Archive For The “பொது” Category
அந்திமழை ஜனவரி 2022 இதழில் பிரசுரமானது நாவலுக்குப் பின்னால் – அரசூர் வம்சம் இரா.முருகன் எண்பதுகளின் தொடக்கத்தில் இலக்கியப் பத்திரிகைகளில் புதுக் கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் எண்பதுகளின் இறுதியில் வெகுஜனப் பத்திரிகைகளில் சிறுகதை எழுதத் தொடங்கியதற்கு தில்லியில் இருந்து சென்னைக்கு உத்தியோக மாற்றலாகி வந்ததுதான் முக்கியக் காரணம். தில்லியைப் போல் வார இறுதியில் கூடி இருந்து பியர் குடிக்க முடியாத சென்னையில் அப்போது ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திர பொழுது போக்கு, அரசாங்க சானலில் வந்த…
An excerpt from my forthcoming novel MILAGU எனக்கு அவசர அவசரமாகக் காலில் கட்டுப் போட்டு விட்டு மருத்துவச் செக்கன் என்னமோ அவனை தனியாக வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தமாதிரி விழுந்தடித்துக்கொண்டு ஓடினது மட்டுமில்லாமல் நீயும் வா என்று என்னையும் நிர்பந்தித்தான். ஐந்து நிமிடம் முன்னால் தான் ஆழப் பதிந்த கத்தி கிழித்து ரத்தம் பெருகிய காலை எடுத்து வைத்து நான் எப்படி ஓடுவது? நடக்கிறது நடக்கட்டும் என்று நான் பொட்டலுக்குப் போகாமல் கூடாரத்திலேயே ஒரு…
மிளகு நாவலில் இருந்து இரு சிறு பகுதிகள் சென்னா ஒற்றர் அணி கொண்டுவந்த தகவலை முன்பைவிட நிதானமாக அறிவித்தாள். ஆச்சர்யம் விலகாமல் கையிரண்டையும் உயர்த்தி, இது அதிசயமானது என்று பொருள் தர பெத்ரோ நின்று நடனக் கலைஞன் போல் அபிநயிக்க, சென்னபைரதேவி இருந்தபடியே குறுநகையோடு, அதேபோல் அபிநயித்தாள். அவளுடைய ஊன்றுகோல் தரையில் ஓசையெழுப்பி விழுந்தது. பெத்ரோ அமர்ந்து சொன்னார் – சரி அம்மா! நான் உங்கள் அனுமதியோடு கோழிக்கோடு செல்லப் போகிறேன். அங்கிருந்து என்னை இயங்கச் சொல்லி…
An excerpt from my forthcoming novel MILAGU கோட்டை மதிலின் உள்சுவர் தெப்பக்குளத்துக்கு அருகே வளைந்து திரும்பும் இடத்தில் தரையில் வெண்துணி பரப்பி காயமடைந்த வீரர்கள் நால்வர் படுத்திருக்க முழங்காலில் மூலிகைப் பற்று தன்மையான வெப்பத்தில் பூசப்பட அவர்கள் வலியில் துடிக்கும் ஒலியைக் கடந்து ஊர்ந்தது கோச். லாகவமாக கோச் குதிரைகளை சற்றே மேடாக வளைந்து திரும்பும் பாதையில் செலுத்தி கோட்டை அலுவலகத்துக்கு முன் வண்டியை நிறுத்தி உள்ளே நுழையப் போகும்போதுதான் அவருக்கு நினைவு வந்தது…
An excerpt from my forthcoming novel MILAGU ஆக உங்கள் காதலும் காமமும் நான் உங்கள் மேல் வைத்த காதலும் அரசாங்க விஷயங்கள். பெத்ரோ ஒரு சிரிப்போடு கேட்டார் – அது அரசாங்க விஷயமாகவே இருக்கட்டும் என் கண்ணின் கண்ணே. உனக்கு என்னை பிடித்து வந்தாயா அரசாங்க கட்டாயத்தின் பேரில் என்னோடு ஒட்டிக் கொண்டு பழகினாயா என் இதயமே? கஸாண்ட்ரா அவர் தோள்களில் மாலையாகத் தன் வளையணிந்த வனப்பான கரங்களை இட்டு வளைத்தாள். அவள் உதடு…
an excerpt from my forthcoming novel MILAGU இரவெல்லாம் கண் விழித்து இரு கோச் வண்டிகள் மாற்றி காலை ஒன்பது மணிக்கு அவர் மாளிகைக்கு வந்து சேர கதவு எல்லாம் அடைத்துச் சார்த்தி வைத்திருந்தது. மனைவி மரியா, குழந்தைகள் மற்றும் கஸாண்ட்ராவைக் காணவில்லை. அவர் வசம் மாளிகைத் திறவுகோல் இல்லாத காரணத்தால் வாசலில் நின்று காத்திருக்க, எதிரே முட்டை வணிகம் செய்யும் கிருஷ்ணப்பா, அவர்கள் இன்று ஞாயிறென்பதால் தேவாலயம் போயிருப்பதாகத் தெரிவித்தான். ஞாயிற்றுக்கிழமை பரமபிதா அண்ட…