Archive For பிப்ரவரி 8, 2025
> நூறு வருடப் புத்தகம் அடுக்கி நீளநெடுக மர அலமாரிகள்; இருந்து படிக்கக் கால்கள் உடைந்த இருக்கைகளோடு நூலகம் கிடக்கும். சின்னப் பையன்கள் வருவது பார்த்து அரபு இரவுகள் ஆயிரமும் அவசரமாய் மேல்தட்டேறி ஒளிந்து கொள்ளும் ஏற முடியாத கடைசி ஒண்ணு பொலபொலவென்று பேப்பராய் உதிரும். அநுத்தமாவும் ராஜம் கிருஷ்ணனும் லஷ்மியும் குகப்ரியையும் கிருத்திகாவும் கு.ப.சேது அம்மாளும் குமுதினியும் சூடாமணியும் வைத்த அலமாரியில் வல்லிக்கண்ணனும். அடிக்கடி தரையில் விழுந்திட நூலகர் வல்லிக்கண்ணனை வாசல் அலமாரிக்கு மாற்றி வைத்தார்….
1970- களில் பதின்ம வயதிலிருந்தபோது எங்களூர் அமுதா டூரிங்க் டாக்கீஸில் விட்டலாசார்யா படம் பார்த்த நினைவுகளில்… —————————————————————– உள்நாடு வெளிநாடு ஒவ்வொரு பயணம் போய்த் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் டூரிங் தியேட்டர் ஊரில்தான் இருந்தது நாம்தான் டூரிங் அது இல்லையாம். வைகைக் கரைமண் எந்தக் காலத்திலோ பரத்தி வைத்த மணல்வெளி பீடி சிகரெட் தீக்குச்சி சிக்கெடுத்த தலைமுடி கலந்து தரை டிக்கெட் ஆச்சு. தண்ணீர்த் தொட்டியில் இட்டால் மிதக்கும் இருபதுபைசா நாணயம் ஒன்றும் பத்துக் காசும் சேர்த்துக்…
சின்னச் சின்ன சந்தோஷங்களில் இதுவும் உண்டெனக்கு – பழைய தீபாவளி மலர்களை பக்கம் பக்கமாய்ப் புரட்டுவது காகிதப் புத்தகம் கிடைப்பது அரிது டிஜிட்டல் இதழ்களே நமக்கு விதித்தது, நாற்பதுகளின் புத்தகம் கிட்டினால் காலயந்திரம் கிடைத்த மகிழ்ச்சி; நானில்லா பழையதோர் ஆண்டுக்கு ஓசையின்றி சென்று வரலாம். எல்லா தெய்வமும் வந்திருந்து பஞ்சவர்ணமும் தேசலாய்ப் பூசி நிற்பர் சாய்ந்து முன்னட்டையில் இன்னும் யாரும் அமரவில்லை. பாகவதர் ஹரிதாஸ் வருதென்றும் சின்னப்பா ஜெகதலப்ரதாபன் ரிலீஸென்றும் தீபாவளி வாழ்த்தோடு விளம்பரங்கள்; திண்தோள் மான்கண்ணி…
அனுமன் திருக்கோவில் முக்கால்வாசி மூடிய வாசல்முன் பத்திருபது பக்தர்கள் காத்திருப்பர்; குளிக்காத, ஷார்ட்ஸ் அணிந்த கான்வாஸ் ஷூ கழற்றாத இன்னும் பலர் என்போல வெளிவாசல் நின்று உள்நோக்கிக் காத்திருப்போம்; திருத்துழாயும் உலர்ந்த திராட்சை தட்டுமாக கோயிலர்கள் மணியடிக்கக் காத்திருப்பர்; மடைப்பள்ளி நைவேத்யம் வெண்பொங்கல் பொங்கிவர அனுமன் காத்திருப்பார் இன்றைய காத்திருப்பு இத்துடன் முடிய மின்சார முரசு முழங்குது கேள்.