Archive For The “இது புதுசு” Category

பெரு நாவல் ‘மிளகு’ – The old order changeth

By |

An excerpt from my forthcoming novel MILAGU சென்னபைராதேவியின் இந்த ஆட்சி தொடர வேண்டாம் என்பது விஜயநகரப் பேரரசின் விருப்பமும் ஆகும். சென்னபைராதேவி மகாராணி இனி என் மற்றும் பில்கி அரசர் திம்மராஜு கவனத்தில் ஓய்வெடுப்பார். எங்கே என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. கெருஸொப்பா நாடு ஒரு பெரும் பகுதியாகவும் ஒரு சிறு பகுதியாகவும் நிர்வாகச் சீரமைப்பு நிமித்தம் பிரிக்கப்படும். நானும் பில்கி அரசர் திம்மராஜுவும் அந்த சீரமைப்பை எடுத்துக்கொண்டு நிறைவேற்ற சோமேஷ்வர் கோணேஸ்வர் மகாவீரர்…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – This is how Keladi Venkatappa usurped Gerusoppa throne

By |

An extract from my forthcoming novel – வெளி மண்டபத்தில் ஓவென்று பெரும் சத்தம். கெலடி மாநிலப் படைத் தலைமைத் தளபதிகளும், சேனாதிபதிகளும் மிடுக்காக நடந்து வர, நடுவே கம்பீரமாக நரை மீசையை நீவிக்கொண்டு கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் வந்து கொண்டிருந்தார். அத்தனை பேரும் உள்ளே நுழைந்தபின் வாசல் கதவுகள் உள்ளிருந்து தாளிடப்பட்டன. கெலடிப் படைகள் கோட்டைக்குள் அரச மாளிகை வாசலில் அணிவகுந்து நின்றதை உள்ளே இருந்து பார்க்க முடிந்தது. அவர்கள் சத்தத்தையும் கேட்க…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – Chennabadhradevi held in captivity in her own fort

By |

an excerpt from my forthcoming novel MILAGU அகநாசினி நதிநீர் நிரம்பிய குளத்தைப் பார்த்தபடி இருந்தது விருந்தினர் அறை. போர்த்துகீஸ் இளவரசர், கோழிக்கோட்டு சாமுத்ரி மகாராஜா, மதுரை  மன்னர், நிர்மல முனிவர், உள்ளால் மகாராணி அப்பக்கா என்று கெருஸொப்பாவின் அதிமுக்கிய விருந்தாளிகள் வந்து வெவ்வேறு கால கட்டத்தில் தங்கியிருந்த அழகான, பெரிய அறை அது. முழுக்கவோ வரிசையாகப் பாதி கவிழ்த்தோ ஜன்னல் கண்ணாடிகள் வெனீஷியன் ப்ளைண்ட் அடுக்காக ஒவ்வொரு ஜன்னலும் வடிவெடுத்திருப்பது இந்த அறையிலும், அரசியின்…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – உத்தேசமான முன்னுரை – A probable foreword

By |

the first draft of the foreword of my forthcoming novel MILAGU கொங்கணக் கடற்கரைப் பயணம் போய் வருடக் கணக்கில் ஆகிவிட்டது. மிளகு, ஏலம், கிராம்பு, லவங்கம் என்று மணக்கும், மழை ஓய்ந்த ஈரமண் அந்தக் கடலும் கடல் சார்ந்த நெய்தலும், பசுமை கொஞ்சும் மலையும் மலை சார்ந்த குறிஞ்சியும். மிளகு, அதுவும் மிகத் தரமான மிளகு விளைவித்து, ஐரோப்பிய நாடுகளைக் கவர்ந்திழுத்துக் கூட்டிவந்து, என்ன விலையும் கொடுத்து வாங்க வைத்த நிலப் பிரதேசம்…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – Thus Reached Ambalapuzha through Gerusoppa across time space continuum

By |

An excerpt from my forthcoming novel MILAGU ரயில் நின்று தாமதித்து மறுபடியும் நகரும் முன் இந்தப் பரமனும் அந்த ரயில்பெட்டியில் ஏறிக் கொள்கிறார். வந்த பரமன் கம்பார்ட்மெண்டில் கூட்டத்துக்கு நடுவே  நின்றுகொண்டு மேலே தொங்கும் வாரை இழுத்துப் பிடித்தபடி கால் மாற்றும் போது லெனின் கடிதங்கள் தரையில் விழுகின்றன. பக்கத்தில் நின்ற வயதான மராட்டியர் குனிந்து அதை எடுத்துத் தலைப்பைப் படித்து விட்டு வந்த பரமனிடம் கொடுக்கிறார். லெனின் வீட்டை விட்டு வெளியே போயிருந்தாரா?…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – Paraman meets Paraman who meets Paraman who is himself who..

By |

An longish extract from my forthcoming novel MILAGU காட்சி கலைந்து சதுர்முக பசதி சுழல்கிறது. ஓரமாக அடித்துச் செல்லப்பட்ட பரமன் சுவரை ஆதரவாகப்  பற்றிக்கொண்டு எழுந்து நிற்கப் பார்க்கிறார். காட்சி நிலைக்க, ஆப்பிரிக்க நாட்டு அரசாங்க அலுவலகம். வெளியே பெயர் எதுவும் போடாத அங்கே வாசலில் கடைசிப் படியில் உட்கார்ந்திருப்பதும் பரமன் தான். இரண்டு தாங்குகட்டைகள் நிறுத்தி வைக்க அவற்றை ஊன்றி நடக்க முயலும் அந்த இன்னொரு பரமன் தத்தித் தத்தி நடக்கத் தொடங்க,…




Read more »