Archive For ஏப்ரல் 16, 2020

என் அடுத்த புதினம் ராமோஜியம் – சந்திக்க வந்த சக்கரைச் செட்டியார்

By |

எனக்கென்னமோ லண்டனை ஒரு மாறுதலுக்காக விட்டுவிட்டு, ஜெர்மன் விமானங்கள் இவ்வளவு தொலைவு பறந்து வந்து, மெட்றாஸில் பிளிட்ஸ்கிர்க் என்ற அதிரடித் தாக்குதல் நடத்தத் திட்டம் போட்டு, அது வெளியே கசிந்து விட்டதோ என்று தோன்றியது. ஆனால் ஜனங்கள் இப்போது கொஞ்சம் போல் துணிச்சல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏப்ரலில் ஜப்பான் விமானம் மதறாஸை நொறுக்கித் தூசாக்கப் போகிறது என்று பட்டணத்தைக் காலி செய்து கொண்டு ஓடியது அநாவசியம் என்று இப்போது தெரிகிறது. இனி ஜெர்மனியோ ஜப்பானோ வாசலில் வந்து…




Read more »

ராமோஜியம் புதினம் –இன்னொரு 1942 அத்தியாயம் –மதறாஸ் : சில பகுதிகள்

By |

ராமோஜியான நான் செயிண்ட் ஜியார்ஜ் கோட்டையில் அமைந்த என் ஆபீஸில், எனக்கான உத்தியோகபூர்வமான நாற்காலியில் இருந்து பென்ஷன் கணக்குகளைப் பார்த்தபடி பென்சிலை வாயில் கடித்துக் கொண்டிருந்தபோது சூப்பரிண்டெண்ட் பந்துலு என் கீகடமான இருப்பிடத்திலிட்ட மேஜைப் பக்கம் வந்து விட்டார். ”ஏமி ஐயா ராமோஜி, இதென்ன பென்சில் கடிக்கற பழக்கம்? என் பிள்ளை சத்யா இருக்கானே, தேர்ட் ஃபாரம் படிக்கறவன் .. சீமந்த புத்ரன் .. அவன் வச்சு எழுதின பென்சிலை விட பல்லாலே துருவித் துருவித் தின்னது…




Read more »

நான் எழுதி வரும் ‘ராமோஜியம்’ புதினத்தில் கும்பகோணம் அத்தியாயம் – நிறைவுப் பகுதி

By |

ரத்னா கண் கலங்கினாள். பீமா அசந்திருந்த ஒரு வினாடி சுமித்ரா கண்காட்ட அருகில் நின்ற என்னிடம் காதில் சொன்னாள் ரத்னா – “என் ராஜா.. சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிப் போயிடு.. உன்னையே நினைச்சிட்டிருப்பேன்”. “வந்துடறேண்டா. அழாம போ. அப்புறம் அந்த முகம்தான் சதா நினைவிலே எனக்கு வரும்”, என்றேன் கண் நிறைந்து நிற்க. அபத்தமாகத் தெரியும். ஆனால் இந்த வார்த்தைகளின் ஆத்மார்த்தம் வேறெதிலும் வராது. ரயிலோடு கிறுக்கன் போல் அவுட்டர் வரைக்கும் ஓடினேன். அன்றைக்கு் உடம்பு…




Read more »

மெக்கால் ஸ்மித்தும் தேவனும்

By |

ஒரு சேஞ்சுக்காக இன்றைக்கு ராமோஜியம் நாவல் எழுத வேண்டாம் என்று வைத்து, அமர்ர் தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ படித்துக் கொண்டிருக்கிறேன். எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியரும் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளருமான அலக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதிய ‘The No, 1 Ladies Detetctive Agency’ போன்ற நூல்களைக் கொண்டாடி விட்டு தேவனின் துப்பறியும் சாம்பு படிக்கும்போது தேவனின் சிறப்பு புலப்படுகிறது. என்ன அற்புதமாகத் துப்பறியும் கதைகளை வளமான கற்பனையும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து எழுதியிருக்கிறார். அதுவும் எண்பது…




Read more »

ராமோஜியம் நாவலில் இருந்து – ராமோஜி கடிதங்கள் 1945

By |

அருள் வாக்கு நிகழ்ச்சியில் மடாதிபதிகளோ, பாதிரியார்களோ, மௌல்விகளோ நல்ல சிந்தனை என்று ஐந்து நிமிடத்தில் சொல்கிறார்கள். போன வாரம் புதனன்று சைவ மடாதிபதிகள் அருள் வாக்கு சொல்லும்போது மாசில் வீணையும் மாலை மதியமும் என்று ரயில் வேகத்தில் சொல்லிப்போய் ஈசன் இணையடி நிழல் அமைதியும் அழகும் மிக்கது என்றார். அந்த வேகத்தில் பேசினால் அப்பர் சுவாமிகளுக்கே அவர் தேவாரம் புதியதாக புரியாததாகக் கேட்கும். என் போன்ற சாமானியனுக்கோ? அடுத்த நிகழ்ச்சிக்காக காத்திருப்பதைத் தவிர வேறே என்ன மார்க்கம்…




Read more »

ராமோஜி கடிதங்கள் – 1945 ராமோஜியம் புதினத்தில் இருந்து

By |

இந்த நடிகர்களை எல்லாம் விட சிறப்பாக செயல்படுகிற ஒரு அற்புதமான உத்தியோகஸ்தரை உங்கள் ரேடியோ ஸ்டேஷன் சம்பளத்துக்கு எடுத்திருக்கிறது என்பது பற்றி நீங்கள் நிஜமாகவே பெருமைப்படலாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் பலவேசம் பிள்ளை அவர்கள் தான் அந்த அற்புதமான கலைஞர். காலையில் பெயர் அறிவிக்காமல் நிலைய வித்வான் என்று பொதுவாக அறிவித்தாலும் ஸ்ரீவிலி.பலவேசம் குரல் அல்லா அல்லா என்றோ கிருஷ்ணா கிருஷ்ணா என்றோ, சமயத்தில் அடுத்தடுத்துமோ உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும். செய்தி விமர்சனத்தில் புதிதாகப் பதவி ஏற்ற பிரிட்டீஷ் பிரதமர்…




Read more »