Archive For ஆகஸ்ட் 2, 2024
முதல் நிகழ்ச்சியில் சிறு பட்டாம்பூச்சி பொம்மைகளைக் கையசைத்து உருவாக்கிக் கோழிப்பண்ணை சங்க நிர்வாகிகளில் வந்து வணங்கும் முதல் மூவருக்கு அன்பளிப்பாகத் தருவாள் எமிலி. இது அங்கீகரிக்கப் பட்டுள்ளது என்றாள் பெண் அதிகாரி. அடுத்து, ஊசிகளைப் பூப்போட்ட சிறு பட்டுத் துணியில் அழகாகச் செருகி அன்பளிப்பாக ஆப்பிரிக்க உடுப்பு ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகளுக்கு வழங்கலாம் என்றாள் அதிகாரி. அது கையசைத்து வரவழைத்துத் தரச் சற்றே கடினமானது என்றாள் எமிலி. இதற்கு மந்திரவாதம் செய்ய வேண்டாம், இந்த ஊசிகள் செருகிய…
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி கைக்குட்டையை மரியாதை விலகாமல் காக்கிச் சட்டைப்பையில் இட்டு புன்னகையோடு நின்ற அதிகாரியை எதிரே இருந்த நாற்காலியில் அமரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாள் எமிலி. அவள் இதற்காகவே காத்திருந்தது போல் அந்த நாற்காலியில் உட்கார்ந்து, கையில் பிடித்திருந்த கிளிப் செருகிய அட்டையில் மேலாக இருந்த காகிதத்தை அவசரமாகப் படிக்கத் தொடங்கினாள். இரவு நன்றாக உறங்கினீர்களா என்பதில் தொடங்கி, காலை உணவு, தேநீரின்…
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி ——————————————————————————————————————————— பறவை ஆடும் முன்றிலில் யாரும் இருக்க அனுமதி இல்லை. அவர்கள் அந்தக் காட்சியின் உக்கிரத்தால் இதயம் வெடித்து இறந்து போகலாம். எமிலி இந்த ஒரு வாரமாக வினோதமான இந்த இடத்தில் இருக்கவும் உறங்கவும் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறாள். நந்தினியின் படுக்கை அறைக்குக் கொண்டு விடும் முன் நடை அது. கடவுளின் சகோதரியாக எப்போதும் நிறைந்திருக்கும் நந்தினியின் படுக்கை…
வாழ்ந்து போதீரே -அரசூர் நான்கு நாவல் வரிசையில் இறுதி நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி ================================================================================ திலீப் துள்ளி எழுந்து விழித்துக் கொண்டான். கனவு ஏதும் இல்லை. டெலிபோன். டெலிபோன் ஓசை மட்டும் நிஜம். இருட்டில் சத்தம் வழி காட்ட, ஓடிப் போய் எடுத்தான். திலீப் மோரே கிட்டே பேச முடியுமா? அகல்யா குரல். ஏய் அகல், நான் தான். என்ன ஆச்சு? இப்போ இப்போ நீ இப்போ. …
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது- அடுத்த சிறு பகுதி இங்கே நீ வா ராஜா. ஒண்ணும் தரவேணாம். அம்பலப்புழையிலே இறக்கி விடறேன். நடாஷா இறங்க, திலீப் மனதில் ஏனோ பயம். இந்த டிரைவர் கூட்டிப் போய்க் கழுத்தை நெறித்து விட்டால்? அல்லது பாலியல் ரீதியாக அவனைப் பலாத்காரம் செய்து விட்டால்? இருக்காது, அப்படிப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் சொந்தக் கதை சொல்லிக் கொண்டு துக்கத்தைப் பகிர்ந்திருக்க மாட்டார். அம்பலப்புழையிலும் எங்கே போக…
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது -அடுத்த சிறு பகுதி டிரைவர் இல்லாமல் இருட்டில் நிறுத்தி இருந்த ஆட்டோ ரிக்ஷாக்களையும், விளக்குக் கம்பத்தின் அடியில் உறங்கும் தெரு நாய்களையும், சகலரும் குத்த வைத்து எழ, மூத்திர ஈரம் விரியத் தொடங்கிய முடுக்குச் சந்துகளையும் நின்று நின்று பார்த்து அரை மணி நேரம் கழித்து அம்பாசடர் டாக்சி ஒன்று வந்தது. நம்பிக்கை இல்லாமல் திலீப் நிறுத்தச் சொல்லிக் கையசைத்தான். வண்டி சற்று தூரம் கடந்து போய்…