Archive For The “இது புதுசு” Category
மூத்த எழுத்தாளர் நகுலன் அவர்களுக்கு அவருடைய நண்பரும் எழுத்தாளருமான நீல.பத்மநாபன் அவர்கள் செலுத்தும் நீண்ட கவிதாஞ்சலி இது. நகுலம் என்று பெயர் இந்நீள் கவிதைக்கு, நகுலம் நூல் அறிமுகக் கட்டுரையாக நான் எழுதியது ஏப்ரல் 2022 அந்திமழை மாத இதழில் வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரை இது ——————————————————————————————————- நகுலம் பற்றி (இரா.முருகன்) எழுத்தாளர் நகுலனோடு பழகிய தன் அனுபவங்களை நகுலம் என்ற பெயரில் நீள்கவிதையாக எழுதியிருக்கிறார், இன்னொரு மூத்த எழுத்தாளரான நீல.பத்மநாபன். பத்மநாபனுக்குக் கல்லூரியில்…
சுந்தர கனபாடிகள் வைகை நதியோடு போய்க் கொண்டிருந்தார். சுத்த ஜலம் பிரவாகமாக இரு கரையையும் அடைத்துக் கொண்டு நுங்கும் நுரைப்புமாகப் பொங்கி வழிந்து ஓடியதன் சுவடுகள் ஈர மணலில் அழிந்தும் அழியாமலும் தடம் விரிக்க, வற்றி இளைத்துப் போன நதி சின்னச் சாரைப் பாம்பாக சலித்துக் கொண்டே அசைந்து போனது. கரையோரம் வெகுதூரம் போய், புதர் மறைவில் பிரம்ம செளசம் முடித்துக் கால் கழுவிக் கொள்ள வந்தபோதே நதியடி மணலை நாட வேண்டிப் போனது. நதியெல்லாம் தெய்வம்….
என் அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து- ஹரித்வாரில் கங்கை டோங்கா ஏற்படுத்திக் கொண்டு ஹர் கி பவ்ரி என்ற கங்கைப் படித்துறைக்கு அவர்கள் போய்ச் சேர்ந்தபோது சாயந்திரம் ஐந்து மணி ஆகி இருந்தது. ஒருத்தர் இருவராகக் கூட்டம் வர ஆரம்பிக்கும் முன்னாலேயே அரசூர் கோஷ்டி படித்துறைக்குப் போய்ச் சேர்ந்து, தரிசிக்க வாகான படிகளில் இடம் பிடித்தது. கங்கா மாதாவுக்கு புஷ்பமும் நெய் தீபமும் ஏற்றி, எல்லா சாஸ்திரத்தில் இருந்தும் நாலு வேதத்தில் இருந்தும், ஆமா நாலும்…
Manthiramoorthi Alagu is with Aathmaarthi RS and ‘வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ குழுவின் சார்பாக நேற்று நடத்திய இணைய வழி கூகுள் மீட் இலக்கியச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர் இரா.முருகன் சிறுகதைகள் குறித்து எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்கள் அருமையாக ஆய்வு செய்து பேசினார். அவரது உரையானது எழுத்தாளர் இரா.முருகனின் படைப்புகளை அவர் எப்படி அணுகுகிறார் என்பது குறித்தும், தனக்கு முந்தைய எழுத்தாளர்களை இரா.முருகன் எப்படி அவரது பாணியில் தாண்டிச் செல்கிறார் என்பது குறித்தும் விளக்குவதாக…
பெரு நாவல் ‘மிளகு’ அண்மையில் நிறைவு பெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி 2022-இல் முதல் நூறு பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. பதிப்பாளர் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ராம்ஜி நரசிம்மன் தெரிவித்த தகவல் இது 1189 பக்கங்களில் விரியும் இந்த நாவல் குறித்த மதிப்பீடுகள் நல்லனவாக அமைந்துள்ளன. நன்றி.
இன்றைக்கு ஜெய்ப்பூர் இலக்கிய விழா 2022-இல் பிரமாதமாக அமைந்தது நந்தன் நிலேகனி பங்குபெற்ற The Art of Bitfulness அமர்வு. தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு வீட்டிலிருந்தே அலுவலகப் பணி செய்வது முதல், வீட்டிலிருந்தே உணவுவிடுதியிலிருந்து சுவையான உணவு வரவழைப்பது வரை கைகொடுக்கிறது. சௌகரியம் அதிகமாக அதிகமாக நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் நம் வாழ்க்கையை, நம் நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றதும் கூடிக் கொண்டே போகிறது. எப்படி கருவிகளிலிருந்து விடுதலை அடையலாம்? நந்தன் இந்தப் பொருள் குறித்து எழுதிய…