Archive For ஏப்ரல் 4, 2020

ராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து – ராமோஜி கடிதங்கள் 1945

By |

ராமோஜியம் நாவலில் இருந்து – கடிதங்கள் பகுதி 1940-களில் பிரிட்டீஷ் சர்க்கார் இந்தியப் பத்திரிகைகளில் ‘சிக்கனம் பேணுவோம்’ என்று மக்களைச் சிக்கன நடவடிக்கைகளைக் கைக்கொள்ளச் சொல்லி விளம்பரம் கொடுத்தது. இதைப் பற்றி கும்பகோணம் விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து. 1945-ல் தமிழில் எழுதப்பட்டது இந்தக் கடிதம்(சக்கரவர்த்திகள் எப்படியாவது படித்துக்கொண்டு விடுவார் என்று நம்பிக்கை) பூவுலகம் எல்லாம் அரசாளும் மாட்சிமை மிகுந்த சக்கரவர்த்தி அவர்களுக்கு கும்பகோணம் டீ போர்ட் ஏஜண்ட் விட்டோபா எழுதுவது. Safe….




Read more »

’ராமோஜியம்’ புதினத்தில் இருந்து – ராமோஜி கடிதங்கள் 1945

By |

ராமோஜி கடிதங்கள் – 1945 மதிப்புக்குரிய மதறாஸ் ரேடியோ ஸ்டேஷன் டைரக்டர் சார், பூரண சௌக்கியம். உங்கள், ஆபீஸில் மற்ற சிப்பந்திகளுடைய சௌகர்யம் தெரிவிக்க வேண்டியது. நேற்று ராத்திரி மகாவித்வான் டி என் ராஜரத்தினம் பிள்ளைவாள் நாகஸ்வரக் கச்சேரி கேட்பதற்காக ரேடியோவை ஆன் செய்தேன். என் பிரியமான மனைவி ரத்னா பாய் அருகிலேயே வந்து நின்றாள். கச்சேரி கேட்க இல்லை. அவளுக்கு கர்னாடக சங்கீதத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லை. அபங்க் என்ற மராத்தி பஜனைப் பாடல்களை ரெக்கார்டுகளில்…




Read more »

From the forthcoming RAMOJIUM – Kumbakonam 1935

By |

விட்டோபா கூட ஆச்சரியப்பட்டார் – “என்ன சார், வேறே வேலை இல்லேன்னா துக்காம்பாளையத் தெருவிலே டீ போடலாம்னு கிளம்பிடுறீங்க..” ரத்னாவிடம் சொல்ல அந்த சிரிப்புக் குப்பி இதற்கும் சிரித்தாள். ”இப்படி சிரிச்சுச் சிரிச்சு மனசுலே உட்கார்ந்தாச்சு .. அடுத்த வாரம் ஊருக்கு போறேங்கறே.. அப்புறம் எப்படி நம்ம சிநேகிதம் வளரும்?” காந்தி பார்க்கில் கூட்டம் ஓய்ந்த பின்மாலை நகர்ந்து முன்னிரவு சூழும் பொழுதில் அவளுக்கு உள்ளங்கையில் அவசரமாக ஒரு முத்தம் கொடுத்து விட்டுக் கேட்டேன். எனக்குப் பின்னால்…




Read more »

‘ராமோஜியம்’ – உருவாகி வரும் புதினத்தில் இருந்து – 1935

By |

‘ராமோஜியம்’ – உருவாகி வரும் புதினத்தில் இருந்து – இரண்டே மாதத்தில் ஊரும் ஊர்க்காரர்களும் நல்ல பழக்கமாக விட்டோபா இரண்டாம் காரணம். டீ முதல் காரணம். நான் பேண்ட் சட்டை ஷூவில் இருந்து வேட்டிக்கு மாறி ஊரோடு ஒத்து வாழத் தொடங்கியது மூன்றாம் காரணம். கிட்டத்தட்ட ஊர்ப் பிரமுகர் அந்தஸ்து டீ பீல்ட் ஆபீசருக்கு அங்கே. பக்கத்தில் சக்ரபாணி கோவிலுக்குப் போனாலோ இல்லை காலை வீசிப் போட்டு ஆதி கும்பேஸ்வரர் கோவில் மொட்டைக் கோபுர வாசலுக்கு வந்தாலோ,…




Read more »

ராமோஜியம் – புதினத்திலிருந்து – தேநீர் உபசாரம் 1935

By |

நான் டீ பாக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அலை பாய்ந்தேன். ”டீ ஆபீசர், என்ன உங்க பிரச்சனை?” கங்கா கூர்த்த நாசி முனையில் சிரிப்பு எட்டிப் பார்க்கக் கேட்டாள். நான் சொல்லலாமா வேண்டாமா என்று ஒரு வினாடி தயங்கி, ”பால்லே டீதூளைப் போட்டு காய்ச்சணுமா, தண்ணீலே டீத்தூளைப் போட்டுக் காய்ச்சணுமா?” என்று கேட்டேன். “அதானே, டீ ஆபீசர்னு அனுப்பறவங்க டீ குடிச்சது கூட இல்லேன்னு அடுத்து வருமோ?” என்று ரத்னா உதட்டைக்…




Read more »

ராமோஜியம் – பல்லாங்குழியில் பசுவாக வழித்து வாரி – கும்பகோணம் 1935

By |

கும்பேஸ்வரர் கோவிலில் ஏனோ கூட்டமில்லை. பத்து இருபது பேர் குளித்துத் தொழ வந்திருந்தார்கள். நான் ஷூக்களை கோபுர வாசல் தேங்காய்க் கடையில் விட்டுவிட்டு அர்ச்சனைத் தட்டு வாங்கிக்கொண்டு உள்ளே போனேன். கும்பேஸ்வரர் சந்நிதியில் கும்பிட்டு எதிரில் நோக்க, பெண்கள் பகுதியில் இரண்டு பேர் – ரத்னாவும் கங்காவும். தட்டை அர்ச்சகரிடம் கொடுத்து நிற்க, பெயர், நட்சத்திரம் சொல்லுங்கோ என்றார். லோக ஷேமத்துக்காக, எல்லா நட்சத்திரமும் என்று சொல்லிவிட்டு ரத்னாவைப் பார்த்தேன். வினாடி நேரம் திரும்ப நோக்கி, ஒரு…




Read more »