Archive For The “இது புதுசு” Category
நேமிநாதன் மேடை வைத்த லிங்கத்தை வணங்கினான். இந்த மேடை எதற்கு? அவன் யோசிக்கத் தொடங்கும் முன் இரண்டு பேரில் ஒருத்தனான ஆவிரூபத்தான் வணங்கிச் சொன்னது – ”கெலடி நகர் ஸ்தாபித்தபோது நாங்கள் சவுட கவுடர், பத்ர கவுடர் சீமான்களுக்காக மாடு மேய்த்து வந்தோம். அந்தப் பசுக்கள் எறும்புப் புற்றில் பால் சொரிந்த போது எஜமானர்களிடம் ஓடி வந்து சொன்னோம். அவர்கள் முதலில் எங்கள் வாயில் சொற்களைப் போட்டார்கள். புற்றை அகழ, சிவலிங்கம் தோன்றியதாகச் சொல்லச் சொன்னார்கள். அந்த…
சாகரா பெருநகருக்கு ஐந்து கல் தொலைவில் கெலடி நகரம். நகர வெளிப்பரப்பில் சாரட் வந்து நின்றபோது பிற்பகல் மூன்று மணியாகியிருந்தது. நகரில் புதியதாக வருகிற பயணிகள், வர்த்தகத்தின் பொருட்டு வந்தவர்கள், சுவாமி தரிசனத்துக்கு வந்தவர்கள் என்று பலரையும் ஊர் எல்லையில் நிறுத்தி விசாரித்து தகுதியான நபர் என்று தட்டுப்பட்டாலே உள்ளே போக அனுமதி இலச்சினை வழங்குவதை சீராகச் செய்து கொண்டிருந்தார்கள் அதற்கான ஊழியர்கள். நேமிநாதன் தான் வியாபரத்திற்காக, அதுவும் பவளமும் முத்தும் வாங்க ஜெருஸொப்பாவில் இருந்து வருவதாகச்…
ஹொன்னாவரில் இருந்து ஜெருஸோப்பாவைத் தொடாமல் கோகர்ணம் வழியாக ஐந்து மணி நேரப் பயணம். ’கெலடிக்கு. வரப் போகிறேன்’ என்று வெங்கடப்ப நாயக்கரிடம் முன்கூட்டிச் சொல்லி அனுப்பவில்லை. பயணம் வைத்ததும் அதை உடனே நாயக்கரிடம் சொல்லச் செய்தி கிரகித்து அனுப்பும் ஒற்றர் படை கெலடி அரசருக்கு உண்டு என்பதை அவன் அறிவான். வரப் போகிறேன் என்ற செய்தி அதிகாரம் தொனிக்கும். அல்லது நேரத்தை யாசிக்கிறதாக இருக்கும். ‘புறப்பட்டேன், வந்து சேர்ந்தேன், பேசி முடித்தேன், விரைந்து புறப்பட்டு ஊர் சேர்ந்தேன்,…
மதுரை போற்றுதும் நூல் அறிமுகம் ————————————————– நானும் மதுரைக்காரன் தான். ப்ரோப்பர் மதுரையா என்று கேட்டால் மதுரைக்கு வெறும் 48 கிலோமீட்டர் கிழக்கே சிவகங்கை என்று கூடுதல் தகவல் வரும். நான் 1975 என்ற, எமர்ஜென்சி காலம் பற்றிய என் நாவலில் எழுதினேன் – / இப்போதெல்லாம் ஒரு கைக்குட்டை வாங்கணும் என்றால் கூட பஸ் பிடித்து மதுரை போகிற கூட்டம் ஊரில் கூடிப் போயிருக்கிறது. “மேலமாசி வீதிவரைக்கும் போனேன், கீழ மாரட் ஸ்ட்ரீட்லே மெஸ்ஸுலே சாப்பிட்டேன்”…
ஹொன்னாவர் ரதவீதியில் பரபரப்பு ஏற்படுவதற்கு முன் மாந்தோப்புத் தெரு இல்லத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று நேமிநாதன் தீர்மானம் செய்திருந்தது நிலைகுலைந்து போனதற்கு பாதிராத்திரிக்கு மேலும் விழித்திருக்க வைத்த ரோகிணி காரணம் இல்லை. மாந்தோப்புத் தெருவே மரங்களின் அணிவகுப்புக்கு இடையே இருப்பது. வேம்பும், மலை வேம்பும், நெடுநெடுவென்று நெட்டிலிங்க மரங்களும், அசோகமும், பலா மரங்களுமாக தெருவோரம் வரிசையாக நிற்கும். வீடுகளுக்கு நடுவே ஒன்றிரண்டு மாமரங்கள் தட்டுப்படாமல் இருக்காது. நாள் முழுக்க வெப்பம் தட்டுப்படாமலும் ராத்திரியில் குளிர் மிகுந்தும்…
படுக்கை அறைக்கு ஓரமாக ஜன்னல் வழியே பேய் மிளகுக்கொடி திரும்பவும் உள்ளே நுழைந்து படர ஆரம்பித்திருந்ததை சுபமங்களத்தம்மாள் திகிலோடு பார்த்து, குசினிக்காரனை விளித்து அதை வெட்டியெறியச் சொன்னாள். அவனும் பயப்பட, பைத்யநாத் வைத்தியர் மருந்துப் பெட்டிக்குள் இருந்து பெரிய கத்தரிக்கோலை எடுத்து கொடியை சுபாவமாக நறுக்கித் தள்ளினார். என்ன செய்கிறது இவருக்கு என்று கட்டிலில் சுபமங்களா மேல் முகம் சாய்த்து சயனம் செய்திருந்த பிரபுவுக்கு தன் பிருஷ்டம் இடிபடும் தூரத்தில் நின்று விசாரித்தார் பைத்யநாத். பிரபு நல்ல…