Archive For ஏப்ரல் 25, 2020
காலையில் மழை விட்டு வானம் வெளிறி இருந்தது. கையில் காப்பிக் கோப்பையுடன், தினமணி பேப்பர் படித்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். ”என்ன சார், உங்க வீட்டுலே ப்யூஸ் போகலியா?”. ஓவென்ற இரைச்சலாகப் பேச்சு சத்தம். எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடுதான். அவருக்கும் ரத்னாவிடம் சொல்லி ஒரு காப்பியை வரவழைத்தேன். மகிழ்ச்சியாகக் குடித்து விட்டு ஊர் வம்புக்குத் தாவினார் மணவாள நாயுடு. “சார் ஜப்பான் ப்ளேன் குண்டு போட வந்தா ஓன்னு சங்கு பிடிக்கணும்னு உங்களைப் போல ஏ ஆர் பி…
மேற்கே தங்கப்பன் முதலாளி வீட்டு காம்பவுண்டில் ஏதோ வெளிச்சம் மின்னி மின்னி வந்து போனது. டார்ச் வெளிச்சம். உளுந்து கடத்தல் ஆரம்பமா? அடுத்த விநாடி விளக்கு வந்தது. தங்கப்பன் முதலாளி வீட்டு காம்பவுண்டில் இரண்டு பேர் சிரமத்தோடு ஒரு சாக்கு மூட்டையை வெளியே சிறு மோட்டார் வேனில் ஏற்றுவது தெரிந்தது. வேன் சத்தமிட்டுக் கிளம்பும் ஓசை. விளக்கை அணைத்து விட்டு வந்தேன். ஒரு மணி நேரம் கழித்து, குளித்து, ராத்திரி ஒன்பதுக்கு, ஏ ஆர் பி வார்டனாக…
வயிறும் மனதும் நிறைய தெலக்ஸ் புவனாவுக்கு நன்றி சொல்லும்போது சட்டென்று பொறி தட்டியது. வரும் செவ்வாய்க்கிழமை ரத்னா எங்கள் வீட்டில் சத்யநாராயண பூஜை வைத்திருக்கிறாள். உடனே ஒரு யோசனை. “மேடம், செவ்வாய்க்கிழமை எங்க கிரஹத்துக்கும் நீங்க வந்திருந்து சிறப்பிக்கணும்.. என் சார்பிலேயும் என் மனைவி ரத்னாபாய் சார்பிலேயும் கேட்டுக்கறேன்.. ஜோசியர் வீட்டுக்கு எதிர்லே தான்.. சொன்னேனே.. ஒரு நிமிஷம் ஒகடி ஒக நிமிஷமு..”. எனக்குத் தெரிந்த தெலுங்கு அவ்வளவுதான். ”ஓ அதுக்கென்ன வரலாமே. இந்த மேடம் எல்லாம்…
உள்ளே இருந்து நடு வயது அம்மையார் ஒருவர், கொஞ்சம் சுபாங்கி அம்மாள் ஜாடையும், அவளைப் போல் மூன்று பேரை ஒரே உடம்பில் அடைத்த பருமனுமாக வந்து ரண்டி ரண்டி என்று வரவேற்க, இந்தியில் இல்லை, தெலுங்கில் என்று மனதில் திடமாகச் சொல்லிக்கொண்டு கைகூப்பினேன். தெலக்ஸ் புவனாவோட சித்தி என்று பந்துலு சார் காதில் சொன்னார். கித்தான் பையைப் பிரியத்தோடு தூக்கி பந்துலு சார் சித்திகாருவிடம் கொடுத்தார். அந்த சுந்தரமான வாசனையில் மனம் பறிகொடுத்த மாதிரி ஒரு வினாடி…
”அம்மாவுக்கு சொந்தக்காரங்க ஹை, தும் ஜாவ். ஜாவ்” என்று பந்துலு ஏதோ ஹிந்தி பேசுகிற பாவனையில் சொல்ல, தும் ஜா என்று அவரைப் பிடித்துத் தள்ள பிரம்போடு முன்னால் வந்தான் அந்த இளம் கூர்க்கா. சூப்பரிண்டெண்ட், அத்தங்கா, மாகாணிக்கிழங்கு இதெல்லாம் அவனுக்கு அனாவசியம் என்பதோடு, பந்துலு சாருக்கு இதையெல்லாம் இந்தியில் சொல்ல வராது என்பதும் புலப்பட்டது. “க்யா வேர் இஸ் தட் ஓல்ட் கூர்க்கா ஹை?” அவனுக்கு இதுவும் புரியவில்லை. பந்துலு சார் பயனின்றி உள்ளே நோக்கினார்….
நாங்கள் பத்தே நிமிடத்தில் கிளம்பினோம். பந்துலு சார் தன் ஜோல்னாப் பையையும் நான் என்னுடையதையும் எடுத்து மாட்டிக் கொண்டோம். சாப்பாட்டு பாத்திரம்? எதுக்கு இங்கேயே இருக்கட்டும். பெரிய ஸ்டார் வீட்டுக்கு எச்சில் பட்டு கழுவாத அலுமினியப் பாத்திரத்தோடா போவது? பந்துலு சார் முன்னேற்பாடாக இன்று எலுமிச்சை சாதம் இலையில் பார்சலாகக் கட்டி நியூஸ் பேப்பரில் பொதிந்து கொண்டு வந்திருந்தார். அவருக்கு அத்தங்காளைப் பார்க்கப் போவது ஏற்கனவே தெரியும். எனக்கும் தெரிந்திருந்தால் அதேபடி செய்திருப்பேன். போகட்டும், புகார் செய்ய…