Archive For ஜனவரி 14, 2022
An excerpt from my forthcoming novel MILAGU என்னப்பா வெளிக்கு போய்ட்டு வரதுக்குள்ளே அடிச்சுக்கிறீங்க என்றபடி தொந்தியைத் தடவியபடி உள்ளே வந்தார் வெங்கடப்ப நாயக்கர். அவர் சொல்லி அனுப்ப குதிரை வீரன் ஒருவன் மிர்ஜான் கோட்டையை நோக்கிப் போய் கோட்டைக்காவலரிடம் ஏதோ சொன்னான். அடுத்த பத்தாவது நிமிடம் நேமிநாதன் குற்றுயிரும் குலையுயிருமாக மிர்ஜான் கோட்டைக்குள் எடுத்துச் செல்லப்பட்டான். நடுப்பகல். மிர்ஜான் கோட்டை நேமிநாதனின் அரச குடும்ப மாளிகை கருத்த துணியைக் கழியில் பறக்க விட்டுப் பிடித்தபடி…
An extract from my forthcoming novel MILAGU யுத்தம் முடிஞ்சு போச்சு. சென்னபைராதேவி தோல்வி கண்டு துவண்டு கிடக்காள் கோட்டைக்குள்ளே. இருக்க விடலாமா மாமனாரே என்று ஊடுருவினார் பிலகி அரசர் திம்மராஜு. கேட்டுட்டு சொல்லு மாப்ளே என்று அவரை நிறுத்தச் சொன்னார் வெங்கடபதி. மிர்ஜான் கோட்டை லட்டு மாதிரி ஒரு செங்கல் கூட உடையாமல் நம்ம கைக்கு வரணும். வரும். நம்ம படை மிர்ஜானுக்குள்ளேயும் வேண்டாம். ஹொன்னாவர் உள்ளேயும் வேண்டாம். இன்னிக்கு முழுக்க இங்கேயே கோட்டைக்கு…
A longish extract from my forthcoming novel MILAGU மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது 1606 மிர்ஜான் கோட்டை விடியற்காலையில் ஜெருஸூப்பாவின் சென்னபைராதேவி மிளகு ராணியின் படை எதிரணியான நேமிநாதனின் படைகளிடம் தோல்வி அடைந்ததை அறிவித்தது. மிர்ஜான் கோட்டை உள்ளே இருந்து வெள்ளைக் குதிரை மேல் வெள்ளைக்கொடி பிடித்து மூன்று அரசு தரப்பு படையினர் எதிரணியின் தாவளத்துக்குப் போனபோது அந்த அணியின் வீரர்கள் ஒரே குரலில் ஜெய்ஹோ என்று முழங்கினார்கள். போர் முடிந்தது என்று தோல்வியை சென்னபைரதேவி…
A longish extract from my forthcoming novel MiLAGU எந்தக் குதிரை வேண்டும்? என்னிடம் குதிரை பராமரிப்பு ஊழியர் கேட்டார். இல்லை, நடந்தும் ஓடியும் யுத்தம் புரியும் காலாட்படை வீரன் நான் என்றேன். குதிரை ஏறத் தெரிந்த சிப்பாய்களில் நூறு பேரை குதிரைவீரர் ஆக்கியிருக்கிறார்களாம். அவர்களில் நானும் ஒருவனாம். குதிரை ஏற்றம் தெரியும் என்று அரசவை உத்தியோகத்தில் வரும்போதே அறிவித்து விட்டு வந்திருக்கக் கூடாது என்று இப்போது தோன்றியது. என்னைப் போலவே சாதுவான ஒரு குதிரை,…
டாக்டர் பாஸ்கரன் நூல் முன்னுரை ஆதியில் ஒலி இருந்தது. அது எண்ணத்தை வெளியிட வார்த்தைகளாகப் பிறப்பெடுத்தது. நினைத்ததை முழுக்க வெளிப்படுத்த சொல் மட்டும் போதாது என்ற நிலை வந்தபோது சைகைகளும், ஆட்டமும், பாட்டும் சொல்லை மிகுத்து உயிர்த்து வந்தன. வார்த்தை காதுகளின் வெளியைக் கடந்து போகும்போது புரிதலும், நினைவு கூரலும் ஆளாளுக்கு மாறுபட, ஒரே என்ணத்தின் கணக்கற்ற பிரதிகளாகச் சொல் விரிந்தது. சொல்ல வந்ததில் பகுதி மட்டும் சொல்லப்பட்டு, அதுவும் ஆதி வார்த்தைக்கு வேறுபட்டு வந்து சேர,…
An excerpt from my forthcoming novel ‘MILAGU’ ஒன்றுக்கு இரண்டாக இட்டலித் துணியை அவனிடம் வாங்கிக்கொண்டு வந்தேன். அவற்றில் ஒன்றை இடுப்பில் முடிந்து கொண்டு மற்றதை கால் காயத்தின் மேல் இறுக்கக் கட்டினேன். கூடார ஓரத்தில் கத்தி, அதுதான் சொன்னேனே, ஒவ்வொருத்தருக்கும் வாள் ஒன்று எடுத்துக் கொடுத்து ஜயவிஜயிபவா சொல்லி அனுப்புகிறார்கள். சாயந்திரம் மறந்து விடாமல் கொடுக்கவும் என்று நேமிநாதரின் உத்தியோகஸ்தன் சொல்லும்போது சிரித்தேன். வாங்கிய வாளை வீசிப் பார்த்தேன். அந்த வாள் வைத்த இடத்துக்கு…