Archive For ஏப்ரல் 22, 2020
இந்தக் காலம் என்கிற விஷயம் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று. சில பொழுது, ஒரு யுகம் போன மாதிரி ஒரு மணி நேரம் மிக மெல்ல ஊர்ந்து போகும். இன்னும் சில நேரம் காலம் முன்னால் போய் சட்டென்று நின்று கொஞ்சம் பின்னால் போய் கண் விழித்துப் பார்ப்பதற்குள் மறுபடி முன்னே போக இதெல்லாம் ஏற்கனவே நடந்ததே என்று குழம்ப வைக்கும். சில பொழுது இமை நேரத்தில் ஒரு மாசம் போய் விடும். அது போனது கூடத்…
”இன்னிக்கு ஏ ஆர் பி டியூட்டி இல்லைதானே?” எங்கே நான் மறந்துவிட்டேனோ என்று நினைவு படுத்திக் கேட்டாள். இல்லை என்றேன். இந்த வாரத்துக்கான நாலு இரவு ரோந்தும் நான் முடித்திருக்கிறேன். பார்க் போய் விட்டு வரும்போது சுபாங்கி அம்மாள் வீட்டு வாசலில் இருந்து ரத்னாவைப் பார்த்துக் கேட்டாள் – “ஏண்டி பொண்ணே, ரேஷன்லே உளுத்தம்பருப்பு நாளைக்கு போடறாங்களாம். போகலாமா?” ஏதோ ரேஷனில் ஆளுக்கு ஒரு பவுன் மோதிரம் வெகுமதியாகக் கொடுப்பது போல் இரண்டு பெண்மணிகளும் வெகுவாக சந்தோஷப்பட்டார்கள்….
காபி எடுத்து வந்தபோது ”உடனே கிளம்பு, பார்க் போகலாம்” என்றேன். போகலாமே என்றாள் ரத்னா, முகம் மலர்ந்து. அவள் காலையில் நான் நடந்து கொண்டதை மறந்து எப்போதும் போல் ஆகியிருந்தாள். ”இந்த டைப் இன்ஸ்டிட்யூட் பத்தி எதிர்வீட்டு விலு என்ன சொன்னா தெரியுமா?” விலுவாமே. ஜாக்கிரதையா இருக்கணும். இவ சொல்றாளேன்னு நானும் விலுன்னு சொன்னா, நேர்லே போய் கொஞ்சுங்க என்று படாரென்று முகத்தில் அறைந்தது போல் சொல்லி விட்டுப் போயே போய் விடுவாள். ”என்ன சொன்னாங்க அந்த…
ரத்னாவிடம், ஏதோ சாதனை செய்த மாதிரி, கையில் பிடித்திருந்த காகிதத்தை நீட்டினேன். “இது எதுக்கு எனக்கு டைப் அடித்த காகிதம்? தெலக்ஸ் புவனாவை வச்சுக்க என் சம்மதம் கேக்கறீங்களா?” என்று கேட்கவில்லை. என் சிரிப்பைப் பார்த்து அவளும் சிரித்தாள். ”தெருவிலே கிடக்கிற காகிதத்தை எல்லாம் ஏ ஆர் பி வார்டன் பொறுக்கி எடுக்கணுமா என்ன?” என்றாள். ”சாப்பிட என்ன பண்ணியிருக்கே அன்பே, வயிறு இரையுது” என முறையிட்டேன். உப்புமா குழக்கட்டையும் புளிச் சட்டினியுமாம். அவள் சொல்லி முடிக்கும்…
”சார், புவனா உங்க அத்தங்கா காருவா?” ”பின்னே இல்லியா?” ”சார், கண்ணே பட்டுடும்.. அதான் முன்னாடி சொல்லல்லே.. புவனாவை பார்க்க இன்னும் நூறு தடவை தசாபதி பார்ப்பேன்..” நான் புவனா தாசனாக நெக்குருகி நின்றேன். பந்துலு சந்தோஷமடைந்து பெருந்தெய்வத்தின் ஆராதகனான சிறு தெய்வமாக வாய் மலர்ந்தார் – ”உம்மை ஒரு தடவை அத்தங்கா வீட்டுக்குக் கூட்டிப் போறேன்..” நான் கன்னத்தில் போட்டுக்கொண்டு அவரைத் தொழவோ புவனாவை அவரில் கண்டு முத்தமிட்டு அணைக்கவோ செய்யாமல் நன்றி சொல்லி ஆபீஸ்…
நாலு மணிக்கு வீட்டுக்குப் போகிறேனா என்று பார்க்க சூப்பரிண்டெண்ட் பந்துலு சார் சீட்டுக்கு வந்துவிட்டார். இதோ போறேன் சார் என்று அவசரம் காட்டி சாப்பாட்டுப் பையில் ஸ்பூனைத் தேடி எடுத்து மறுபடி உள்ளே போட்டேன். நெய் வாசனை அடிக்க இன்னும் ரெண்டு கரண்டி அவல் கேசரி, ரத்னா கை கிண்டிய அமிர்தம் உள்ளே பாக்கி இருந்ததை போகிற வழிக்குப் புண்ணியமாகத் தின்றபடி கிளம்ப உத்தேசம். “நானும் இன்னிக்கு சீக்கிரமே கிளம்பறேன்.. இன்னிக்கு எங்க அத்தங்கா வீட்டுக்குப் போகவேண்டியிருக்கு”…