Archive For ஏப்ரல் 7, 2020

ராமோஜியம் – விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்திகளுக்கு எழுதிய கடிதம் மற்றும் ராமோஜி, மதறாஸ் ரேடியோ ஸ்டேஷனுக்கு எழுதியது 1945

By |

அடுத்த சிக்கன யோஜனை, சிக்கனம் பேண சாப்பாட்டைக் குறைப்பீர். என் பெண்டாட்டி மிசிஸ் அகல்யா பாய் விட்டோபா ராவ் தினசரி சொல்வது இது. வயிறு பருத்து தொந்தி விழுந்ததால் குறைக்க காலையில் நடக்கச் சொல்லி அலுத்துப் போய், கசரத் செய்யச்சொல்லி அதுவும் நடக்காமல் தீனியைக் குறைக்கச் சொல்கிறாள். ஆனால் சர்க்கார் இதை சிக்கனம் பேணும் நடவடிக்கையாகக் காணுகிறதே. வேடிக்கை தான். சர்க்கார் சொல்கிறதே என்று ராத்திரி சாப்பிடாமல் தூங்கப் போய், அரைத் தூக்கத்தில் செம்பா ஹோட்டலில் ஜாஸ்தி…




Read more »

ராமோஜியம் – உருவாகி வரும் புதினத்திலிருந்து : 1935

By |

an excerpt from my forthcoming novel RAMOJIUM : Kumbakonam 1935 நான் சாரங்கபாணி கோவிலை நோக்கி நடந்தபோது வெங்கோப ராவ் அண்ட் பார்ட்டி வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ராமாராவ் மாமா பின்னாலேயே போனார். கோவிலுக்குப் போய் விட்டு ஏழு மணிக்குக் கிளம்பிய போது, கமலா பாய் பிரகாரத்தில் தூணை ஒட்டி உட்கார்ந்து எங்கோ வெறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவள் பிரமை பிடித்தது போல் இருந்தாள். துக்காம்பாளையத் தெருவுக்கு வந்தபோது என்னமோ தோன்ற கங்கா வீட்டுக்குப் படியேறினேன்….




Read more »

ராமோஜியம் நாவலில் இருந்து – கடிதங்கள் பகுதி கும்பகோணம் விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்தி அவர்களுக்கு 1945-இல் எழுதிய கடிதத்திலிருந்து.

By |

ராமோஜியம் நாவலில் இருந்து – கடிதங்கள் பகுதி கும்பகோணம் விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து. 1945-ல் தமிழில் எழுதப்பட்டது இந்தக் கடிதம் // சிக்கனம் பேணுவோம் என்று வரும் சர்க்கார் விளம்பரத்தில் அடுத்து சொல்கிறது வீட்டில் நிம்மதியை ஒரு வழி பார்த்து விடும். வீட்டில் அதிகமான அறைகளை வாடகைக்கு விடுங்கள். இது அந்த சிக்கன யோஜனை. என் வீட்டில், கும்பகோணம் தெருவில் பல வீடுகளில் உள்ளது போல திண்ணையோடு வாசல், ஒரு ரேழி,…




Read more »

ராமோஜியம் – துக்காம்பாளையத் தெருவில் – 1935

By |

Excerpt from my forthcoming RAMOJIUM என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு சைக்கிள் வந்து நின்றது. ஆண்கள் சைக்கிள் என்றாலும் நளினமாக ஓட்டி வந்து நிறுத்தியவள் ரத்னா. பால்காரர் சைக்கிள் அது என்று பின்காரியரில் பால் கேனைப் பார்த்ததுமே தெரிந்தது. நீ பால்காரராயிட்டியா என்று அவள் பக்கத்தில் வந்ததும் கேட்டேன். வியர்த்து இருந்தாள். அப்படியே கட்டி அணைத்து உதட்டு மேல் வியர்வையை இதழால் ஒற்றி எடுக்க வேண்டும் என்று நேரம் காலம் பார்க்காமல் மனசு நச்சரித்தது. “டீ…




Read more »

ராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து – ராமோஜி கடிதங்கள் 1945

By |

ராமோஜியம் நாவலில் இருந்து – கடிதங்கள் பகுதி 1940-களில் பிரிட்டீஷ் சர்க்கார் இந்தியப் பத்திரிகைகளில் ‘சிக்கனம் பேணுவோம்’ என்று மக்களைச் சிக்கன நடவடிக்கைகளைக் கைக்கொள்ளச் சொல்லி விளம்பரம் கொடுத்தது. இதைப் பற்றி கும்பகோணம் விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து. 1945-ல் தமிழில் எழுதப்பட்டது இந்தக் கடிதம்(சக்கரவர்த்திகள் எப்படியாவது படித்துக்கொண்டு விடுவார் என்று நம்பிக்கை) பூவுலகம் எல்லாம் அரசாளும் மாட்சிமை மிகுந்த சக்கரவர்த்தி அவர்களுக்கு கும்பகோணம் டீ போர்ட் ஏஜண்ட் விட்டோபா எழுதுவது. Safe….




Read more »

’ராமோஜியம்’ புதினத்தில் இருந்து – ராமோஜி கடிதங்கள் 1945

By |

ராமோஜி கடிதங்கள் – 1945 மதிப்புக்குரிய மதறாஸ் ரேடியோ ஸ்டேஷன் டைரக்டர் சார், பூரண சௌக்கியம். உங்கள், ஆபீஸில் மற்ற சிப்பந்திகளுடைய சௌகர்யம் தெரிவிக்க வேண்டியது. நேற்று ராத்திரி மகாவித்வான் டி என் ராஜரத்தினம் பிள்ளைவாள் நாகஸ்வரக் கச்சேரி கேட்பதற்காக ரேடியோவை ஆன் செய்தேன். என் பிரியமான மனைவி ரத்னா பாய் அருகிலேயே வந்து நின்றாள். கச்சேரி கேட்க இல்லை. அவளுக்கு கர்னாடக சங்கீதத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லை. அபங்க் என்ற மராத்தி பஜனைப் பாடல்களை ரெக்கார்டுகளில்…




Read more »