Archive For அக்டோபர் 22, 2022

அரசாணியை நடுவில் வைத்துப் பெண்கள் எல்லோரும் சுற்றி வந்து பூவும் நெல்லும் தூவிக் குலவையிடும்போது

By |

அரசாணியை நடுவில் வைத்துப் பெண்கள் எல்லோரும் சுற்றி வந்து பூவும் நெல்லும் தூவிக் குலவையிடும்போது

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்                  இரா.முருகன்   அத்தியாயம் 3   முத்தம்மா டீச்சர் வென்னீரை எடுத்து வைத்துக் குளியலறைக் கதவைச் சாத்திக் கொண்டபோது அங்கே ராசாத்தி வீட்டுக்காரர் மாப்பிள்ளை ராஜு…   ஆலங்குச்சியால் பல் விளக்கிக் கொண்டு .. காறிக் காறி உமிழ்ந்து கொண்டு..   குறக்களி காட்டுகிறது மனது.   பின்னால் வந்து புஜத்தைப் பற்றும் கைகள் நாற்பது வருஷம் முந்திய வலுவோடு   ‘முத்தம்மா.. முத்துன்னு கூப்பிடணும் இல்லே.. என்ன…




Read more »

தெரசாள் வீட்டில் மாட்டை விற்றதும் மெழுகுதிரி கம்பெனி தொடங்கியதும்

By |

தெரசாள் வீட்டில் மாட்டை விற்றதும் மெழுகுதிரி கம்பெனி தொடங்கியதும்

தெரசாள் வீட்டில் மாட்டை விற்றதும் மெழுகுதிரிக் கம்பெனி தொடங்கியதும் முத்தம்மா பிறக்க முந்தி என்றாலும் அம்மா இன்னும் சொல்வதை நிறுத்தவில்லை.   என்றாலும் தெரசா வீட்டில் முத்தம்மா சர்வ சாதாரணமாக வளைய வருவாள். தெரசாளும் இங்கேயேதான் எப்போதும்… சதா வடிகிற மூக்கைப் புறங்கையில் துடைத்துக் கொண்டு அழுக்கு கவுனோடு அவள் தங்கை எலிசபெத்தும்..   ராசாத்திக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகிறதென்று வீட்டில் பேசிக் கொண்டார்கள். ஈர்க்குச்சி உடம்பில் சீட்டிப் பாவாடையும், பச்சைத் தாவணியுமாக வளைய வருகிற…




Read more »

முத்தம்மா டீச்சர் – கேவா கலர் தமிழ்ப் படம் – வாலண்டினா தெரஸ்கோவா

By |

முத்தம்மா டீச்சர் – கேவா கலர் தமிழ்ப் படம் – வாலண்டினா தெரஸ்கோவா

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் – அத்தியாயம் 2     தெரசாள், முத்தம்மா, அழகு மீனா, ராசாத்தி, சாந்தா, போதும்பொண்ணு, செல்வி..   ஒரு கூட்டமே தரை டிக்கெட்டில்.   ராசாத்தியின் அவ்வா அலமேலம்மாக் கிழவி புகையிலைக் கட்டையை வாயில் அடக்கிக் கொண்டு தடுப்புச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள்.   தடுப்புக்கு அந்தப் பக்கம் களவாணிப் பயல்கள். சினிமா கொட்டகைக்கு வருவதே குட்டிகளைப் பக்கத்தில் வைத்துப் பார்க்கத்தான். சமயம் கிடைத்தால் உரசியும் பார்ப்பார்கள்….




Read more »

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் – குறுநாவல் பகுதி

By |

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் – குறுநாவல் பகுதி

  பின்னால் பலமாகக் கொட்டு சத்தம். டீச்சர் திரும்பிப் பார்த்தாள். சினிமா வண்டி நடுத் தெருவில் அடைத்தது போல் நின்றது. இனிமேல் முன்னால் வந்தால் மெழுகுவர்த்தி கம்பெனி சுவரில் தான் முட்ட வேண்டும்.   வண்டியில் இருந்து குதித்து இறங்கிய சின்னப் பையன் கையில் கலர் கலராக நோட்டீசுகளைப் பிடித்துக் கொண்டு முத்தம்மா டீச்சரைப் பார்த்துக் கையசைத்தான்.   ‘என்ன எளவெடுத்த படமோ.. போய்த்தான் ஒரு நோட்டீசு வாங்கிட்டு வாயேன்..’   பாக்கியலட்சுமி மறுபடி சத்தம் போட்டது….




Read more »

நிக்கொலா பெனடிட்டி என்றொரு வில்லிசை அரசி

By |

நிக்கொலா பெனடிட்டி என்றொரு வில்லிசை அரசி

நிக்கோலா பெனடிட்டி எடின்பரோ அஷர் ஹால் வாசல். ஒரு கோடை கால சாயந்திரத்தில் நண்பர் ஆண்டோவும் நானும் க்யூவில் நிற்கிறோம். ஆண்டோ இத்தாலியர். முழுப்பெயர் அண்டோனியோனி. புதுக் கவிஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய பெயர் என்றாலும் சுருக்கி உச்சரிக்க சிரமப்பட்டதால் எனக்கு  ஆண்டோ ஆனார். ‘நிக்கோலா பெனடிட்டின்னு ஸ்காட்டிஷ் பொண்ணு. இத்தாலிய வம்சாவளி. அற்புதமா வயலின் வாசிக்கிறா. கிளாசிக்கல் வெஸ்டர்ன். உனக்குப் பிடிக்குமே, வா, போகலாம்’.  ஆண்டோ வற்புறுத்தவே எடின்பரோ கோட்டை பக்கம் விளிம்பு நாடக விழாவில்…




Read more »

நோயுற்று மூத்து நுந்து கன்றாகி – திருக்கோத்தும்பி – ராத்திரி வண்டி குறுநாவல்

By |

  ராமச்சந்திரன் ஸ்டேஷன் மாஸ்டரைக் கவனித்துப் பார்த்தான்.   ‘சரவணா.. சாரிடா.. வெரி சாரி.. இனிமே கவனிச்சு சரியா வரையறேண்டா.. நாளைக்கு வந்து நிச்சயம் வரஞ்சு தரேன். இன்னிக்கு ரயில் ஓடாதாம்.. வர முடியலே.. மன்னிச்சுக்கோ..’   ‘நீ தப்பு ஏதும் பண்ணலேடா.. எதுக்காக வருத்தப் படறே.. நான் தாண்டா தப்புப் பண்ணிட்டேன். உன் பங்குக்கு எடுத்து வச்ச பணத்திலே அப்பா கருமாதி காரியம் எல்லாம் நடத்தினேன். இதுவும் பொய் தாண்டா. நான், இவ கேட்டாளேன்னு ரெட்டை…




Read more »