Archive For The “பொது” Category
அன்பு நண்பர்களே இந்த வாரம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியான விஸ்வரூபம் நாவல் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். பதிப்பாளர்களான கிழக்கு பதிப்பகத்தோடு சேர்ந்து ஒரு நூல் அறிமுக விழா பிப்ரவரியில் நடத்த திட்டம் உண்டு. அதோடு கூட பிப்ரவரி 17 அல்லது 24 தேதி மாலை சென்னை கடற்கரையில் ஒரு சந்திப்பு வைத்துக் கொள்ளலாமா? நண்பர்கள் நாவலைப் படித்து உரையாட கிட்டத்தட்ட 4 வாரங்கள் நேரம் கிடைக்கும். உங்கள் பின்னூட்டங்களின் அடிப்படையில்…
கர்னாடகா மனம் இரங்காததால் காவிரி நீர் இல்லை. மழையும் பொய்த்துக் கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா விவசாயிகள் மூன்று போகம் சாகுபடி செய்த நிலை போய் ஒரு போகம் – குறுவை சாகுபடியோடு, அதையும் நிச்சயமில்லாத விளைவுகளை எதிர்பார்த்து நிறுத்த வேண்டிய நிலை. ஏக்கருக்கு ஐந்து அல்லது ஆறாயிரம் ரூபாய் நெல் விற்ற கணக்கில் கிடைக்கும் லாபம் எல்லாம் பணத்தில் சேர்த்தியா? தமிழக விவசாயி அவமானப்படுத்தப்பட்டு நிற்கும் நேரத்தில் வீட்டுமனை வியாபாரிகள் ஆசை காட்டி விளைநிலங்களை அவர்களிடமிருந்து வாங்குகிறார்கள்….
ஜன சமுத்திரத்தில் நீந்தி, (காரை வாசலிலேயே அனுப்பி விட்டதால்) கல்பகோடி காலம் நடந்து புத்தகக் கண்காட்சியில் அறுபத்து மூவர் உற்சவத்தில் மாட்டிக்கொண்ட சம்சாரி போல சுற்றி வந்தேன். 1) க்ளோஸ்ட்ரோபோபியா உள்ளவர்கள் அவசியம் தவிர்க்க வேண்டிய தலம் இந்த ஒய்.எம்.சி.ஏ கண்காட்சி. 2) பரபரப்பான ஸ்டால்களில் பில் போட்டுக் கொண்டிருந்த பையன்கள் ரொம்பக் கஷ்டப்படுகிறார்கள். கஸ்டமர்கள் வேறே கார்டை கெத்தாக நீட்டி.. தேய்த்துத் தேய்ந்து விரலே தேய்ந்து விடும். டிஸ்கவுண்ட் தப்பு என்று சண்டை போடுகிறவர்கள் அவ்வப்போது…
இன்று (15.1.2013 – செவ்வாய்கிழமை) மாலை நான்கு மணியில் இருந்து கிழக்கு பதிப்பகம் அரங்கில் இருப்பேன். நண்பர்களைச் சந்திக்க விருப்பம் இன்று (15.1.2013 – செவ்வாய்கிழமை) மாலை நான்கு மணியில் இருந்து கிழக்கு பதிப்பகம் அரங்கில் இருப்பேன். நண்பர்களைச் சந்திக்க விருப்பம்
விஸ்வரூபம் நாவல் பிரதிகள் நேற்று வந்து விட்டன. மும்பையில் அச்சானவை. நேற்று கூரியர் நிறுவனம் பொங்கல் விடுமுறை என்பதால் கிழக்கு ஸ்டாலுக்கு வந்து சேர தாமதம்.. இன்று வந்து விடும் என்கிறார் பத்ரி. பேஷாக வரட்டும். புத்தகம் மின்னஞ்சல் மூலம் பெற https://www.nhm.in/shop/978-81-8493-749-7.html *************** காலை ஐந்தே முக்காலுக்கு பணிக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் காலை நடை இல்லை. இன்னும் நாலு நாள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ”வேலை பார்த்ததெல்லாம் போதாதா, இருக்கறதே எதேஷ்டம்.. ரிடையர் ஆகி,…
PVR sir கன்னட ரவா உப்புமா நேசத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் சற்று முன் – விஸ்வரூபம் நாவலில் இருந்து – ஏப்ரல் 14 1899 விகாரி வருடம் சித்திரை 2 திங்கள்கிழமை குளித்துவிட்டு தலையைத் துவட்டியபடி தரையில் வந்து உட்கார்ந்தான் வேதையன். அண்ணாவுக்கு இலையைப் போட்டு பரசேஷணம் செய்ய ஜலம் எடுத்து வையடா. துளு பிராமணன் உக்கிராணத்தைப் பார்த்து உரக்கச் சொல்லிவிட்டு உடனடியாகத் திருத்திக்கொண்டான். இலையைப் போட்டு சூடா ரெண்டு கரண்டி உப்பிட்டு விளம்பு. ரவா கேசரியும்…