Archive For மார்ச் 11, 2020
கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் 1943 டில்லியில் ரத்னாவின் மூத்த அண்ணன் மகள் புஷ்பவதியானதற்காக வீட்டு மட்டில் சுப நிகழ்ச்சி. அங்கிருந்து ஹரித்துவார் போய் வந்து வாரணாசி. வாரணாசியில் இருந்து மதறாஸ் திரும்புதல். முதல் கட்டமாக டில்லிக்கு இன்று சாயந்திரம் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் பயணம் வைத்து நானும் ரத்னாவும் புறப்பட்டாகி விட்டது. பஞ்சாங்கக்காரர் ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் ஆறு மணிக்கு தயிரும் சர்க்கரையும் குழைத்துச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பச் சொன்னதோடு இன்னொன்றும் குறிப்பிட்டார். வடக்கு நோக்கிப் பயணம். அவ்வளவு…
ஜெனரல் ஆஸ்பத்திரியை ஒட்டி பெரிய மருந்துக் கடை இருந்தது. டாக்டர் கேட்டிருந்த மருந்தெல்லாம் வாங்கியானது. மெழுகுவர்த்தி வாங்க பதினைந்து நிமிடம் கடை தேடி அலைந்து ஒரு வழியாகக் கிட்டியது. கேளப்பன் ’மெழுரியுண்டோ’ என்று மெழுகு வர்த்தி கேட்டது கடைக்காரர்கள் அப்படி ஏதும் இல்லை என்று கை விரிக்கக் காரணமாக இருந்திருக்கலாம். மருந்து, மெழுகுவர்த்தியோடு ஆஸ்பத்திரிக்குள் ஓடினேன். மீசை நாயர் டாக்டர் நல்லவேளையாக இன்னும் அங்கே தான், கைக்கடியாரத்தைப் பார்த்தபடி, நின்றிருந்தார். “ஷி இஸ் ஆல்ரைட்.. நாளைக்கு இன்னொரு…
மதியம் கேண்டீனுக்கு முழு ஆபீசுமே படை எடுத்திருக்க நான் எண்களின் பிரவாகத்தில் அடித்துப் போகப்பட்டேன், இலக்கு உணர்ந்த வெள்ளப் பெருக்கு அது. ஒன்றும் மற்றதும் மற்றதும் அடுத்ததும் அடுத்ததும், பிறவும் எல்லாம் ஒருபோல் ஒரே கூட்டுத் தொகையை எடுத்தியம்பி வாழ்க்கையில் களிபேருவகை கொண்டு, கூகூவென மகிழ்ந்திருக்க வைப்பதே ஆகும் அது. மணி பார்த்தேன். பிற்பகல் மூன்று. சாப்பிட்டு வேலை பார்த்த களைப்பு தீர ஒரு கூட்டம் மறுபடி கேண்டீனுக்குக் காப்பியும் டீயும் தேடிப் போய்க் கொண்டிருந்தது. நேரம்…
ஆபீசில் வேறு யாரும் வந்திருக்கவில்லை. இன்றைய கார் சவாரி பற்றிய கிண்டலும், கேலியும், பாராட்டும், அடுத்து என்ன ஆகும் என்ற ஆருடமும், வரப்போகும் புது வருஷ புரமோஷன்கள் பற்றி ஊகங்களும் என்று எல்லாமே கலந்து கட்டியாக மதியச் சாப்பாட்டு நேரத்தில் கேண்டீன் வாசலிலும், பின்னால் நின்று டெனார் சிகரெட் குடிப்பவர்கள் குழுவிலும், வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவுகிறவர்களின் பெருங்கோஷ்டியிலும் பரிமாறப்பட்டு விவாதிக்கப்படும். நான் இல்லாதபோது என்னைப் பற்றி என்ன விமர்சித்தார்கள் என்பதை வேறு யாரோ பற்றி என் காதில்…
நான் ரத்னாவிடம் சொன்னேன் – ஆறுமுக ஆசாரியார் பிறந்தபோது நல்லா சத்தமா பேச வரணும்னு அவங்க வீட்டுலே ஒரு பலம் கோரோஜனையை பால்லே கரைச்சு கொடுத்தாங்களாம். அது போதாம சுமார் சைஸிலே ஒரு கடப்பாரையும் முழுங்கிட்டாராம். வால்யூம் கண்ட்ரோல் அவுட். அவராலே சத்தத்தை குறைக்கவே முடியாது. அவர் கார் ஸ்டீரிங்கில் இருந்து கையை எடுத்து ரத்னாவை நமஸ்கரித்தபடி சொன்னது இது – எல்லாம் சரிதான். பெயரை ராங்கா சொல்லிட்டார் சார். நான் ஆறுமுக ஆசாரி இல்லே. ஆறுமுகத்தா…
நான் குளித்துக் கொண்டிருந்தபோது வாசலில் பூம் பூம் என்று கார் ஹாரன் சத்தம் காதில் விழ, சாடி நொடியில் குற்றாலத் துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு, வந்தாச்சு என்று குரல் கொடுத்தபடி சொட்டச் சொட்ட நனைந்து ஓடி வந்தேன். ரத்னா, இதேது கோமாளித்தனம் என்று கையில் எடுத்த கீரை கடையும் மத்தோடு ஸ்தம்பித்து நின்று, பக்கவாட்டுத் தோற்றத்தில் அழகாக ஆச்சரியப்பட்டாள். ஆறுமுக ஆசாரியாரே, வந்தாச்சு. நீர் ஒன்பது மணிக்கு அப்புறமல்லவோ வருவதாகச் சொன்னீர் என்று கூறியபடி நான்…