Archive For The “பொது” Category
முத்தம்மா டீச்சர் அடிக்கக் கை ஓங்கினாள் செல்லமாக. ‘இதைச் சொல்லத்தான் வந்தீங்களா?’ முத்தம்மா சோப்புத் துண்டை வயிற்றோடு அமுக்கிப் பிடித்துக் கொண்டாள். ‘அதில்லே.. ஞாயித்துக்கிழமையாச்சே.. கவிச்சி ஏதும் சமைக்கலியா?’ மாப்புள்ளைக்குக் கவிச்சி ரொம்ப இஷ்டம். அதுவும் மட்டன் கவாபு. ‘கவிச்சியா? சமைச்சா என்ன கொடுப்பீங்க?’ பின்னாலிருந்து தழுவ வருகிற கைகள்.. கண்ணாடியில் நீராவி படிந்து உடம்பு தெரிய மாட்டேன் என்கிறது. ‘சாயந்திரம் படத்துக்கு கூட்டிட்டுப் போறேன்.. உனக்குப்…
முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன் அத்தியாயம் 3 முத்தம்மா டீச்சர் வென்னீரை எடுத்து வைத்துக் குளியலறைக் கதவைச் சாத்திக் கொண்டபோது அங்கே ராசாத்தி வீட்டுக்காரர் மாப்பிள்ளை ராஜு… ஆலங்குச்சியால் பல் விளக்கிக் கொண்டு .. காறிக் காறி உமிழ்ந்து கொண்டு.. குறக்களி காட்டுகிறது மனது. பின்னால் வந்து புஜத்தைப் பற்றும் கைகள் நாற்பது வருஷம் முந்திய வலுவோடு ‘முத்தம்மா.. முத்துன்னு கூப்பிடணும் இல்லே.. என்ன…
தெரசாள் வீட்டில் மாட்டை விற்றதும் மெழுகுதிரிக் கம்பெனி தொடங்கியதும் முத்தம்மா பிறக்க முந்தி என்றாலும் அம்மா இன்னும் சொல்வதை நிறுத்தவில்லை. என்றாலும் தெரசா வீட்டில் முத்தம்மா சர்வ சாதாரணமாக வளைய வருவாள். தெரசாளும் இங்கேயேதான் எப்போதும்… சதா வடிகிற மூக்கைப் புறங்கையில் துடைத்துக் கொண்டு அழுக்கு கவுனோடு அவள் தங்கை எலிசபெத்தும்.. ராசாத்திக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகிறதென்று வீட்டில் பேசிக் கொண்டார்கள். ஈர்க்குச்சி உடம்பில் சீட்டிப் பாவாடையும், பச்சைத் தாவணியுமாக வளைய வருகிற…
முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் – அத்தியாயம் 2 தெரசாள், முத்தம்மா, அழகு மீனா, ராசாத்தி, சாந்தா, போதும்பொண்ணு, செல்வி.. ஒரு கூட்டமே தரை டிக்கெட்டில். ராசாத்தியின் அவ்வா அலமேலம்மாக் கிழவி புகையிலைக் கட்டையை வாயில் அடக்கிக் கொண்டு தடுப்புச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். தடுப்புக்கு அந்தப் பக்கம் களவாணிப் பயல்கள். சினிமா கொட்டகைக்கு வருவதே குட்டிகளைப் பக்கத்தில் வைத்துப் பார்க்கத்தான். சமயம் கிடைத்தால் உரசியும் பார்ப்பார்கள்….
நிக்கோலா பெனடிட்டி எடின்பரோ அஷர் ஹால் வாசல். ஒரு கோடை கால சாயந்திரத்தில் நண்பர் ஆண்டோவும் நானும் க்யூவில் நிற்கிறோம். ஆண்டோ இத்தாலியர். முழுப்பெயர் அண்டோனியோனி. புதுக் கவிஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய பெயர் என்றாலும் சுருக்கி உச்சரிக்க சிரமப்பட்டதால் எனக்கு ஆண்டோ ஆனார். ‘நிக்கோலா பெனடிட்டின்னு ஸ்காட்டிஷ் பொண்ணு. இத்தாலிய வம்சாவளி. அற்புதமா வயலின் வாசிக்கிறா. கிளாசிக்கல் வெஸ்டர்ன். உனக்குப் பிடிக்குமே, வா, போகலாம்’. ஆண்டோ வற்புறுத்தவே எடின்பரோ கோட்டை பக்கம் விளிம்பு நாடக விழாவில்…
ராமச்சந்திரன் ஸ்டேஷன் மாஸ்டரைக் கவனித்துப் பார்த்தான். ‘சரவணா.. சாரிடா.. வெரி சாரி.. இனிமே கவனிச்சு சரியா வரையறேண்டா.. நாளைக்கு வந்து நிச்சயம் வரஞ்சு தரேன். இன்னிக்கு ரயில் ஓடாதாம்.. வர முடியலே.. மன்னிச்சுக்கோ..’ ‘நீ தப்பு ஏதும் பண்ணலேடா.. எதுக்காக வருத்தப் படறே.. நான் தாண்டா தப்புப் பண்ணிட்டேன். உன் பங்குக்கு எடுத்து வச்ச பணத்திலே அப்பா கருமாதி காரியம் எல்லாம் நடத்தினேன். இதுவும் பொய் தாண்டா. நான், இவ கேட்டாளேன்னு ரெட்டை…