Archive For மே 27, 2020
நான் கப்பலின் மேல்தளத்துக்கு ஓடிப் போய்ப் பார்க்க, சிறு விளக்கொன்று துணையாக ஒரு சிப்பாய் நூலேணியையும் படகையும் இறக்கி விட, விஜயசந்திரிகா கப்பலின் நூலேணி கீழே வர அமிட் போடப்பட்டதைக் கவனித்தேன். ஏணியில் தொங்கியபடி அவர் கடல் பரப்பில் இறங்கும்போது மற்ற ஏணி இருட்டில் தெரிந்து மறைந்தது. கடல் வெகு கோபமாக இருந்த ராத்திரிப் பொழுது அது. இவரும் தான். இயலாமை ஏற்பத்திய சினம் அது என்று சொல்லாமலேயே புரிந்தது. ஏமாற்றமும் வருத்தமும் கோபமுமாக அந்த இரவு…
வந்த நாள் இரவு – சலிப்போடு ஊர்ந்து போனது சாயந்திர வேளை. எதிர்பார்க்க வைத்துவிட்டு ஏமாறுவதாகவே எனக்கு அனுபவமானது. ஆக்கிரமித்து அதிகாரம் செய்யும் கொள்ளையர் போல் இரவு நுழைந்தபோது சிநேகத்தோடு ராவ்ஜியும் எங்கள் கப்பலுக்குள் வந்துவிட்டார். வரும்போதே இதழ்க் கோடியில் ஒரு புன்னகை. பாலை எதிர்பார்த்து வரும் பூனை முகத்தில் தென்படும் விஷமச் சிரிப்பு அது. ”இன்றும் இங்கே சற்று நேரம் இருந்து போகலாமா தாசிப் பெண்ணே” என்று விசாரித்தார் அவர். ”இந்தா உன் எழுத்ததிகாரம். படித்துவிட்டேன்….
வந்தநாள் முற்பகல் – அவருடைய கையில் கட்டைப் பிரிக்காமலேயே நீங்கிவிட்டது. அறை வாசலில் உட்கார்ந்திருந்த வைத்தியர் நல்ல உறக்கத்தில் இருந்தார். கப்பல் உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடுவது அவருடைய உறக்கத்தை ஆழத்திற்குக் கொண்டு போயிருக்க வேண்டும். பெண்ணே. ராவ்ஜி அழைத்தார். ஒரு சித்துவேலை செய்தால் என்ன? செம்பருத்திப் பூக்களை அவர் கைக்கு ஒத்தடமிட்டது போல் அடுக்கி அழகு பார்த்தேன். “இந்தப் பூவை எல்லாம் விட மாயம் செய்யும் உன் கன்னங்களை இங்கே சேர்த்துப் பிடித்துக் கொஞ்ச இடம் தருவாயா”…
பிற்பகல் நான்கு மணி – புவனலோசனி எழுந்திரு. அவர் தான். தமிழில் சொன்னார். என் காதுகளையே நம்பாமல் நான் அவர் நெஞ்சில் கை ஊன்றி அந்தக் காந்தக் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தேன். தமிழ் தெரியுமா? ”தெரியாமல் என்ன, தஞ்சாவூர்காரனுக்கு மூச்சுக் காற்றுக்கு அடுத்தது பேசுகிற பாஷை தானே”. நான் எழ முற்பட்டேன். அவருடைய இடது கரம் திரும்ப அழுத்தமாக என்னை அவர் நெஞ்சில் பரவிக் கிடக்க வைத்தது. இன்னொரு கரம் காயப்படாமல் இருந்தால் என்ன செய்திருக்குமோ. அவர்…
ராமோஜியம் – வளர்ந்து வரும் புதினத்தில் ‘1698 – ராமோஜி ஆங்கரே, காரைக்கால் புவனி’ அத்தியாயத்திலிருந்து
நான் நேற்று இந்தக் குறிப்பை எழுதத் தொடங்கியபோது கடலில் இரண்டு கலங்களைக் கண்டேன். இரண்டும் மங்கிய வெளிச்சத்தில் சரியாகத் தெரியாவிட்டாலும் இங்கிலாந்து கொடி போட்டவை என்பதை அறிந்து நிம்மதி கைவந்தது. என் மாலுமியிடம் அந்த இங்க்லீஷ் கப்பல்களை இங்கே நம் கப்பல் பக்கம் வரவழைக்கச் சொன்னேன். முக்கியமாக மாலுமி தேர்ச்சியடைந்தவனாக இங்கே இல்லை. சாப்பாட்டுக்கு எடுத்து வந்ததும் பாதி கெட்டுப்போய் இன்னும் மூன்று அல்லது நான்கு நாளைக்கு வருவதாக மட்டும் இருந்தது. அந்தக் கப்பலில் நிச்சயம் கப்பலோட்டத்…
கப்பல் மேல்தளத்தில் ஓடிக் கொண்டிருக்கிற சத்தம். பார்த்து விட்டு வந்து எழுதுவதைத் தொடரலாம் என்று நினைத்தது பூர்த்தியாக ஒரு வாரம் ஆனது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகப் போனது. வந்தவர்கள் கடற்கொள்ளைக் காரர்கள். கப்பலில் புகுந்த அந்த சண்டாளர்கள் இந்தப் பகுதி கடலில் சுற்றி வந்து கொள்ளையடிப்பவர்கள். பெரும்பாலும் இவர்கள் நீளமாக தாடி விட்ட, அழுக்கும் குமட்டும் துர் நாற்றமும் வீசும் வெள்ளைக்காரர்களாக இருப்பார்கள். கருப்புக் கடல் கொள்ளைக்காரர்கள் உக்கிரமானவர்கள். இவர்கள் பிடித்தெடுத்த வியாபாரக் கப்பல்களில் இருக்கும் பொருளை மட்டும்…