Archive For அக்டோபர் 1, 2021
ஒரு மௌனப் புயல்போல் ரோகிணி என் வாழ்க்கையில் பிரவேசித்தாள். யார் அவள்? எந்த ஊர்? பெற்றோர் யார்? உற்றோரும் தோழியரும் யாரார்? எனக்கு இளையவளா, மூத்தவளா?அகவை எத்தனை? எந்தக் கேள்வியும் கேட்காமல் ரோகிணி என்ற வசீகரமான பெண் பைசாசத்தின் பேரழகுக்கு ஆளானேன். அது ஆராதிக்கச் சொல்லும் அழகில்லை. போற்றிப் புகழ்ந்து புல்லரித்து அடுத்து நின்று பணிவிடை செய்ய, அடிமைத்தனம் பண்ண ஆசை எழுப்பும் அழகில்லை. நெருக்கி அணைத்து உடலைத் துன்பம் கொள்ள வைத்து கசக்கி முகரச் செய்யும்…