Archive For பிப்ரவரி 26, 2020

நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘ராமோஜி’ – சில பகுதிகள்

By |

நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘ராமோஜி’ – சில பகுதிகள்

excerpt from my forthcoming novel ‘Ramoji’ – being edited அப்பாஜி நினைவில் ————————— “நிச்சயம் பராசக்தி நிமிஷாம்பாள் அம்பா-வை தரிசிச்சு லோக ஷேமத்துக்காக ப்ரார்த்தனை செய்யணும். ஆனாலும், கற்பகாம்பா கிட்டே இன்னிக்கு வரேன்னு சொல்லிட்டு நிமிஷாம்பா கோவிலுக்குப் போகலாமா? நாளைக்கு சீக்கிரம் ஆபீசிலே இருந்து வந்துடறேன். சௌகார்பேட்டை கோவில் ஒண்ணு விடாம போவோம். இப்போ மயிலாப்பூர்”. நான் என் பங்கு நியாயத்தைச் சொன்னேன். சௌகார்பேட்டை போய்த் திரும்ப மெத்த நேரம் பிடிக்கும். யுத்த காலத்தில்,…




Read more »

ராமோஜி – எழுதப்படும் என் நாவலில் இருந்து – 1942 நகர் நீங்குதல்

By |

Excerpts from my forthcoming novel ‘Ramoji’ – awaiting edit 1942 எல்லார் நாக்கிலும் எவாகுவேஷன் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு எங்கள் வீட்டில் நானும் ரத்னாபாயும். தெருவில் முதல் வீட்டிலும், கடைசி வீட்டிலும் சேர்த்து நாலைந்து பேர்வழிகள் உண்டு. மற்ற வீடெல்லாம் கதவடைத்துப் பூட்டி திண்டுக்கல் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. பேட்டை முழுக்க ஆள் நடமாட்டம் உள்ள வீடுகளை விட பூட்டிய வீடுகள் அதிகமாகத் தட்டுப்படுகின்றன. பலசரக்குக்கடை, பெட்டிக்கடை, காப்பிக்கடை என்று வீடுகள் உள்வாங்க, வீட்டு…




Read more »

ராமோஜி – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து

By |

ராமோஜி – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து

excerpts from my forthcoming novel ‘Ramoji’ (being edited) டீ குடித்து விட்டு யுத்தத்தைத் தொடர்ந்து ஒரு தோளில் கனமான கதர்ப்பை. கையில் தூக்குப் பாத்திரத்தில் பலகாரம். நகரவே கஷ்டமாக இருந்தது. நடக்க வேறே வேண்டும். “விறுவிறுன்னு வாங்க”, ஆராவமுது நடக்க, பின்னால் நான். தண்டியில் உப்புக் காய்ச்ச மகாத்மா கூட இவ்வளவு வேகமாக நடந்திருக்க மாட்டார். இனியும் நடக்க வயது இடைஞ்சல் செய்யும். 1930-இல் அவர் நடந்து இப்போ பதினாலு வருஷமாச்சே. நான் கையில்…




Read more »

யானைக்கவுனி தாண்டுதல் – எழுதப்படும் என் புது நாவலிலிருந்து

By |

யானைக்கவுனி தாண்டுதல் மாதம் ஒரு தடவை மெட்றாஸில் இருந்து திருப்பதிக்கு நடந்து, அங்கே போய்த் தரிசனம் செய்து, திரும்பி நடந்தே மெட்றாஸ் வந்து சேர்கிறவர். ஆராவமுதன். மெட்றாஸிலிருந்து திருப்பதி கணிசமான தூரம். இது எப்படி சாத்தியம்? நான் அவரிடம் ஒரு முறை ஆர்வத்தோடு விசாரித்தேன் இரண்டு வருஷம் முந்தி ஒரு சாயந்திர நேரம் அது. ஆராமுது என்னைப் பக்கத்தில் உட்கார்த்திச் சொன்னது இது – ”உமக்கே தெரியுமே மதறாஸில் இருந்து திருப்பதி எண்பது மைல் தூரம். இது…




Read more »

எழுதிக்கொண்டிருக்கும் புது நாவல் ‘ராமோஜி’ – சில பகுதிகள்

By |

Excerpt from my forthcoming novel Ramoji மயில் குயிலாச்சுதடி அக்கச்சி சூப்ரண்டண்ட் பந்துலு சார் சுமாராகப் பாடக் கூடியவர் என்று கோட்டையில் பரவலாகப் பரவிய தகவல். அவர் பாட்டுப்பாட கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவறவிட மாட்டார். கோட்டையில் பிரிட்டீஷ் சக்கரவர்த்தி படம் போட்ட உறையில் வந்த சர்க்குலர், பைல்களுக்கு மஞ்சள் குங்குமம் தடவி பூஜையில் வைக்கும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்தில் ஒரு மன்னர் வாழ்த்து, ஒரு தெய்வ வாழ்த்து என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்…




Read more »

ராமோஜி – நான் எழுதிக் கொண்டிருக்கும் அடுத்த நாவலில் இருந்து

By |

1944 மார்ச் ”ரத்னா, என் சீமாட்டி, என் சக்ரவர்த்தினி, குட் மார்னிங்க். உன் பெயர் தினசரி பேப்பரில் வந்திருக்கே. பார்த்தாயோ. க்யாதி மிகுந்து விட்டாயடி பெண்ணே. ஆயிரம் அபிநந்தனம் சொல்லி உன் காலைப் பிடித்து நமஸ்காரம் செய்கிறேன்”. ஊஞ்சலில் ஜோடியாக அமர்ந்து, கையில் விரித்துப் பிடித்த வாரப் பத்திரிகையோடு ரத்னாவின் இடுப்பை வளைத்த நான், மனம் முழுக்க அடர்ந்து பொங்கிய பெருங் களிப்போடு சொன்னேன். “இது காலுமில்லை, அது டெய்லி பேப்பரும் இல்லை” என்று நானும் கூடச்…




Read more »