Archive For The “பொது” Category
Watched Leslee Udwin’s India’s Daughter made for BBC. More than the culprit and the perpetrator of the heinous crime mentioning nonchalantly he raped Nirbhaya to teach her a lesson about staying out late at night, it is the learned defence counsel solemnly declaring that women have no place in Indian culture leaves one deeply disturbed….
தழுவிப் பிணைந்து சிக்கலாகச் சுருண்டிருந்த பழைய தில்லித் தெருக்களின் பின்னலில் வைத்தாஸ் சிக்கிக் கொண்டான். இந்தக் குறுகலான தெரு தான். நாலு நாள் முன்னால் இங்கே தான் வந்திருந்தான். வரிசையான இந்தச் சாப்பாட்டுக் கடைகள் தான். கோதுமை மாவை வெண்ணெயும் நெய்யும் சேர்த்துப் பிசைந்து கொண்டிருக்கும் திடகாத்திரமான மீசைக்காரன் அவனை இதே போல் தான் சாப்பிட வரச்சொல்லித் தலையை அசைத்துக் கூப்பிட்டான். திரும்பும்போது வரேன். வைத்தாஸ் ஆங்கிலத்தில் சொன்னபடி அந்தக் கடையின் இடது புறமாக நெளிகிற சந்துக்குள்…
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பத்தொன்பது இரா.முருகன் வைத்தாஸ் எழுந்து அரை மணி நேரமாகிறது. இப்போது காலை ஆறு மணி. டிசம்பர் மூடுபனியில் குளிரக் குளிர நனைந்து கொண்டிருக்கும் தில்லி மாநகரம். ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் அந்தப் பனி வராது. வைத்தாஸ் தான் அதைத் தேடிப் போய்ப் பார்க்க வேண்டும். அவன் போகக் கிளம்பினான் தான். அதற்குள் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் ஒன்று இரண்டாக அவன் அறைக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். அரை மணி நேரம் முன்னால் வந்த பருமனான…
கண்பத், சர்வலோக் கேலே? ஹோகா. எல்லோரும் போயாச்சு அணி, ஜண்டா வண்டா சக்ளா? லேவுண் கேலே. கொடியெல்லாம் எடுத்துப் போயிட்டாங்க. திலீப் சாங்க்லி பகுதி விவசாயிகளின் பேச்சு மொழியில் கண்பத் மோதகிடம் விசாரித்துக் கொண்டிருந்தான். அவன் இந்தக் கூட்டத்தைப் பொறுத்த வரை, பம்பாய் மாநகரத்துக்கு வேலை தேடி வந்தவன். கிராமத்தில் கரும்பு பயிரிட்டுப் பயிரும் ஜீவிதமும் கரிந்து போன விவசாயியின் பிள்ளை. எந்த வேலை, எவ்வளவு கூலி என்றாலும் அவனுக்கு சம்மதமே. சாப்பாட்டுக் கடையில் போய்ச் சத்தம்…
கமல் ஹாசன்: திருவனந்தபுரம் நகரத்தைப் பற்றிய பள்ளிகொண்டபுரம் முக்கியமான பதிவு. நீங்க நடந்து போன பாதையைப் பற்றியது .. நீல.பத்மநாபன்: இப்படி அந்த மூலை முடுக்குகள் அங்கே இங்கேல்லாம் மனதில் நடந்து இந்த ஊரைப் பற்றிப் பதிவு செய்யணும்னு நினைச்சேன்.. இன்னொண்ணு காலப் பிரக்ஞை. …. திணை கோட்பாடு எல்லாம் அப்புறம் தான் படிக்கறேன்.. தொடங்கின காலத்திலே இருந்தே காலமும் வெளியும் ரொம்பவும் உறுத்தக்க் கூட்டிய விஷயம்… இப்பக்கூட நினைக்கிறேன்.. இப்ப பேசுறபோது காலம் ஆகிக்கிட்டு இருக்கு..ஒரு…
மீனாக இரா. முருகன் மலர் காலை ஐந்து ஐமபத்தைந்துக்கு இரண்டு உறுதிமொழிகளை எடுத்திருந்தாள். அவற்றில் ஒன்றைப் பத்து நிமிஷம் முன்னால் மீறினாள். ‘காலையிலே எழுந்தா குளிப்போம், சாப்பிடுவோம், ஆபீஸ் போவோம்னு கிடையாதா. எப்பப் பாரு மீனைக் கொஞ்சிக்கிட்டு உக்கார வேண்டியது’. ‘இன்னிக்கு கேஷுவல் லீவ். எடுக்கலேன்னா வேஸ்டாப் போகுது’. பிஜோ சிரித்ததைப் பார்க்க அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ஹாய்யாக மீன் தொட்டியில் கையை நனைத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறவன் சின்னச் சிணுங்கலாக அவ்வப்போது முனகுகிறான்….