Archive For ஜனவரி 20, 2016
அரசூர் தெரியுமா? அகல்யா கேட்டாள். சிறிய சமோசாவைக் கடித்துக் கொண்டு தலையை இல்லை என்று ஆட்டினான் திலீப். இரானி ஹோட்டலில் மழைக்காக ஒதுங்க வருகிறவர்களின் கூட்டம் மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது. மழை தொடங்கப் போகிறது என்று பூஜை செய்த பிள்ளையாரைச் சதுர்த்தி முடிந்து விசர்ஜன் நேரத்தில் கடலில் இடும்போதே எல்லோருக்கும் தெரியும். கணபதியைக் கரைத்ததும் மேகம் திரண்டு தென்மேற்குப் பருவ மழை ஆரம்பித்து விடும் என்ற நம்பிக்கையில் கையில் குடையோடு கணபதி பப்பா மோரியா பாடிக் கொண்டு…
Sadanand Manon as the interviewer is always a pleasure to watch. With his in depth knowledge of fine arts, he usually enhances the quality of the interview, enriching it with more info in addition to what the artist interviewed conveys. Menon’s Raghu Rai interaction yesterday was one such memorable event. Rai came up with some…
மூன்று மாதத்தில் பம்பாய் மாறியதோ என்னமோ, கட்சியின் தலைமைக் காரியாலயம் ஏகத்துக்கு மாறி இருந்தது. வரப் போகும் மாநகராட்சித் தேர்தலில் கட்சி பெரும் வெற்றி அடையும் என்று பரவலாக, எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் கூட எதிர்பார்க்கப் படுவதாலோ என்னமோ அங்கே தாதர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் போலப் பரப்ரப்பான சூழ்நிலை. திலீப் உள்ளே நுழைந்த போது காக்கிச் சட்டைக் காவலன் குறுக்கே விழுந்து தடுத்து நிறுத்தினான். ஜா நை சக்தா. பாஸ் திகாவ் நை தோ. ஹடாவ் போடா…
ஒடிந்து விழுவது போல் கதாநாயகி. அவளைப் படைத்தவனோ, உடுப்புத் தைத்தவனோ, சரீர பாரத்தை எல்லாம் ஸ்தன பாரமாக மட்டும் உடம்பில் வடக்குப் பிரதேசத்தில் உருட்டி வைத்து மற்றப்படி குச்சிக் கால்களோடு அவளைப் புல் தரையில் வெட்டுக்கிளி போலத் தத்தித் தத்தி ஓட வைத்திருக்கிறான். அவளைக் கட்டி அணைத்துத் தூக்கித் தட்டாமாலை சுற்றுகிற மீசை மழித்த கதாநாயகனை ஒரு நூற்றுச் சில்லரைப் பேர் கிராண்ட் ரோடு சினிமா தியேட்டரின் பூச்சி ஊறும் நாற்காலிகளில் உட்கார்ந்து, பகல் காட்சியில் அசூயையோடு…
தியூப்ளே வீதி – 33 இரா.முருகன் நாளைக்கு கிறிஸ்துமஸ். நேற்றும் இன்றும் நாளையுமாக மார்கழி இந்த மூன்று தினங்கள் மட்டும் டிசம்பராகவும் வடிவம் எடுக்கும். மார்கழி பிறந்து இந்தப் பத்து நாளில் திருப்பாவையையும், திருவெம்பாவையையும் கோவில்களின் கூம்பு ஒலிபெருக்கிகள் காற்றில் பரப்பி வெளியை நிறைக்க, ஏசு விசுவாசிகளின் கிறிஸ்துமஸ் கீதங்கள் இடையிடையே இனிமையாக ஒத்திசைந்து ஒலிக்கும். இரண்டு நாள் முன்பாக திருவாதிரை வந்து போனது. இனி மூன்று பெரிய எதிர்பார்ப்புகளோடு விழாக் காலம் நீண்டு போகும். அடுத்தடுத்து…