Excerpt from my novel ‘1975’, being written : “ஸ்வீப்பரம்மா போய் சூடா ரெண்டு டீ மாயளகு கடையிலே வாங்கிட்டு வந்துடுங்க. அப்படியே ஒரு பாக்கெட் பிஸ்கட்டும். சார்ஜஸ் போட்டுத் தரேன்னு சொல்லுங்க”. ஸ்வீப்பரம்மா விளக்குமாறைத் தூக்கியபடி ஒரு வினாடி நின்றார். “இன்னொரு டீ சாருக்கு. நேத்து புதுசா வந்திருக்கார்” என்று அவருடைய புரிந்து கொள்வதற்காகச் சொன்னார் பழநி. “அவரையும் தெரியும்,, அவங்க அப்பனையும் தெரியும், எனக்கு தம்பி முறைதான் இவங்கப்பன். இவனுக்குப் பொறந்து ரெண்டு…
Read more »
Excerpt from the novel ‘1975’ being written “நீங்க வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கப்பட்டவர் இல்லையா?” மதுரை நிருபர் கண்ணாடியைத் துடைத்துப் போட்டபடி கேளு நாயரைக் கேட்டார். நாயர் பலமாகத் தலையசைத்து மறுத்து, ‘ஞான் கொல்லங்கோடு சுதேசி’ என்றார். “அரசின் மக்கள் நலத்துக்கான நடவடிக்கைகள் உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கின்றன என்கிறீர்களா?” கேளு நாயர் முழிக்க, ‘இவங்க வீட்டு கூடத்துலே மோதிலால் நேரு, இந்திராம்மா, அப்புறம் அவங்க அத்தை அவஙக் மாதிரியே ஆம்பளை கிராப் பண்ணியிருப்பாங்களே”, என்று…
Read more »
“ஒரே நாள்லே ரெண்டு செண்டிமீட்டர் வளர்றது தலைமுடி” என்றார். அவர் கண்கள் பயத்தில் வெறித்து ஒரு வினாடி இருந்து சகஜ நிலைக்குத் திரும்பின. “நல்லது தானே” என்றேன் சமாதானமாக. “நிச்சயமா இல்லே. ஒரு நாளுக்கு ரெண்டு செண்டிமீட்டர். ஒரு வாரத்திலே பந்த்ரெண்டு”. பதினாலு இல்லையோ. ஞாயிற்றுக்கிழமை முடி வளராதோ. ஒரு மாசத்துலே ஐம்பது செண்டிமீட்டர் என்றார் அவர். திரும்ப கணக்கு பிசகு. இருந்தாலும் உண்மை. நிலைமையின் பயங்கரம் எனக்கு அப்போது உறைத்தது. இன்னும் ஒரு மாதம் போனால்…
Read more »
1975 – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி. “யூனிட் வண்டி வந்தாச்சு” என்றபடி, குமரேசன் கல்லாவை சாவி போட்டு திறந்து இருந்த பணத்தை பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ”வாங்க, நாம போகலாம், உங்க ஸ்கூட்டர்லே ஒரு அழுத்தல். போயிடாலாம்” என்றார் நிருபர். எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் விளங்கியது. சினிமா படம் எடுக்க ஒரு கோஷ்டி வந்திருக்கிறது. உலகிலேயே முதல் முறையாக ராக்கிப்பட்டியில் வற்றிப்போன ஊருணிக் கரையில் ஐயனார் கோவிலை ஒட்டி…
Read more »
சில வினாடிகளில் அந்த வளர்ப்புத் தேனிக் கூட்டம் முற்றும் விலகி வெளியே பறக்க, கரண்ட் வந்து விட்டது. நாங்கள் மெல்ல முன்னறைக்கு ஜாக்கிரதையாக நகர்ந்து பார்க்க, அங்கே காந்தி படம், நேரு படம், சுபாஷ் படம், ராஜாஜி படம், அப்புறம் பிரதமர் படம் முழுக்கக் கண்ணுக்குத் தெரியவில்லை. அத்தனை தேனீயும் அவர் முகத்தில் தான். கொஞ்சியதோ, கொட்டியதோ, தெரியாது. “ராணித் தேனி ஒய்வு ஒழிச்சலா வெளியே வந்தா அந்தப் படத்துலே தான் எப்பவும் போய் உட்காரும். கூடவே…
Read more »
“ஏன் பேசவே மாட்டேங்கிறே”, வட்டமேஜை மேல் உட்கார்ந்தபடி கேட்டாள் பாருக்குட்டி. தலைமுடியை நெகிழ வாரி, முழங்கால் வரை தொங்கியதை அவள் சுவாதீனமாக முன்னால் அள்ளிப் போட, என் முகத்தில் மூலிகைத் தைலமும், மரிக்கொழுந்தும் வாடிக் கொண்டிருக்கும் கதம்பமும் நெடியைக் கிளப்பி ஒரு வினாடி கண் இருள நள்ளிரவாக்கி விட்டு அவள் தோளில் அமர்ந்தது. இது அழகு ஆக்கிரமிப்பே தான். திட்டமிட்டு நடத்தப்படுவது. யார் திட்டமோ. காலேஜில் இரண்டு வருடம் பின்னால், என் தங்கையோடு படித்தபோது கண்டுகொள்ளவே மாட்டாள்….
Read more »