு பகுதியில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் அவன் சைக்கிள் ரிக்ஷா ஊருக்கே புதுசு.
திங்கட்கிழமை, 7, பிப்ரவரி 2011 (7:30 IST) ஓட்டுக்களை சேகரிப்பது முக்கியம் அல்ல : கமல்ஹாசன் அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் புதிதாக இளைஞர் அமைப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் தொடக்கவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டை மகாராஷ்டிரா நிவாஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு எல்லா மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர்.
மார்கழி நான்காம் நாள் – ஆழி மழைக் கண்ணா பாசுரத்துக்கான தினம். குளிரோடு என் காலம் சென்ற தோழி கவிதாயினி சதாரா மாலதியும் நினைவு வரும் நாள் இது. எங்கள் ‘ராயர் காப்பி கிளப்’ குழுவில் அவர் எழுதிய திருப்பாவை விளக்கக் கட்டுரைகளில் இருந்து. ‘இரா மடம் ஊட்டிய’ மாலதியின் ஆன்மா சாந்தியடையட்டும். இரா.முருகன் ——————————— ஆழி மழைக்கண்ணா….. —————– ‘ஆழிமழைக்கண்ணா’ பாசுரத்தில் படைப்பாளியின் அறியாப்பருவம் இயற்கையாக யதார்த்தமாக வெளிப்படும்.