Archive For மே 1, 2020
வெள்ளிக்கிழமை சாயந்திரம் சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்தேன். காப்பி குடித்து விட்டு நானும் ரத்னாவும் புறப்பட்டோம். பார்க் ஸ்டேஷன் வரை ட்ராமில் போய், அங்கிருந்து எலக்ட்ரிக் ரயிலில் மாம்பலம் போய்ச் சேர்ந்தோம். ஸ்டேஷனில் இருந்து நாராயணசெட்டி தெருவுக்கு ஆட்டோ ரிக்ஷாவில் போக விருப்பப்பட்டாள் ரத்னா. மூன்று ரூபாய் வாடகை. என்றைக்காவது ஒரு- நாள், போகட்டும், ரத்னா ஆசைப் படுகிறாள். நாங்கள் தெலக்ஸ் புவனாவின் ‘சுந்தரி’ மாளிகையில் நுழைந்தபோது மாலை ஆறு மணி. கூர்க்கா மரியாதையாக சல்யூட் வைத்து உள்ளே…
சாயந்திரம் நாலு மணிக்கு அடுத்த மாதத்தில் இருந்து புதுசாகப் பென்ஷன் தரவேண்டிய ரிடையர்ட் ஊழியர்களின் பைல்கள் பதினேழு வந்து சேர்ந்தன. கையெழுத்துப் போட்டு அவற்றை வாங்கி மேஜையில் வைத்தபோது எல்லா பைலும் அங்கே உட்கார இடம் இல்லை என்று தெரிந்தது. வேறே பெரிய அகலமான மேஜை வேண்டியிருக்கும் என்று பந்துலு சாரிடம் அறிவிக்கப் போனேன். அவர் தேவலோகத்தில் இருப்பவராக, உற்சாகமாக டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தபடி போனில் சொன்னது – “ராமோஜிக்கு நூறு வயசு. வந்திருக்கார்….
திங்கள்கிழமை ஆபீசில் வேலை மும்முரத்தில் இருந்தபோது ட்ரங்க் கால் என்று பந்துலு சார் அழைத்தார். அவர் இடத்தில் தான் ஆபீஸ் டெலிபோன் வைத்திருக்கிறோம். ”நான் கும்பகோணத்திலே இருந்து விட்டோபா பேசறேன்.. அனா மாவன்னா மளிகைக்கடையிலே இருந்து பேசறேன்..ட்ரங்க் கால் புக் பண்ணி பேசறேன்.. ராமோஜி ராவ்ஜியை தயவா கூப்பிடணும். நான் அவருக்கு ஆப்த சிநேகிதன். அவர் திருக்கருகாவூர் போக, அடுத்த சனிக்கிழமை..”. என்னைப் பேசவே விடவில்லை விட்டோபா. ராமோஜி பேசறேன் என்று நடுவில் பத்து தடவையாவது சொல்லியிருப்பேன்….
வாசலில் மறுபடியும் சத்தம். ஓசை எழுப்புகிறவர்கள் வாழ்த்தப்படட்டும். தெலக்ஸ் புவனாவின் ஆஸ்தான அறிஞர் ராமண்ணா ஜோசியரும், கூடவே இன்னொரு குடுமிக்காரரும் வாசல் கதவைத் தட்டாமல் தட்டி உள்ளே நுழைந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன். யாராக இருந்தாலும் வாழ்க. இன்னொரு மணி நேரம் இங்கே என்னோடு பேசிக் கொண்டிருந்தால் போதும். தெலக்ஸ் புவனா அவ்வப்போது வந்து போய் எனக்கும் ரத்னாவுக்கும் நல்ல சிநேகிதமாகி விட்டதால் என் மனதின் அறையைக் காலி செய்து கொண்டு போய் விட்டாள். தேவைப்பட்டால் நேரில் போய்ப்…
நான் தொண்டையைக் கனைத்துக்கொண்டு நாயக்கரிடம் கேட்டேன் – ”உங்கள் அவசரத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது உங்களுக்கு ஸ்த்ரிகளின் சுஸ்வரமான கச்சேரிக்கு வாசிப்பதில் இஷ்டம் தான். அப்புறம் என்னாத்துக்கு காப்பியம், வெண்பா, வெண்டைக்கா எல்லாம்?” ”அதென்ன அப்படிச் சொல்லிட்டீங்க? தெருவிலே ஒரு பொண்ணு எதிர்லே வந்தாலே ஒதுங்கி வழி விட்டுத் திரும்பி சுவரைப் பார்த்துட்டு நிற்பேன்.. நமக்கு ஒத்து வர்றதில்லேங்க” என்றார் நாயக்கர். ”ஏன் சார், நேரே பார்த்துட்டு நடந்தா மரியாதையா, திரும்பி பிருஷ்டத்தை காட்டறது நாகரீகமா?” என்று…
ராமோஜியம் – ஒரு புதிய அத்தியாயம் 1945 – தொடக்கப் பகுதி அது ஏன் கல்யாணமான அடுத்த வருஷமே பெண்டாட்டியை வயிற்றைத் தள்ள வைத்து அடுத்த தலைமுறை பிறந்து வர ஆவன செய்ய வேண்டும் என்று புருஷனையும் பெண்ஜாதியையும் மற்றவர்கள் எல்லோரும் மறைமுகமாகவோ நேரடியாகவோ நிர்பந்திக்கிறார்கள் என்று தெரியவில்லை. சில பேர் இன்னும் மோசம், கல்யாணப் பத்திரிகையைக் கையில் வாங்கிக் கொண்டதுமே பத்து மாதக் கணக்கைப் போட ஆரம்பித்து, ஞாபகமாக விசாரிக்கப் புறப்பட்டு வந்துவிடுகிறார்கள். கல்யாணம் முடிந்து…