Archive For மார்ச் 5, 2021
என் லண்டன் பயண நூல் ‘லண்டன் டயரி’யில் இருந்து – மூக்கு வழியே மூளையிலும் மனதிலும் புகுந்து கிறங்கடிக்கிற வாடையைச் சுற்றிலும் கிளப்பிக்கொண்டு பொன்னிறமாக வறுத்து, கையால் சுற்றும் இயந்திரத்தில் கரகரவென்று அரைத்து, கொதிக்கக் கொதிக்க வென்னீர் சேர்த்து ‘திக்’கான டீக்காஷனை ·பில்ட்டரில் இறக்கி, பத்து நிமிஷத்துக்கு முன்னால் கறந்த பசும்பால் காய்ச்சிச் சேர்த்து, வில்லை வளைக்கிறதுபோல வீசி ஆற்றி, நுரைக்க நுரைக்க டம்ளரில் ஊற்றி நீட்டுகிற அற்புதமான காப்பிக்கடைகள் லண்டனில் திறந்தது கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு…
நாதன்ஸ் கபேயில் ஜனதா சாப்பாட்டுக்காக டோக்கன் வாங்கும்போது உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷர்மா கண்ணில் பட்டார். ”விசு, கொஞ்சம் இரு, ஒண்ணு சொல்ல வேண்டி இருக்கு”, ஷர்மா விஸ்வநாதனிடம் சொல்ல, நான் எதையும் யாரையும் பார்க்கவில்லை, கேட்கவில்லை என்று அபிநயித்து டோக்கனோடு உள்ளே நடந்தேன். கொம்பு உள்ளதற்கு ஐந்து முழம், குதிரைக்கு பத்து முழம், எமர்ஜென்சி எதிர்ப்பாளர் கண்ணில் பட்டால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் வேகமாக ஓடி ரட்சைப் படுவதே சான்றோர் சொல்லும் வழிமுறையன்றோ….
சாகித்ய அகாதமிக்காக நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்: சுஜாதா’ புத்தகத்திற்காக எழுதி, நீளம் கருதி நான் வெளியிடாமல் போன ஒரு சிறு அத்தியாயம் இது : சுஜாதாவின் நாலாயிரத் திவ்யப் பிரபந்த ஈடுபாடு, தமிழ் மரபுக் கவிதையில் ஈடுபாடாக முகிழ்ந்தது. முக்கியமாக வெண்பாப் பிரியர் அவர். வாசகர்களை வெண்பா எழுதத் தூண்டியதோடு அவ்வப்போது அவரும் உற்சாகமாக நேரிசை வெண்பா எழுதினார். வெண்பாவில் எத்தனையோ தலைமுறை கடந்து இளையோரின் விருப்பம் அரும்பியிருக்கிறது என்றால் சுஜாதாவின் அட்டகாசமான, தற்காலக்…
சென்னை புத்தகக் கண்காட்சி 2021 நேற்று, பிப்ரவரி 24 2021 முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடந்து வருகிறது. கண்காட்சியில் என் பதிப்பாளர்களான கிழக்கு பதிப்பகம் (நியூ ஹொரைசான் மீடியா நிறுவனம்) F 7 அரங்கில் காட்சிக்கு / 10 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைத்துள்ள ஏராளமான நூட்களில் என்னுடையவையும் உண்டு. அவற்றில் சில இந்தப் பதாகை எடுத்துக் காட்டுகிறவை. வாங்கிப் படித்து வாசிப்பனுபவம் பகிர நண்பர்களை அன்போடு வேண்டுகிறேன்.
என் ‘ராயர் காப்பி கிளப்’ கட்டுரைத் தொகுப்பில் இருந்து (அச்சுப் பதிப்பு, கிண்டில் மின்நூல்) எங்க ஊரில் (ஹாலி·பாக்ஸ், மேற்கு யார்க்ஷயர், இங்கிலாந்து) இருக்கப்பட்ட தொண்ணூறு சதவிகிதக் கட்டிடங்கள் விக்டோரியா மகாராணி காலத்துப் பழையவை என்றால், அவற்றுக்கெல்லாம் பாட்டியம்மாவானது, தொழில் புரட்சி காலத்துப் புராதனக் கட்டடமான பீஸ்ஹால். (Piece Hall) 1766-ல் வீட்டில் தறிநெய்து துணி தயாரித்துக் கொண்டுவந்து இங்கே நெசவாளர்கள் விற்கும்போது வாங்கக் கூட்டம் அலைமோதுமாம். கட்டடத்தின் பெயரில் இருக்கும் பீஸ், துணிப்பீஸ்தான். நத்தார்தினம் (கிறிஸ்துமஸ்)…
என் ‘ராயர் காப்பி கிளப்’ கட்டுரைத் தொகுப்பு (அச்சு நூல், மின்நூல்) புத்தகத்தில் இருந்து – என்னை வரைந்த படம் – உரைவெண்பா கனமான லெதர் ஜாக்கெட்டில் ஒட்டிய பனியைத் தட்டி விட்டபடி, காசிப்பாட்டி முக்காடு போல் தலைக்கு மேலே கவிந்த தலைக் கவசத்தைப் பின்னால் தள்ளிக்கொண்டு ஹாலிபாக்ஸ் நகரில் கம்ரான் என்ற பாக்கிஸ்தானி ரெஸ்தாரண்டில் மாடிப்படி ஏறுகிறேன். காதைப் பிளக்கும் பஞ்சாபி பங்க்ரா இசை. உள்ளே நுழைந்ததும் கட்டியணைத்து வரவேற்கிற ஓட்டல் முதலாளியும், உணவு பரிமாறும்…