Archive For ஆகஸ்ட் 21, 2023
நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 28 இல் இருந்து பிரதி நீலன் வைத்தியர் இருக்கும் பேழையின் மேல்மூடி திறந்து நூறு தேள்க் கால்கள் உள்ளே நீட்டி பிரதி நீலன் சுவாசிக்கிறாரா என்று உறுதி செய்வதுபோல் அசைந்து பெருஞ் சத்தத்தோடு மூடி திரும்பக் கவிந்து ஒரு வினாடி அதிர்ந்து மேலே கூரையாக அமர்ந்தது. அந்த ஒலி கேட்ட பிரதி நீலன் இதெல்லாம் உணரப்படுவது தன்னால் தானா அல்லது வேறு யார்க்கோ அனுபவமாகிப் பார்வை மூலமும், வாடை, ஒலி…
from chapter 27 மேசை மேல் தலையில்லாத குழலனின் உடல் அசைந்து கொண்டிருக்க தலை அறையை தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தது. அக்ரெலிக் பெயிண்ட் வாடை தூக்கலாக வந்து கொண்டிருந்த இடம் அது. எந்தத் தலைமுறையிலோ அக்ரெலிக் வண்ணம் தேள்க் கூட்டத்துக்கு ஒவ்வாமை தருவதாக குணம் கொண்டிருந்தது. தேளர்கள் நடமாட்டத்தைக் கிட்டத்தட்ட அறவே இல்லாமல் செய்யச் சுவர்களை தினமும் அக்ரலிக் வண்ணமடித்து அந்த வாடை நீங்காமலும் குறையாமலும் கவனம் வைத்திருப்பது வழக்கம். குயிலியின் நாசியில்…
கொச்சி நெடும்பாஸ்ஸேரி விமான நிலையம் நீங்கி மங்களூர் செல்லும் விமானம் குறிப்பிட்ட நேரமான காலை ஆறு மணிக்குப் புறப்படத் தயாராக இருந்தது. நாலு மணி நேரம் எடுக்கும் நீண்ட பயணம் இது. விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னவோ அந்தச் சிறு விமானத்திலும் வெற்று இருக்கைகள் நிறைய இருந்தன. ஜெயம்மா மங்களூருக்கு வரச்சொல்லிக் கையோடு அழைத்துப் போகும் வசந்தியும் சங்கரனும் தவிர தெரிசாவும் அவர்களோடு இருந்தாள். தெரிசாவும் கூட இருப்பது சங்கரனுக்கு ஏதாவது ஒரு விதத்தில்…