Archive For பிப்ரவரி 21, 2021

இடாகினிப் பேய்

By |

என் கட்டுரைத் தொகுதி ‘ராயர் காப்பி கிளப்’ மின்நூல், அச்சு நூல் கட்டுரை இது இடாகினிப் பேய் இது பகுதியாக முன்னர் வெளியானது. அஃது படியா நின்றோர், கூறியது கூறற்றுயர் நீங்கவே தொடக்கத்தில் சில பத்திகள் கடந்து தொடர வேண்டுகிறேன். ‘இடாகினிப் பேய்களும்..’ என்ற பெயரில் என் (அண்மையில் காலம் சென்ற) நண்பர் கோபிகிருஷ்ணன் எழுதிய கதைத்தொகுப்பு பற்றிப் படித்தபோது எனக்கு இந்த இடாகினிப் பேயை எங்கேயோ பார்த்த நினைவு. சிலப்பதிகாரத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அது வசமாகப்…




Read more »

Why should someone hoot in a discussion about Raymond Carver’s minimalist writing

By |

Why should someone hoot in a discussion about Raymond Carver’s minimalist writing

Jaipur Literature Festival 2021 has gone digital in an awesome manner. The festival site is fabulously organized.. it is a pleasure to go thru – a shade better than Music Academy site during Dec 2020 Music Festival. It is a delight to ‘wander and hang around’ at the patio and the pavilion – Front lawn,…




Read more »

ஊரும் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்திலே

By |

என் கட்டுரைத் தொகுப்பான ‘ராயர் காப்பி கிளப்’ அச்சுப் புத்தகம், கிண்டில் மின்நூலில் இருந்து- எழுபது ஆண்டுக்கு மேலான வரலாறு கொண்டது தமிழ்த் திரையிசை. அதில் தோய்ந்து தகவல் சுரங்கமாக, ஆழ்ந்த புலமையோடு ரசனையைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் அபூர்வம். ‘ஸ்கிரீன்’ பத்திரிகையில் திரை இசை பற்றித் தொடர்ந்து எழுதி வந்த வி.ஏ.கே ரங்காராவ் இவர்களில் முன்னோடி. இந்தித் திரையிசைக்கு ராஜு பரதன், தற்போது வி.கங்காதர் போல் . (இது 2002-ஆம் ஆண்டு எழுதப்பட்டது. திரை இசை என்சைக்ளோபீடியாவான…




Read more »

என் ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ கவிதைத் தொகுப்பில் இருந்து

By |

பெண் கனவிலும் வரிசை தப்பாது வரும் வீடுகள் கடந்து கோபுர நிழல் நீளும் சின்ன வீதியில் நடக்க மாட்டேன். ஆற்றங் கரையில் ஊற்றுத்தோண்டிக் கதைகள் பேசி அலுத்த பின்னே குடம் நிறைத்து ஈரமண் உதிரும் சிற்றாடை அசையக் கூடநடந்து வந்த தோழிகளைத் தேட மாட்டேன். அப்பா வந்ததும் குதித்தோட அண்ணாவோடு காத்திருந்த கல் யானைப் படிகள் ஏறி, ஞாயிற்றுக் கிழமை நாடகங்களில் அம்மாவின் பழம்புடவை தரை புரளும் ராணியாய் வலம் வந்த திண்ணை கடந்து இருண்ட நடையுள்…




Read more »

அசோகமித்திரன் நினைவுகள் -2 (அல்லது அசோகமித்திரனை முன்வைத்துக் கொஞ்சம் நினைவலைகள்)

By |

அசோகமித்திரன் நினைவுகள் -2 (அல்லது அசோகமித்திரனை முன்வைத்துக் கொஞ்சம் நினைவலைகள்)

என் கட்டுரைத் தொகுப்பு ‘வேம்பநாட்டுக் காயல்’ கிண்டில் மின்நூலில் இருந்து – அசோகமித்திரன் என் அப்பாவின் சிநேகிதர். இரண்டு பேரும் தி.நகர் வாசிகள் ஆனதால், அது நடேசன் பூங்கா நட்பாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் முற்பட்டதாம். ராணுவத்தில் இருந்த, அசோகமித்திரனின் உறவினரான, அவர்களுக்கு ஒரு தலைமுறை முந்திய யாரோடோ தொடங்கியதாக இருக்கும் என்று தெரிகிறது. அது தெரியாமலேயே, அசோகமித்திரனை கணையாழிக்காரராகவே நான் முதலில் அறிந்திருந்தேன். எண்பதுகளில் தில்லியில் நான் வேலை பார்த்தபோது கணையாழிக்கும் தீபத்துக்கும்…




Read more »

மலையாளமான தமிழ்

By |

என் கட்டுரைத் தொகுப்பு ‘ராயர் காப்பி கிளப்’ (அச்சுப் புத்தகம், மின்நூல்) கட்டுரை ஒன்று – வழியெனக்கு பிழயாத வண்ணம்முற்றருள் செய்யென் மனகுருந்திலிளகொண்டு புனல் கொண்டு வடிவாண்டு எழுந்த கொண்டல் பதரும் நெறி தழுத்த குழலி இளமதிக்கு துயர் பொங்கி விளையின்ற நுதலி சுழலின்றகிலலோகர் வணங்கின்ற குழலி துகில் புலித் தொலி கொள்ளின்றரநுதல் கண்ணிட பெட்டு அழிவு பெட்ட மலர்வில்லியெயனங்கனெ அவ்வளவு தோற்றின செருப்பமுள்ள வெப்பின் மகளே இது என்ன? பனிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கேரள இலக்கியமான…




Read more »