Archive For The “பொது” Category

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 32 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே                     அத்தியாயம் 32            இரா.முருகன்

எமிலி ஆந்த்ரோசா அழ ஆரம்பித்தாள். குளிர்ச்சியான அறை. நடுவிலே, மிக உயரமான கட்டில். அதில் தான் அவள் படுத்திருக்கிறாள். பழைய கட்டிலை அகற்றி விட்டு இந்தக் கட்டிலை அறையில் சேர்த்தார்கள். இரவு சிறு ஏணியைக் கட்டிலில் சார்த்தி வைத்துத்தான் அவளைக் கட்டிலில் ஏறிப் படுக்கச் செய்தார்கள். இவ்வளவு உயரமாக இருந்தால் நடுராத்திரி நான் மூத்திரம் போக எப்படி இறங்குவது? குளிர் அதிகம் என்பதால் அடிக்கடி போக வேண்டியிருக்கு. என்ன செய்யணும் நான்? எமிலி கேட்டபோது ராணுவ அதிகாரிகள்…




Read more »

New: பாண்டி பஜார் பாலாஜி பவன் காப்பி மகிமை – அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இரா.முருகன்

By |

New:  பாண்டி பஜார் பாலாஜி பவன் காப்பி மகிமை  – அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   இரா.முருகன்

சென்னை தி.நகர் சௌந்தரபாண்டியனார் அங்காடி (பாண்டி பஜார்) பாலாஜி பவன் காப்பியும் குறுங்காப்பியும் (மினி காப்பி) பருகாதார் சன்மமெடுத்தென்! இக்குழம்பியின் மாண்பு பாராட்டி யானின்றியற்றிய அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இஃது மாலும் ஆழி விட்டிறங்கி மாசில் பாண்டி கடைத்தெருவில் காலை பனகல் பார்க்கருகே கருடன் ஒயிலாய் நிறுத்திடுவான் ஆலா லவிடம் ஒத்திவைத்து ஆறு மணிக்குக் கடைவாசல் நீல கண்டன் காத்திருப்பான் பாலா ஜிபவன் காப்பிக்கே.. (மா மா காய் மா மா காய் இது என்…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 31 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 31                       இரா.முருகன்

ராத்திரி ஏழரை மணிக்கு நகரம் உறங்கப் போயிருந்தது. எண் எழுதிய கதவுப் பலகைகளைச் சரியாக எடுத்து வைத்துக் கடைகளை அடைக்கும் வேலை தெருவெங்கும் மும்முரமாக நடக்க, வீதிக் கோடி நூலகத்தின் அறைகள் ஒவ்வொன்றாக இருள் அணிந்தன. தொடர்ந்து நூலகத்தின், மணிகள் அலங்கரிக்கும் பெரிய வாசல் கதவுகளும் அடைபட்டுக் கொண்டிருக்க, ஓரத்துப் படிகள் வழியே இறங்கிய கடைசி இரண்டு பேர் நடாஷாவும் திலீபும் தான். ஆறரை மணிக்கு அடச்சுடுவோம். புரட்சியை நிகழ்த்திக் காட்டிய சித்தாந்தம் ஜெயிச்சு உலகை ஆளும்…




Read more »

New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 30 இரா.முருகன்

By |

New Novel:  வாழ்ந்து போதீரே     அத்தியாயம்  30     இரா.முருகன்

நாலு நாள் இனி ஆபீஸ் அடச்சுப் பூட்டி இருக்கும். நீ வழக்கம் போல் இங்கே தங்கிக்க தடை ஒண்ணும் இல்லே. கல்கத்தா குக்கல் குரைத்தான். குக்கல் என்றால் நாய் என்று அப்பா சொன்னது திலீப் நினைவில் உண்டு. அந்த நாய் பிஸ்கட் கம்பெனி ரிடையர்ட் முடி பிடுங்கி நாய் ஜெனரல் மேனேஜர் சாஸ்திரி இப்படிச் சொன்னது நேற்று சாயந்திரம். திலீப் மறு பேச்சு பேசும் முன்னால், அடுத்த கட்டளையையும் வந்து விழுந்தது. நடாஷா வாசிலிவிஸ்கி இங்கே பிரிண்டிங்…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 29 இரா.முருகன்

By |

New Novel :  வாழ்ந்து போதீரே      –  அத்தியாயம்  29                   இரா.முருகன்

எல்லாம், மழை வலுத்து வரும் காயலில் இருந்து படகு திரும்பத் துறைக்கு வந்ததோடு தொடங்கியது. இருண்டு ஆர்பரிக்கும் கடல். அது தொட்டு விடும் தூரத்தில் என்றாலும் படகை எல்லாத் திசையிலும் சுழல வைக்கும் நீர்ப் பெருக்கும், மழையோடு கலந்த காற்றுப் பெருக்கும் கடலோடு செல்லாமல் திரும்பச் சொல்லி வற்புறுத்த, படகுத் துறைக்குத் திரும்பியபோது சங்கரனுக்கும் தெரிசாவுக்கும் பகல் நேர வயிற்றுப் பசியாக இந்தப் பொழுது தலையெடுத்தது. புறப்பட்டுப் போன மற்றப் படகுகள் அருகே தீவில் ஒதுங்கியிருப்பதாகவும், அவை…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 28 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே            அத்தியாயம்  28                இரா.முருகன்

நாட்டுப்புறக் கலை, கலாச்சார விழாவும் மாநாடும் எல்லோர் மீதும் பரிபூர்ணமாகக் கவிந்திருந்தது. ஆட்டக் கலைஞர்கள் மட்டுமில்லாமல் பிரதிநிதிகளும் கூட, நடக்கும் போதோ, இருந்து பேசும்போதோ அதே நினைவாக இருந்தார்கள். அவர்கள் கை கால் அசைவிலும், கண் அசைவிலும் அவ்வப்போது நளினம் தெறித்துக் காட்சி வைப்பது தன்னிச்சையாக நிகழ்ந்தது. நாலு நாள் கொண்டாட்டம் இன்றைக்கு முடிவடைகிறது. மூன்று நாளிலேயே முடியும் விஷயத்தை வலிந்து நாலு ஆக்கிய சர்க்கார் உத்யோகஸ்தர்கள், நடத்த நிகழ்ச்சி இல்லாமல், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு என்ன வேடிக்கை…




Read more »