Archive For மார்ச் 20, 2020

1944 – ஒரு ரயில் பயணம் : எழுதி வரும் நாவல் ‘ராமோஜி’யில் இருந்து

By |

ஒரு ரயில் உத்யோகஸ்தன் ஒவ்வொரு தடுப்பாக நின்று, ராத்திரி சாப்பாடு வேணுமா என்று பிரியமாக விசாரித்துக் கொண்டிருக்க, எனக்கு ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. ரயில்வேக்காரர்கள் ரயிலில் ஏற வந்தால் தான் பிரயாணம் செய்யாதே என்று பயமுறுத்தித் துரத்தி விடுவார்கள். எப்படியாவது அடித்துப் பிடித்து வண்டியேறி விட்டால், என்ன கரிசனம். சாப்பாடு வேணுமா? வேணும் என்று சொல்ல வாயைத் திறந்தேன். காலில் பலமாக மிதித்து ரத்னா என்னைப் பேசவொட்டாமல் செய்தாள். பாட்டியம்மா மகன், ”சாப்பாடு பற்றி கேட்கிறீங்களே, என்ன…




Read more »

மதறாஸ் – புதுடெல்லி 1944 – கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ்

By |

மதறாஸ் – புதுடெல்லி 1944 – கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ்

பாட்டிக்கு கண்ணீர் வராவிட்டாலும் தலையில் கை வைத்து மடியில் தண்ணீர்ச் செம்போடு உட்கார்ந்திருந்தது பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவள் மகன் குழந்தையைத் தோளில் சுமந்து எங்கள் பக்கம் வந்தான். “அம்மா இப்படித்தான் தத்து பித்துன்னு ஏதாவது சொல்லி ரசாபாசம் ஆயிடும். ராமேசுவரத்திலே கோவில் வாசல்லே பூக்காரி ஜவ்வந்திப் பூமாலை கட்டித் தந்தபோது, ஏண்டியம்மா தீண்டலுக்கு ஒதுங்கினியோன்னு கேட்டு தெருவையே ஸ்தம்பிக்க வச்சுட்டா” என்றான். அவன் வீட்டுக்காரி, “ஐயோ, இதை விஸ்தரிச்சு வேறே சொல்லணுமா?” என்று பாதி புகார்…




Read more »

கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் 1944 – வாராங்கல் ஸ்டேஷனில் (எழுதி வரும் ராமோஜி நாவலில் இருந்து)

By |

நார்மடிப் புடவை என்று மதறாஸ் ராஜ்யத்தில் சொல்லப்படும், பிராமண விதவைகளுக்கான புடவையை மடிசார் போல் அணிந்து, மொட்டைத் தலையைப் புடவைத் தலைப்பால் மூடியிருந்தாள் அந்த முதியவள். ரத்னா கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக, கையில் எடுத்துக் கடித்த வடையை இலையில் வைத்து விண்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவள் கம்பார்ட்மெண்டில் ஏறியதும், “இங்கேயா போகணும்? யாரோ மீன் மாம்சாதிகள் போஜனம் பண்றாளே” என்றபடி ரத்னாவைப் பார்த்தாள். அவள் கையில் ஒரு சிறு ஸ்தாலி செம்பில் தண்ணீர். மருமகள், பட்டுத்துணி வாய்ப்புறத்தில்…




Read more »

எழுதிக் கொண்டிருக்கும் புது நாவல் : ராமோஜி : வாராங்கல் ஸ்டேஷனில் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் 1944

By |

(எழுதிக் கொண்டிருக்கும் ‘ராமோஜி’ நாவலில் இருந்து) விஜயவாடாவில் பஞ்ச பஞ்ச உஷத்காலமான காலை நாலு மணிக்குச் செய்ய எதுவும் இல்லாமல் நானும் ரத்னாவும் மறுபடி உறங்க முயற்சி செய்ய ரயில் சக்கட சக்கட என்று தொடர்ந்து ஒரே தாளத்தில் பாடித் தாலாட்டியது. கண் முழித்தால் வாராங்கல் ஸ்டேஷனில் ரயில் ஏகக் கோலாகலமாக நுழைந்து கொண்டிருந்தது. விடிந்த சுருக்கில், அழகான காலை ஆறரை மணி. பல் துலக்கி வந்தேன். ரயிலுக்குப் பக்கமாக, கம்பார்ட்மெண்டுக்கு பத்தடி தள்ளி ப்ளாட்பாரத்தில் பெரிய…




Read more »

யாத்ரா சர்வீஸ் – எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘ராமோஜி’யில் இருந்து

By |

யாத்ரா சர்வீஸ் – எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘ராமோஜி’யில் இருந்து

யாத்ரா சர்வீஸ் ————————————————————————– நைனியப்ப நாயக்கன் தெருவில் இரு மத்திய வயசுத் தெலுங்கர்கள் ஒரு கம்பேனியை போன வருஷம் தொடங்கி இருக்கிறார்கள். காசி, ஹரித்வார், வட மதுரை இப்படி புண்ணிய ஸ்தலங்களுக்கு அவரவர்கள் ரயில் டிக்கெட்டு வாங்கி, பிரயாணத்தை அவரவர் மட்டுக்கு சௌகரியமாக்கிக் கொள்வது என்ற நடைமுறை உண்டல்லவா? அதற்கு மாறாக கோஷ்டி அடிப்படையில் ஸ்தல யாத்திரை போவது பற்றிய பிரஸ்தாபத்தை இந்தக் கம்பேனி செய்கிறது. அதற்கு நிறைய துணிச்சல் வேண்டும். யுத்த காலத்தில் பயணத்தைத் தவிர்ப்பீர்…




Read more »

எழுதி வரும் நாவல் ‘ராமோஜி’ : 1943-இல் ஓர் இரவு

By |

எழுதி வரும் நாவல் ‘ராமோஜி’ : 1943-இல் ஓர் இரவு

சுற்றி வர மதறாஸ்லே எங்க வீட்டை ஒட்டி இருக்கப்பட்ட வீடு, எங்க தெரு, அடுத்த தெரு இப்படி சிநேகிதமா இருக்கப்பட்டவங்களோட குரல் எல்லாம் கேட்டபடி இருக்கு. கூடவே மீசை டாக்டர் நாயர் சார் குரலும் மனசுக்கு ஆறுதலா கேக்குது. அவர் யாருக்கோ ஊசி போடறார். இருட்டிலே அது யார்னு தெரியலே. என்னப் போல அச்சு அசப்பிலே இருக்கப்பட்ட ஒரு பெண். அவளுக்கு இஞ்செக்ஷன் போட்டா எனக்கு எறும்பு கடிச்ச மாதிரி வலிக்குது. இல்லே அங்கே படுத்திருக்கிறது நான்…




Read more »