Archive For The “இது புதுசு” Category
மிளகு நாவலில் இருந்து இரு சிறு பகுதிகள் சென்னா ஒற்றர் அணி கொண்டுவந்த தகவலை முன்பைவிட நிதானமாக அறிவித்தாள். ஆச்சர்யம் விலகாமல் கையிரண்டையும் உயர்த்தி, இது அதிசயமானது என்று பொருள் தர பெத்ரோ நின்று நடனக் கலைஞன் போல் அபிநயிக்க, சென்னபைரதேவி இருந்தபடியே குறுநகையோடு, அதேபோல் அபிநயித்தாள். அவளுடைய ஊன்றுகோல் தரையில் ஓசையெழுப்பி விழுந்தது. பெத்ரோ அமர்ந்து சொன்னார் – சரி அம்மா! நான் உங்கள் அனுமதியோடு கோழிக்கோடு செல்லப் போகிறேன். அங்கிருந்து என்னை இயங்கச் சொல்லி…
An excerpt from my forthcoming novel MiLAGU நான் திருத்தக்கன். ஹொன்னாவர் வாசி. தமிழ்ப் புலவன். கன்னட கவிஞன். போர்த்துகீஸ் மொழி எழுதப் படிக்கத் தெரியும். தமிழிலும் கன்னடத்திலும் முறைப்படி இலக்கணம் படித்திருக்கிறேன். தச்சுத் தொழில் செய்கிறேன். இப்போது சென்னபைரதேவி மிளகு ராணியின் அரசு அணி போர்வீரன். தயார்நிலைப் போர்வீரனாக இருந்து இந்த வாரம் அரசுப் படைவீரனாக நியமிக்கப்பட்டிருக்கிறேன். எங்கள் அணியில் என் போன்ற தயார்நிலை போர்வீரர்கள், அரசு காவல்படை வீரர்கள், போர்த்துகல் அரசு கட்டணம்…
An excerpt from my forthcoming novel MILAGU கோட்டை மதிலின் உள்சுவர் தெப்பக்குளத்துக்கு அருகே வளைந்து திரும்பும் இடத்தில் தரையில் வெண்துணி பரப்பி காயமடைந்த வீரர்கள் நால்வர் படுத்திருக்க முழங்காலில் மூலிகைப் பற்று தன்மையான வெப்பத்தில் பூசப்பட அவர்கள் வலியில் துடிக்கும் ஒலியைக் கடந்து ஊர்ந்தது கோச். லாகவமாக கோச் குதிரைகளை சற்றே மேடாக வளைந்து திரும்பும் பாதையில் செலுத்தி கோட்டை அலுவலகத்துக்கு முன் வண்டியை நிறுத்தி உள்ளே நுழையப் போகும்போதுதான் அவருக்கு நினைவு வந்தது…
An excerpt from my forthcoming novel MILAGU ஆக உங்கள் காதலும் காமமும் நான் உங்கள் மேல் வைத்த காதலும் அரசாங்க விஷயங்கள். பெத்ரோ ஒரு சிரிப்போடு கேட்டார் – அது அரசாங்க விஷயமாகவே இருக்கட்டும் என் கண்ணின் கண்ணே. உனக்கு என்னை பிடித்து வந்தாயா அரசாங்க கட்டாயத்தின் பேரில் என்னோடு ஒட்டிக் கொண்டு பழகினாயா என் இதயமே? கஸாண்ட்ரா அவர் தோள்களில் மாலையாகத் தன் வளையணிந்த வனப்பான கரங்களை இட்டு வளைத்தாள். அவள் உதடு…
an excerpt from my forthcoming novel MILAGU இரவெல்லாம் கண் விழித்து இரு கோச் வண்டிகள் மாற்றி காலை ஒன்பது மணிக்கு அவர் மாளிகைக்கு வந்து சேர கதவு எல்லாம் அடைத்துச் சார்த்தி வைத்திருந்தது. மனைவி மரியா, குழந்தைகள் மற்றும் கஸாண்ட்ராவைக் காணவில்லை. அவர் வசம் மாளிகைத் திறவுகோல் இல்லாத காரணத்தால் வாசலில் நின்று காத்திருக்க, எதிரே முட்டை வணிகம் செய்யும் கிருஷ்ணப்பா, அவர்கள் இன்று ஞாயிறென்பதால் தேவாலயம் போயிருப்பதாகத் தெரிவித்தான். ஞாயிற்றுக்கிழமை பரமபிதா அண்ட…
An excerpt from my forthcoming novel MILAGU மிளகு அத்தியாயம் எழுபத்தேழு 1606 உள்ளால் போர்த்துகீஸ் படை வந்து சேர்ந்தது. எங்கே வரவேண்டும் என்று தெரிவிக்கப் படாததால் உள்ளால் துறைமுகத்துக்கு வந்து நங்கூரமிட்ட பத்து சிறு கப்பல்களில் வந்த ஐநூறு பேர் படகுகளை அமர்த்திக்கொண்டு கரைக்கு ஏக கோலாகலமாக வந்து சேர, அப்பக்கா மகாராணிக்கு உடனடியாகச் செய்தி அறிவிக்கப்பட்டது. அப்பக்கா உடனே போர்த்துகல் அரசின் தலைமைப் பிரதிநிதியான சின்ஹோர் இம்மானுவல் பெத்ரோ அவர்களை துரிதமாக உள்ளாலுக்குப்…