Archive For The “பொது” Category

This is an excerpt from பெரு நாவல் ’மிளகு’ – A morning in Honnavar Agrahara 1606 AD

By |

This is an excerpt from பெரு நாவல் ’மிளகு’ – A morning in Honnavar Agrahara 1606 AD

  ஹொன்னாவர் அக்ரஹாரத்தில் ஆண்கள் யாரும் தட்டுப்படாத காலை நேரம் அது. பிறந்து மருத்துவச்சி கையில் விழுந்த சிசுவுக்கு  காலுக்கு நடுவே குஞ்சாமணி தட்டுப்பட்டால், சுபஸ்ய சீக்கிரம் என்றபடி, கூடிய சீக்கிரம் சுபமுகூர்த்தத்தில் காது குத்தல், நாமகரணம், சோறூண், அப்புறம் பூணூல் கல்யாணம். முப்புரி நூல் அணிந்த பய்யன்கள் வேத அத்தியாயனம் செய்து கொண்டிருக்கும்போதே வாழ்க்கைக்கு அவசியமான மந்திரங்களை ஓதப் பயிற்சியோடு, சடங்குகளை நிறைவேற்றித் தரவும் பயிற்சி அளிக்கப்படுவர். உதாரணமாக காதுகுத்தலையே எடுத்துக் கொள்ளலாம். எளிமையான சடங்கு,…




Read more »

பெருநாவல் மிளகு – wherein the Emperor of Keladi works out the logistics of the business deal to provide tactical and strategic support to usurp the throne

By |

பெருநாவல் மிளகு – wherein the Emperor of Keladi works out the logistics of the business deal to provide tactical and strategic support  to usurp the throne

சரி உடஞ்சாச்சு ஒட்டுமோ ஒட்டாதோ திரும்பி. காலம் தான் பதில் சொல்லணும் கோகர்ணம் கணபதி சொல்லாட்டாலும். அது இருக்கட்டும், உனக்கு அரசாட்சி கைக்கு வர நானும் திம்மப்பனும் ஏன் உதவி செய்யணும் சொல்லு. திம்மப்பன் கிட்டே கேட்டதை ஒரு சௌகரியத்துக்காகத் தனியா நிறுத்திட்டு  என் கிட்டே வந்திருக்கியே உனக்கு உதவி பண்ணனும்னு. செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? நேமிநாதன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். அவன் சொன்னது – நான் விஜயநகரத்துக்கு கப்பம் கட்டறதை நிறுத்தி உங்களுக்கு அந்தத்…




Read more »

பெருநாவல் மிளகு – wherein the emperor of Keladi, Venkatapathy Naicker plays with family sentiment

By |

பெருநாவல் மிளகு – wherein the emperor of Keladi, Venkatapathy Naicker plays with family sentiment

ஆக இந்த கார்டெல் ஜீவனோட இருந்தா இதெல்லாம் நடக்கலாம், நடக்காமல் போகலாம். போர்த்துகல்லுக்கு ஒரு அரசர் இருக்கார். ஒரு அரசவை இருக்கு. அவர்கள் ஒரு கையசைத்தால் கார்டல் இருந்த இடம் தெரியாமல் போயிடலாம். அப்புறம் எதை நம்பி நாம ஆற்றிலே இறங்கறதாம்? யோசிச்சுப் பாரு நேமி. நான் சொல்றது தப்பா? இல்லையென்று தலையாட்டினான் நேமிநாதன். எது சரி என்றுதான் தெரியவில்லை அவனுக்கு. அது இருக்கட்டும். நூறு வருஷமா கார்டெல் வேறே வேறே ரூபங்கள்லே செயல்பட்டு வருது. ஆனா…




Read more »

பெருநாவல் மிளகு – Neminathan barred entry into the Keladi fort without the identification insignia

By |

பெருநாவல் மிளகு – Neminathan barred entry into the Keladi fort without the identification insignia

அவன் உள்ளே வந்தபோது இருந்த பாதுகாவலர்கள் பணி முடிந்து அடுத்த குழு காவலுக்கு வந்திருந்தார்கள். நேமிநாதனை இலச்சினை இல்லாமல் உள்ளே விடமுடியாது என்று சொல்லி விட்டார்கள் அவர்கள். தான் யார் என்பதை ஒரு தடவைக்கு நான்கு தடவை சொல்லிவிட்டான் நேமிநாதன். எனினும் இலச்சினை இல்லாமல் உள்ளே போக முடியாது என்று பிரவேசிக்க முடியாமல் நிறுத்தி விட்டார்கள். இரும்புக் கம்பிக் கதவுகள் ஊடே பார்க்க, நேமிநாதனின் ரதம் கதவுக்கு சற்றுத் தொலைவில் நிறுத்தியிருக்க, குதிரைகளை அகற்றி நிறுத்திவிட்டு ரதசாரதி…




Read more »

பெருநாவல் மிளகு – Street Scenes in the town of Keladi and the artful streetwalkers

By |

பெருநாவல் மிளகு – Street Scenes in the town of Keladi and the artful streetwalkers

மெல்ல நடந்தான் நேமிநாதன். கெலடி வீதிகள் நடக்க நடக்க கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தாலும் ஹொன்னாவர் வீதிகள் போல் விசாலமானவைகளாக இல்லாத காரணத்தால் தோளோடு தோள் இடிக்க நடக்க வேண்டி இருந்தது. இரண்டு கடைகளுக்கு ஒன்று மதுசாலையானதால் தெருவில் கள்ளு மாந்தி போதம் கெட்டுத் திரிகிறவர்கள் அதிகமாக இருந்தனர். சும்மா அலையாமல் போகிறவன் வருகிறவனை வம்பிழுத்துக் கொண்டு நடமாடும் அவர்களைத் தவிர்த்து நடந்தான் நேமிநாதன். நான்கு மதுக்கடைகளும் சூதாட்ட விடுதிகளும் இருந்த தெருவில் நெரிசலுக்கு நடுவே யாரோ நேமிநாதனின்…




Read more »

பெருநாவல் மிளகு – Neminathan attempts Keladi town entry incognito

By |

பெருநாவல் மிளகு – Neminathan attempts  Keladi town entry incognito

சாகரா பெருநகருக்கு ஐந்து கல் தொலைவில் கெலடி நகரம். நகர வெளிப்பரப்பில் சாரட் வந்து நின்றபோது பிற்பகல் மூன்று மணியாகியிருந்தது.  நகரில் புதியதாக வருகிற பயணிகள், வர்த்தகத்தின் பொருட்டு வந்தவர்கள், சுவாமி தரிசனத்துக்கு வந்தவர்கள் என்று பலரையும் ஊர் எல்லையில் நிறுத்தி விசாரித்து தகுதியான நபர் என்று தட்டுப்பட்டாலே உள்ளே போக அனுமதி இலச்சினை வழங்குவதை சீராகச் செய்து கொண்டிருந்தார்கள் அதற்கான ஊழியர்கள். நேமிநாதன் தான் வியாபரத்திற்காக, அதுவும்  பவளமும் முத்தும் வாங்க ஜெருஸொப்பாவில் இருந்து வருவதாகச்…




Read more »