Archive For பிப்ரவரி 14, 2020
புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 4 பகுதிகள் இரா.முருகன் 1944 டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை தென்மேற்கு திசைத் தெருவுக்கு அதேபடிக்குத்தான் பெயர் இருக்கும். ஜம்பமாக ரத்னாபாயிடம் சொல்லி விட்டு சைக்கிளில் இரண்டு பேரும் ஏறிக்கொண்டு முன்நோக்கி ஊர, தென்மேற்கிலே கிடக்கும் தெருவுக்கு இந்த ராத்திரி விடிவதற்குள் போய்ச் சேருவோம் என்றே தோன்றவில்லை. மார்கழிக் குளிர் சன்னமாகக் கூட வர நீண்ட பாதை. மேலே அட்டை ஷேடு வைத்து அடைத்த பெட்ரோமாக்ஸ் விளக்கோடு யாரோ சைக்கிளில்…
புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 3 பகுதிகள் இரா.முருகன் 1944 டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை ராத்திரி ஏழரை மணிக்கு ’யுத்தம் முடியும்வரை கண்டிப்பாக தேசிய சர்க்கார் கிடையாது’ என்று வைஸ்ராய் வேவல் பிரபு சொன்னதாக ரேடியோவில் நியூஸ் படித்து முடிந்த பிறகு ரேடியோவை அணைத்து விட்டு, ஏர் ரைட் வார்டன் வேஷம் கட்டத் தயாரானேன். சாப்பிட்டு விட்டுப் படி இறங்கலாம் என்று ரத்னாபாய் தடுப்பாள். அவள் வார்த்தைக்கு இன்றைக்கு மட்டுமாவது தலை வணங்க வேண்டாம்…
புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 2 பகுதிகள் இரா.முருகன் 1944 டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை அவள் தேவையில்லாமல் கண் சிமிட்டினாள். அதுவும் சரியென்று பொங்கலில் ஒரு தேக்கரண்டி வாயில் அண்ணாந்து போட்டுச் சுவைத்தபடி எழுந்து போய் வாசல் கதவை மூடிவிட்டு வந்தேன். “இதெதுக்கு இப்போ கதவடைச்சு பகல்லே ப்ளாக் அவுட்? இலவசம்னா எந்த நேரத்திலேயும் கேட்குமா?”. அவள் என்னைத் தள்ளி விட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து வாரப் பத்திரிகை படிக்க ஆரம்பித்தாள். நான் எச்சில் கையோடு…
புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 1 இரா.முருகன் நாவல் மரத்தின் கிளையில் உட்கார்ந்திருந்த யட்சன் இந்தக் கதையை எழுதி விட்டு வேறே வேலை பார் என்று சொன்னான். நான் மரத்தடியில் பழம் கிடக்கிறதா என்று பார்க்கப் போனபோது அவன் கக்கரமுக்கர என்று கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி என்னை அழைத்தான் – ராமோஜி ஓய் ராமோஜி! சற்று கவனியுமையா. எனக்குத் தமிழ் சரியாகப் பேசவே தெரியாதபோது என்னத்தை எழுத என்று கேட்டேன் தரையில் உதிர்ந்து விழுந்த…
இந்து தமிழ் திசை – பொங்கல் மலர் 2020 சிறப்பு வெளியீட்டில் வெளியாகியிருக்கும் என் சிறுகதை ‘பொடி’ – முழு வடிவம் ——————————————————————— பொடி ஆபீஸில் திடீரென்று லீவு விட்டார்கள். இங்கிலீஷ் மண்ணுக்கும் பாரதபூமிக்கும் சகல சௌபாக்கியமும், ஜெயமும், மேழிச் செல்வமும், கோழி இறைச்சியும் தட்டாமல் கிடைத்தபடி இருக்க வழி செய்த விக்டோரியா சக்ரவர்த்தினியும், அவர்தம் மணாளர் ஆல்பர்ட் அரசரும் சந்தோஷமாக இருந்த நாள் இது. விக்டோரியா சக்கரவர்த்தினி பூவுலகில் அவதரித்த ஜன்ம தினம். ரெண்டு பேரும்…
நண்பர் ஸ்ரீதர் நாராயணனின் கத்திக்காரன் தொகுப்புக்கு நான் அளித்த முன்னுரை எழுத எப்படியோ, படிக்க, நாவலை விடச் சிறுகதைத் தொகுப்பு சிலாக்கியமானது. முன்னும் பின்னுமாக அங்கங்கே ஒவ்வொரு கதையாகப் படித்து அவ்வப்போது நிறுத்தித் தொடரும் வசதி நாவலில் கிட்டாது. காலமும், களமும், கருப்பொருளும் நடையும் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்திருந்தால், வாசிப்பனுபவம் எந்தக் குறையுமின்றிப் பிரவகிக்கும். ஸ்ரீதர் நாராயணனுக்குக் கைவந்த கலையாகச் சிறுகதை ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவகிக்கிறது. இந்தச் சிறுகதைத் தொகுப்பு பற்றி அவர் சொல்வது…