Archive For The “இது புதுசு” Category

பெரு நாவல் ‘மிளகு’ மதிப்புரை – எழுத்தாளர் காளிபிரசாத்

By |

பெரு நாவல் ‘மிளகு’ மதிப்புரை – எழுத்தாளர் காளிபிரசாத்

மிளகு மிளகு நாவல் வழி துவங்கியது  இவ்வருடத்தின் புத்தக கண்காட்சிப் புதுவரவுகளுக்கான வாசிப்பு. இரா. முருகன் அவர்களின்  சிறுகதைகளில்  அவர் காட்டும் கணிப்பொறி உலகம் மற்றும் பழைய காலக்  கதைகளில் தொடர்ந்து  வரும் ஐயனை என்கிற கதாபாத்திரம் பற்றிய சித்தரிப்புகள் நினைவில் நிற்பவை. ஆனால் அவரை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தது அரசூர் வம்சம் நாவல் வழியாகத்தான்.  ‘அரசூர் வம்சம்’ முதல் ‘வாழ்ந்து போதீரே’  வரை தொடர்ச்சியான வாசிப்பு. இதில் துவக்கமான  அரசூர் வம்சம் நாவல் ரகளையானது. அதன்…




Read more »

ஹரித்ரா நதி நூலுக்கு நான் எழுதிய முன்னுரை

By |

நண்பர் ஆர் வி எஸ் எழுதிய ஹரித்ரா நதி நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை.   1960-களில் கலைமகள் மாத இதழில் ’எங்கள் ஊர்’ என்ற தலைப்பில் பல துறை சார்ந்த சாதனையாளர்கள் எழுதிய கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தபோது அவை வாசகர்கள் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன. பிறந்து வளர்ந்த ஊரையும், அங்கே என்றோ ஆடி ஓடி ஓய்ந்த பிள்ளைப் பிராயத்தையும் நினைவு கூரும் இந்தக் கட்டுரைகள் பின்னர் புத்தகமான போதும் பெரும் வரவேற்பை அந்நூல் பெற்றது. நாஸ்டால்ஜியா…




Read more »

மீண்டும் ஜெயமோகன் – மிளகு பற்றி

By |

மீண்டும் ஜெயமோகன் – மிளகு பற்றி

மிகுந்த மகிழ்ச்சியோடு இதைப் பதிவிடுகிறேன். என் உற்ற நண்பர் ஜெயமோகன், மிளகு பெருநாவல் குறித்து இந்த மூன்று நாட்களில் இரண்டாம் முறையாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். Very positive, and as a good friend and a discerning peer. அவருக்கு என் நன்றி. eramurukan.in இணையத்தளம் user friendly ஆக இல்லாதது குறித்து அவர் சுட்டிக் காட்டிய குறைகளுக்கு முழுமையாகப் பொறுப்பேற்கிறேன். இணையத் தளம் விரைவில் புது வடிவமைப்பு பெறுகிறது. மிளகு தமிழில் வெளிவந்திருக்கும் குறிப்பிடத் தகுந்த நாவல்களில்…




Read more »

ஜெயமோகன் பரிந்துரைக்கும் ‘மிளகு’

By |

ஜெயமோகன் பரிந்துரைக்கும் ‘மிளகு’

என் அன்பு நண்பர் ஜெயமோகன் ‘மிளகு’ நாவலை வாசகர்களுக்குப் பரிந்துரைத்துள்ளார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. Peer appreciation is the best form of true and honest praise an author can earn. I cherish this moment. Thanks Jayamohan https://www.jeyamohan.in/162723/




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – 1189 பக்கங்கள் – வாசிக்க 49 மணி, 32 நிமிடங்கள்

By |

பெரு நாவல் ‘மிளகு’ – 1189 பக்கங்கள் – வாசிக்க 49 மணி, 32 நிமிடங்கள்

Awesome! Fascinating! எழுதுவது தவமோ என்னமோ, வாசிப்பதையும் தவமாக நிகழ்த்தும் வாசக நண்பர்களை அளித்த இறைவனுக்கு நன்றி. திருமதி உமா ஸ்ரீதரன் அவர்கள் 1189 பக்கங்கள் கொண்ட ‘மிளகு’ நாவலை 3 நாளில் வாசித்து முடித்திருக்கிறார். மற்ற அலுவல்களுக்கு இடையே 49 மணி நேரமும் சில மணித்துளிகளும் செலவழித்து இந்த வாசிப்பை முழுமையாக்கியுள்ளார். ————————————————————————————————— Uma Sridharan 2  மிளகு. புத்தகத்தை இஷ்டப்படி எல்லாம் வைத்துக் கொண்டு படிக்க முடியாது. ஒரு மேஜையில் வைத்து மரியாதையாக படிக்க…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’- உப்புக் கிழவரைக் காலப் பயணம் செய்ய வைத்த புனைவின் சாத்தியம்

By |

பெரு நாவல் ‘மிளகு’- உப்புக் கிழவரைக் காலப் பயணம் செய்ய வைத்த புனைவின் சாத்தியம்

ராத்திரியில் உறங்கும் முன் ஒரு கதை சொல்ல யாராவது வேணும். அது பரமனப்பாவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றான் குழந்தை . கறுப்பன் என்பதால் கோச் வண்டியில் இருந்து இறக்கி விடப்பட்ட ஒரு உயரமான மெலிந்த மனிதனைப் பற்றி நிறையக் கதை சொல்லியிருக்கிறார் பரமன் அப்பா. சமுத்திரத்தில் இருந்து உப்பு எடுத்துக் காய்ச்சி உபயோகிக்க வரி ஏன் தர வேண்டும், மாட்டேன் என்று அமைதியாக யுத்தம் செய்தவனாம் அவன். அரை நிர்வாணப் பக்கிரியாம். அவனையும் அவன் சகாக்களையும்…




Read more »