Archive For பிப்ரவரி 13, 2016

New novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 21 இரா.முருகன்

By |

New novel : வாழ்ந்து போதீரே     அத்தியாயம் 21        இரா.முருகன்

வாசலில் ஒருமித்து இசைக்கப்பட்ட வாத்திய இசை நந்தினியை எழுப்பியது. நாலு வயலின்கள் கூட்டாக மெல்ல உயர்ந்து சஞ்சரிக்க, ஓபோவும் குழல்களும், தரையில் நிறுத்தி வைத்து வாசிக்கும் ஒரு பிரம்மாண்டமன செல்லோவும் இசைப் பூத்தூவியபடி தொடர, முரசு ஒன்று ஓங்கி ஒலித்து அதிர்ந்து காலை ஏழு மணி என்றது. மேல் தளத்தின் ஜன்னல் வழியாக நந்தினி வெளியே பார்க்க, ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக ஒரு சிறிய கூட்டம் தரையில் மண்டியிட்டு வணங்கி நின்றது. துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்துக் காவலுக்கு…




Read more »

New: Murugan Ashwin – IPL 2016

By |

New: Murugan Ashwin – IPL 2016

Happy to share my son Murugan Ashwin (M.Ashwin) is selected to play in the IPL 2016 tournament. He is acquired by Rising Pune Supergiants team. Wishing him and his team all success.




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 20 இரா.முருகன்

By |

New Novel :   வாழ்ந்து போதீரே        அத்தியாயம் 20           இரா.முருகன்

விடியலின் ஈர வாடையும், சுட்ட சாம்பலைப் பொடி செய்து பன்னீரும் வாசனை திரவியமும் கலக்காமல் பூசும் வைராக்கியமான வீபுதி வாசனையும், குத்தாக அள்ளி ஏற்றி வைத்த மட்டிப்பால் ஊதுபத்தி மணமும், யாரிடம் இருந்து என்று குறிப்பிட முடியாதபடி நகர்கிற, நிற்கிற, உறங்கிக் கிடக்கிற ஜனத் திரளில் இருந்து எழுந்து பொதுவாகக் கவிந்த வியர்வை உலர்ந்த நெடியும், பறித்ததும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வரும் செழித்த காய்கறிகளின் பச்சை மணமும், காற்றில் அடர்த்தியாகக் கலந்த, இன்னும் தொடுக்கப்படாத…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 19 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே       அத்தியாயம் 19   இரா.முருகன்

கொச்சு தெரிசா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட, தூர தேசத்திலிருந்து வந்த பெண்ணோடு ரேடியோ லைசன்ஸ் உத்தியோகஸ்தர் பேசுவதற்கு முன் பெருஞ் சத்தம் எழுப்பி கப்பி ரோடில் ஒரு சைக்கிள் தாறுமாறாக விழுந்தது. உடுப்பில் படிந்த செம்மண்ணைத் தட்டி உதிர்த்தபடி தரையில் இருந்து எழுந்த சைக்கிளோட்டி, உலகைக் கனிவாகப் பார்த்துப் புன்னகை செய்தபடி வண்டியை நிலை நிறுத்தினார். சக்கர வண்டிகள் நம்புதற்கு உரியவை அல்ல என்று அவரைப் பரிவோடு நோக்கியபடி ரேடியோ உத்தியோகஸ்தர் கூறினார். தன்னிடமும்…




Read more »

New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 18 இரா.முருகன்

By |

New Novel: வாழ்ந்து போதீரே                 அத்தியாயம் 18    இரா.முருகன்

சாமுவேல் என்று பெயர் சொன்னார். போன வாரம் வந்த போது சாமிவேல் என்று சொல்லியிருந்தார். அவருடைய பெயர் இந்த இரண்டில் எது என்று அரசூரில் ஒரு வாரமாகப் பலமான சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. எந்தப் பெயரோ, கருத்து மெலிந்த ஒட்டடைக் குச்சி போல ஓங்குதாங்காக வளர்ந்த ஒரு நடு வயசு மனுஷர் அரசூரில் வீடு வீடாக அத்து மீறிப் புகுந்து ரேடியோப் பெட்டிகளை உடைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். ரேடியோ பெட்டி வைத்து கானங்களையும், நேரம் கெட்ட நேரங்களில்…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 17 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே       அத்தியாயம் 17   இரா.முருகன்

கொட்டும் மழையில் டாக்சியை விட்டு இறங்கி பாண்டுப் சர்வமங்கள் சால் இருக்கும் குறுகலான தெருவில் அகல்யா நுழைந்தாள். தேங்கி இருந்த மழைத் தண்ணீரையும் பின்னால் ஒடுங்கிக் கிடந்த தெருவையும் பார்த்து, உள்ளே வந்தால் திருப்பிப் போக சிரமம் என்று தெரு முனையிலேயே நிறுத்தி விட்டார் டாக்சி டிரைவர். ஆனாலும் ரெக்சின் பை, லெதர் பேக், பூ மாலை, செண்டு இதையெல்லாம் இறக்கவும், குடையை விரித்துப் பிடித்து திலீப்பிடம் தரவும் அவர் தவறவில்லை. வண்டியைக் கிளம்பும் முன் அவருடைய…




Read more »