Archive For The “பொது” Category
’விஸ்வரூபம்’ நாவல் பற்றி இந்திரா பார்த்தசாரதி சார் பகிர்ந்து கொண்டது – I immensely liked the novel. I have sent my views by attachment. EPaa Apr 3 2013 மேலைய நாட்டுக் கோட்பாட்டின்படி,சரித்திரம் நேர்க் கோட்டில் செல்லும். நேர்க்கோடு என்பதே கற்பனை. அதனால்தான், BCE, ACE என்று வரையறுத்துக் கொண்டு மேல்நாடுகளில் வரலாறு எழுதப்படுகின்றது இன்றுவரை.(அதாவது ACE 2013 வரை). ஆனால் நம் நாட்டில் சரித்திரம் நேர்க்கோட்டில் முடிவெ இல்லாமல் போய்க்கொண்டே…
காய்த்ரி வெங்கட்ராகவனின் குரலும் எப்போதும் சிரித்த முகமும் மனதுக்கு இதமானவை. தம்பி ஈரோடு நாகராஜ் பக்க வாத்தியம் வேறே. நேற்று மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம் இவர்கள் கச்சேரியால் களை கட்டியது. வாசலில் ஆர்ய கௌடா வீதியில் ஒரு செகண்டுக்கு ஒரு மாநகராட்சி பஸ்ஸும், பதினேழரை ஆட்டோ, பத்து மோட்டார் பைக், ஏழு கார் என்று இரண்டு திசையிலும் ஊர்ந்து கொண்டிருக்க, இரண்டரை மணி நேரக் கச்சேரியின் போது யாருமே ஹாரன் அடிக்கவில்லை…
சாவடி என்றொரு மேடை நாடகம். கொத்தவால் சாவடி தான் களம். காலம்? 1914 செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமைக்கு இரண்டு நாள் சென்று. அந்தத் தேதியின் விசேஷம்? முதல் உலகப் போர் நேரம் அது. ஜெர்மனியக் கப்பல் எம்டன் சென்னைத் துறைமுகத்துக்கு அருகே வந்து குண்டு வீசித் தாக்கிய இரவு. முதல் பிரதியில் சில மாற்றங்கள் செய்ய உட்கார்ந்தால் நாடகம் இன்னும் வளர்ந்து நிற்கிறது! சரி அப்படியே இருக்கக் கடவது. அதற்கு ஒரு தாற்காலிக முற்றும் போட்டு ‘சில்லு’…
செந்தில் என்ற செந்தில்நாதன் எங்க ஆபீஸ் பையர். நால்பத்தஞ்சு வயசு கடந்தும் இன்னும் office boy தான். அதிலும் சகல் விதமான காகிதத்தையும் விழுங்கி, சீவல் பேப்பர் தயாரிக்கிற டாக்குமெண்ட் ஷ்ரெட்டர், போட்டோ காப்பியர்-பிரிண்டர் போன்ற மின்னணு சாதனங்களை இயக்க இன்னும் அவரை யாரும் ஏவுவதில்லை. ‘பாவம் அதெல்லாம் தெரியாது’ மனுஷன். எல்லா டேபிளிலும் தண்ணீர் பாட்டில் வைக்கிற காரியத்தை மனமுவந்து செய்வார் தினம் தினம். ஆபீஸ் கஃபேட்ரியாவில் நான் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது செந்திலும் மற்ற…
நாரதர் தும்புரு மீட்டிட நேரெதிர் சேருமோர் நாதம் வயலினில் – யாரவர் ஆலமர் ஆண்டவன் அம்மைக்குச் சொல்லுவான் லால்குடி வந்தாச்சு பார். இரா.முருகன் “பயணம் புரிந்தது பாரத ரத்னம் அயனரன் மாலுக்(கு ) அருகே -வயலினை வாசிக்க லால்குடி விண்ணுக்கு போனதோ! பூசிக்கும் தெய்வமானார் பார்”…. கிரேசி மோகன்…. How can one forget his Brova Barama and the ‘pori parakkum’ thillaanaas? As one living in the adjacent RAmanathan Street,…
அரசூர் சுவாரசியமான கிராமம். எங்கள் குலதெய்வம் ஐயனார். பூசாரியார் வேளார். கோவில் மேற்பார்வையாளராக இருந்தவர் (காலம் சென்ற) கிராம கர்ணம் ராஜம் அய்யங்கார். அய்யங்காரை நான் சிறு வயதில் அரசூர் சென்றபோது பார்த்திருக்கிறேன். கெச்சலான, கொஞ்சம் கீச்சுக் கீச்சுக் குரலோடு எகிறி எகிறி நடக்கிற சிவப்புத் தலைமுடிக்காரர். (என் மனதில் என்னமோ அப்படித்தான் பதிவாகி இருக்கிறது). அய்யங்கார் வீடு சிதிலமாகி இருக்கிறது. அவருடைய மகன் ஏசுதாஸ் தரங்கிணி குழுவில் இருந்ததாக அய்யங்கார் சொல்லிய நினைவு. சென்னையோடு போயிருக்கலாம்….