Archive For மார்ச் 27, 2020
இது என்ன பார்க்? கொக்கு பார்க் என்று சிரித்தாள் பூர்ணா. நான் திரும்பிப் பார்த்தேன். பச்சைப் பசேல் என்று மாம்பலத்தில் பனகல் பார்க் மாதிரி, அதைவிட அழகான மரம் நிறைந்த, புல்வெளி கூடிய, ஒரு பார்வைக்கு முக்கோணமாகத் தோன்றும் பூங்கா. வாசலில் கொக்கு சுதை உருவம் வைத்திருந்தது. சீதோஷ்ண நிலையும் அற்புதமானதாக இருக்க, வியர்ப்பும் குளிருமில்லாத ஸ்திதியில் இங்கே பத்து நிமிடம் உட்கார்ந்து வர மனசு கூப்பாடு போட்டது. அவர்களோடு பார்க்குக்குள் நுழைந்தேன். உள்ளே நடைபாதையை ஒட்டிப்…
சுருக்கமாகச் சில விஷயங்கள் 1) எழுதி வரும் நாவலின் பெயர் ‘ராமோஜியம்’ என்று மாற்றப்படுகிறது. இதுவும் tentative தலைப்புத்தான் 2) எழுதியதில் 30 -40% இங்கே அவ்வப்போது சிறு நாவல் பகுதிகளாகப் பகிர்ந்து கொள்கிறேன். நாவல் எழுதி எடிட் செய்து புத்தகமாக வெளியாகும்போது முழு வடிவம் படிக்கக் கிட்டும். 3) சாப்பாடு அடிக்கடி நாவலில் வருகிறதே. ஆமாம், வரும். ராமோஜி போஜனப் பிரியன். 4) உலகமே கொரோனா வைரஸ் கவலையில் இருக்கும்போது, புது நாவல் எதற்கு? கவலையோடு…
ரயிலில் சும்மா உட்கார்ந்து வந்தாலும், தூங்கி விழித்து சாப்பிட்டு மறுபடி தூங்கி ரெண்டு ராத்திரி ரெண்டு பகல் வந்தாலும், ஏதோ சாரத்தில் கல்லும் மண்ணும் சுமந்து எடுத்துப்போய் இடுப்பொடிய வேலை பார்த்த மாதிரி அசதி. சுமித்ரா அண்ணி வேறே வயிறை வஞ்சிக்காமல் சரபோஜி மகாராஜா அரண்மனை விருந்து போல சமைத்து வைத்து சாப்பிடச் சொன்னாள். மூன்று மணி நேரம் அடித்துப் போட்டது போல் தூங்கியிருக்கிறேன். சாயந்திரம் ரெண்டும் கெட்ட ஆறேகாலுக்கு எழுந்திருந்த போது ரத்னா பேஸ்ட் வேணுமா…
”இந்தத் தெரு திரும்பி நேரே ஒரு மைல் போனா நம்ம வீடுதான்.. கரோல்பாக் வந்துடும்” என்றான் பீமாராவ். ”தமிழ்நாட்டிலே இருந்து யார் ஷார்ட் ஹாண்ட், டைப் ரைட்டிங் ஹையர் இல்லே லோயர் சர்டிபிகேட்டோட வந்தாலும் இங்கே ஏதாவது மினிஸ்ட்ரியிலே வேலை கிடைச்சிடும்.. என்னை மாதிரி வாய் வார்த்தை, டைப் ரைட்டிங் மட்டும் தெரிஞ்சிருந்தாலும் அதுக்கு ஏத்த மாதிரி மினிஸ்ட்ரி வேலை இல்லாட்ட ப்ரைவேட் கம்பெனி உத்தியோகம்னு டெல்லியிலே வேலைக்கு பஞ்சமே இல்லை .. டைப் ரைட்டிங் எந்த…
கரோல்பாக் மார்க்கெட்டில் சுமங்கலி ஸ்டோர்ஸ் என்று கோணல் மாணலாகத் தமிழிலும், அச்சடித்தது போல் இந்தி, இங்க்லீஷிலும் பெயர்ப் பலகை வைத்த கடை வாசலில் நின்றோம். சுமங்கலி ஸ்டோர்ஸில் முதல் பார்வைக்கு வரிசையாக பிள்ளையார் கோவிலில் நேர்ந்து கொண்டு சூரைத் தேங்காய் போடக் கொண்டு வந்து குவித்தமாதிரி தேங்காய்கள் பெரும் குவியலாகக் கண்ணில் பட்டன. தண்ணீர் வைத்த கும்பாக்களில் வெற்றிலை முழுக்க அமிழ்ந்திருந்தது. தமிழ்ப் பத்திரிகைகள் மெட்றாஸில் இருந்து சுடச்சுட அனுப்பப்பட்டு தூசி உதிரும் ஷெல்ப்களில் ஓரமாக வெண்சாமரம்…