Archive For பிப்ரவரி 12, 2021

அந்த நேரிசை வெண்பா வரிசைகளுக்குக் குறுக்கே மெல்ல நடந்து போனது

By |

என் ‘தியூப்ளே வீதி’ நாவலில் இருந்து – ஞாயிற்றுக்கிழமை. தியூப்ளே வீதி கொஞ்சம் போல் ஓய்வெடுத்துக் கொள்ளும் தினம் அது. ஆனாலும் இயக்கம் நிற்பதில்லை. தெருவின் கிழக்கு முனையில் பரிசுத்தமே செங்கலும் சுண்ணாம்புமாகி கம்பீரமாக உயர்ந்து நிற்கும் போன நூற்றாண்டுக் கட்டிடங்கள். அவை, நெருங்கி வந்து வந்து கரையைத் தொட்டு இரையும் கடலோடு சதா வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கும். அந்தக் கட்டிடங்களில் ஏதாவது ஒன்றின் உள்ளறையில் இருந்து எப்போதும் பியானோ இசையின் சில நறுக்குகள் கசிந்து தெருவில்…




Read more »

ஹாலிபேக்ஸ்

By |

என் ‘ராயர் காப்பி கிளப்’ கிண்டில் மின்நூலில் இருந்து – நான் இங்கிலாந்தில் யார்க்ஷயரில் கிரிக்கெட்டால் பிரசித்தமான லீட்ஸ் பக்கம் ஹாலிபாக்ஸ் என்ற மலைப்பிரதேச நகரத்தில் இருக்கிறேன். பாரதியாரின் சின்னச் சங்கரன் கதையில் வரும் கவுண்டனூர் மாதிரி, பத்து பதினைந்து நிமிஷம் காலாற நடந்தால் ஊர் முழுக்க வலம் வந்து விடலாம். மலைச்சரிவில் ஏற்றமும் தாழ்ச்சியுமாக இருக்கும் இந்த இடத்தில் எதற்கு இத்தனை காரும் வேனும் என்று தெரியவில்லை. ஊரில் இன்னொரு விசேஷம் எங்கே திரும்பினாலும் பாக்கிஸ்தானியர்கள்….




Read more »

ஓர்ம்மகளுடெ விருந்நு

By |

ஓர்ம்மகளுடெ விருந்நு காலம் என்ற பரிமாணம் சுருங்கிக் கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. அது வெறும் தோற்றம் இல்லை, முழுக்க உண்மை என்று அறிவியலைத் துணைக்கழைத்து வாதிக்க முற்படுகிறவர்களுக்கு என் வந்தனம். அவர்களுடைய வம்சாவளியும் அடுத்தடுத்து வரப்போகும் தலைமுறைகளும் எல்லாத் தேவதைகளாலும் வாழ்த்தப்படட்டும். இந்தக் கட்டுரை அவர்களைப் பற்றியதில்லை. கடந்துபோன காலத்தைப் பரிவோடும் நேசத்தோடும் நினைத்துப் பார்க்கும் என் போன்ற சாமானியர்களைக் குறித்து. ஒற்றைச் சாட்டமாகக் காலம் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் – இது வெறும்…




Read more »

நிக்கொலா பெனடிட்டி என்ற வயலின் கலைஞர்

By |

நிக்கொலா பெனடிட்டி என்ற வயலின் கலைஞர்

என் ‘ஏதோ ஒரு பக்கம்’ கிண்டில் மின்நூலில் இருந்து – எடின்பரோ அஷர் ஹால் வாசல். ஒரு கோடை கால சாயந்திரத்தில் நண்பர் ஆண்டோவும் நானும் க்யூவில் நிற்கிறோம். ஆண்டோ இத்தாலியர். முழுப்பெயர் அண்டோனியோனி. புதுக் கவிஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய பெயர் என்றாலும் சுருக்கி உச்சரிக்க சிரமப்பட்டதால் எனக்கு ஆண்டோ ஆனார். ‘நிக்கோலா பெனடிட்டின்னு ஸ்காட்டிஷ் பொண்ணு. இத்தாலிய வம்சாவளி. அற்புதமா வயலின் வாசிக்கிறா. கிளாசிக்கல் வெஸ்டர்ன். உனக்குப் பிடிக்குமே, வா, போகலாம்’. ஆண்டோ வற்புறுத்தவே…




Read more »

எடின்பரோவில் சுற்றி வந்தபோது

By |

என் ‘எடின்பரோ குறிப்புகள்’ கிண்டில் மின்நூலில் இருந்து – எடின்பரோ – ஊர் சுற்றி வந்தபோது எடின்பரோ கோட்டைக்குத் தெற்கே நீண்டு வளைந்து உயரும் ராயல் மைல் தெருவில் பழைய பட்டணம் தொடங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கருப்புப் பட்டணமாக விரிந்த சென்னை ஜார்ஜ் டவுண் போல காலம் உறைந்து நிற்கும் சுற்றுப்புறங்கள். மூதாதையரின் மூச்சுக் காற்றின் வாடை இன்னும் கூடத் தீர்க்கமாக புலனை ஊடுருவி, மனதின் திசைகளை உள்வளைத்து ஒரே முகமாகத் திருப்பும் வீதி இது. போதாக்குறைக்குத்…




Read more »

என் நூல்கள் – முன்னுரைகள்

By |

நாவல், சிறுகதை, குறுநாவல், கட்டுரைத் தொகுப்புகள் அச்சுக்குப் போகும்போது பின்னட்டை வாசகங்களை எழுதுவது வரம். பா.ராகவன் இதைப் பற்றி அவருடைய முகநூல் காலக்கோட்டில் (டைம்லைனில்) எழுதியதைப் படித்தபோது புத்தகங்களுக்கு முன்னுரை எழுதும் இதே போன்ற, கடினமான இன்னொரு பணி நினைவு வந்தது. என் முதல் புத்தகமான சிறுகதைத் தொகுப்பு ‘தேர்’, அசோகமித்திரன் முன்னுரையோடு வெளிவந்தது. புத்தகம் பரவலான கவனத்தைப் பெற அந்த அற்புதமான முன்னுரையும் ஒரு காரணம். அதற்கு அடுத்த மெலிந்த சிறுகதைத் தொகுப்பு ‘ஆதம்பூர்க் காரர்கள்’…




Read more »