Archive For மார்ச் 4, 2020

எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி – பத்திரிகை ஸ்ட்ரைக் 1943

By |

எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி – பத்திரிகை ஸ்ட்ரைக் 1943

இன்று நியூஸ்பேப்பர் வரவில்லை. இந்தியா முழுக்க ஒரு பத்திரிகையும் நேற்று அச்சாகவில்லை. காலைச் சுற்றின சனி தானே ஒழிந்து போனதாக, பேப்பர் வராத இன்றைய தினம் வெகு அமைதியாக இருந்தது. நான் எசகு பிசகாகப் பிடித்திருந்த ஷேவிங் ரேசரைக் கைதவறித் தரையில் போட்ட சத்தத்தில் பிராணசகி ரத்னாபாயை விழித்தெழ வைத்த சைலன்ஸ் அது. விடா. பிளேடு பெயரைப் பார்த்தாலே பற்றிக்கொண்டு வருகிறது. சர்ஜிக்கல் எஃகு வைத்து செஞ்சது என்று பத்திரிகை விளம்பரம் சொல்லும். என்னமோ சத்ரசிகிச்சை –…




Read more »

ரேஷன் உலகம் – எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி

By |

ரேஷன் உலகம் – எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி

புரசைவாக்கம் போகும் ட்ராம் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. ஏறி உட்கார்ந்து முக்கால் மணி நேரத்தில் வீட்டுக்கு வந்தாகி விட்டது. அதுவரை இருப்புக் கொள்ளவில்லை. சைக்கிள் எடுத்து வந்திருந்தால் இன்னும் சீக்கிரமாகப் போயிருக்கலாம். பரவாயில்லை. போய்ச் சேர்ந்தால் சரி. வீடு பூட்டி இருந்தது. என்ன ஆச்சு? புருஷன் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று என்னை திராட்டில் விட்டு அவள் மட்டும் பட்டணத்திலிருந்து வெளியேற முடிவு செய்து, இச்சல்கரஞ்சியில் அம்மா வீட்டுக்குக் கிளம்பியிருப்பாளோ. சே, என்ன மட்டமான நினைப்பு. அவளுக்குச்…




Read more »

எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி – பைல்களின் உலகம் 1942

By |

எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி – பைல்களின் உலகம் 1942

ட்ராமில் போவதா, சைக்கிள் மிதித்து ஆபீஸ் போவதா என்று யோசித்து, ட்ராமே சரிப்படும் என்று முடிவு செய்தேன். ராத்தூக்கம் சீராக இல்லாமல், தலை கிறுகிறுத்து, உடம்பு சமநிலை தவறி ஒரு பக்கமாகக் கொண்டுபோய்த் தள்ளுகிற அயர்ச்சி அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டிருந்தது. அதோடு நீளநெடுக சைக்கிள் மிதித்து ஆபீஸ் போய்த் திரும்ப சிரமமாக இருக்கும். ட்ராம் என்னதான் மெல்ல ஊர்ந்தாலும் ஒன்பதரை மணிக்கு கோட்டைக்குள் நான் நுழையும்படியாக சேர்ப்பித்து விட்டது. ஒரு சிறிய கூட்டம் எதிர்பார்ப்போடு எனக்காகக் காத்திருந்தது….




Read more »

மீசை டாக்டர் நாயரும் காந்தியும் – எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலில் இருந்து

By |

மீசை டாக்டர் நாயரும் காந்தியும் – எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலில் இருந்து

பாரிஸ் ஸ்வீட்ஸ் கம்பெனியாரின் தேங்காய் துருவிப் போட்ட மெல்லிசுத் தட்டைச் சாக்லெட்களையும் முரமுரவென்ற பெரீஸ் வெண்ணெய் பிஸ்கட்களையும் ரத்னா மூக்குத் தூளுக்கு அடுத்தபடி நேசிக்கிறாள். பாலில் தோய்த்தால் விநோதமாக சீரக வாடை அடிக்கக் குழைந்து போகும் மில்க் ரஸ்க் கூட அவளுக்கு இஷ்டம் தான். வாராவாரம் வெள்ளிக்கிழமை ஆபீசில் இருந்து வரும்போது பிராட்வே பேக்கரிக்கடையில் இந்த உருப்படிகளை வாங்காமல் வருவதில்லை. இப்போதெல்லாம் ராயர் நெய்மிட்டாய்க் கடைக்குப் போவதில்லை. கடை அடைத்து வைத்திருக்கிறது. ஊர் பற்றி எரியும்போது, அல்வாவும்,…




Read more »

பெரீஸ் பிஸ்கட்டும் ஞாயிற்றுக்கிழமையும் அம்புலுவும் – ராமோஜி – என் புது நாவல்

By |

பெரீஸ் பிஸ்கட்டும் ஞாயிற்றுக்கிழமையும் அம்புலுவும் – ராமோஜி – என் புது நாவல்

மங்கலாக மின்னிக் கொண்டிருந்த நாலைந்து நட்சத்திரங்களும் ஒரு ராப்பறவையையுமாக ஆகாசப் பரப்பு கிடந்தது. நான் போர் விமானங்கள் எந்த வினாடியும் எங்கள் தலைக்கு மேலே பறந்து கம்பளம் விரித்தது போல் நெருக்கமாக எங்களைச் சுற்றிக் குண்டு வீசும் என்று எதிர்பார்த்து, ஷெல்டருக்குள், ரத்னா தோளில் தலை சாய்ந்திருந்தேன். ஒரு சத்தமும் இல்லை. ஒரு விமானமும் பறந்து போகவில்லை. அரைமணி நேரத்தில் விமானத் தாக்குதல் இல்லை என்று அறிவிக்கும் ஆல் க்ளியர் சைரன் கேவல் இன்றி நீண்டு தீர்க்கமாக…




Read more »

ராமோஜி : எழுதப்படும் என் புதிய நாவல் – சில பகுதிகள்

By |

ராமோஜி : எழுதப்படும் என் புதிய நாவல் – சில பகுதிகள்

Excerpts from my forthcoming novel, ‘Ramoji’ சைரன் ஒலித்த ராத்திரி —————————————- நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். கற்பகாம்பாள் சந்நிதியிலிருந்து பெரிய குருக்கள் கையில் தீபாராதனைத் தட்டோடு வெளியே வந்தார். “வாரும் ஓய் ராமோஜி. என்ன தேடிண்டிருக்கீர்?” அவர் கேட்டார். “இங்கே வெடவெடன்னு ஒரு சின்ன வயசுக் குருக்கள் நாயன்மாருக்கெல்லாம் தினசரி உடுத்தி விடுவாரே, இருக்காரான்னு பார்க்கறேன்.. அழுக்கு வேஷ்டி இல்லேயேன்னு அறுபத்து மூணு நாயன்மார்கள்.. சரி மூணு பெண் நாயன்மார்களை விட்டுடலாம்.. அறுபது நாயன்மார்கள்…




Read more »