Archive For The “இது புதுசு” Category

பாரதி போற்றுதும், வவேசு போற்றுதும்

By |

பாரதி போற்றுதும், வவேசு போற்றுதும்

பாரதி போற்றுதும், வவேசு போற்றுதும் ————————————— அன்புக்குரிய நண்பர் டாக்டர் வ வே சுப்பிரமணியன் அவர்கள் Valiyur Subramanian தொடர்ந்து ஐம்பது புதன்கிழை மாலை (இந்திய நேரம்) 6:30 முதல் இரவு 7:30 வரை ஒரு வாரம் தவறாமல் பாரதி புதையலில் அமிழ்ந்து கண்ணன் பாட்டு மற்றும் புதிய ஆத்திசூடி என்று ஒவ்வொன்றாக பாரதி படைப்பு்களை நுண்ணிய ரசானுபவத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.     குவியம் இணையப்பத்திரிகை மற்றும் இலக்கிய அமைப்பு ஒருங்கமைத்த இலக்கிய அமர்வுகள் இவை….




Read more »

ஆலப்பாட்டு வயசன் பறந்ததும் இதர சங்கதிகளும் – அரசூர் வம்சம் நாவலில் இருந்து

By |

எடி நாணி, கூத்தம்பலத்திலே என்ன இன்னைக்கு இத்தனை தெரக்கு ? பகவதிக் குட்டி கூட வந்த நாராயணியைக் கேட்டாள். ஓ. உனக்கு யாரும் சொல்லலியா ? சாக்கியார் கூத்தாச்சே. சிரிச்சுச் சிரிச்சு வயிறு கிழிஞ்சு போகும். ஆனாக்க என்ன ? கன்னிப் பொண்ணுகள் ராத்திரியில் அம்பலத்துலே நிக்கக் கூடாதுன்னு வீட்டைப் பாக்க நெட்டோட்டம் ஓட வச்சுடுறதுதானே பதிவு ? கன்னி கழியாத பெண்களுக்கு அம்பலமும் கூட இருட்டி வெகுநேரம் ஆனபிறகு பத்திரமான இடம் இல்லை. மூல மூர்த்திக்கு…




Read more »

வாவ் தமிழா இணைய இதழில் என் சிறுகதை ‘ஆனைச் சத்தம்’

By |

குமுதம் நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை மகன் மருத்துவர் ஜவஹர் பழனியப்பன் தொடங்கியுள்ள இணையத்தளம் ‘வாவ் தமிழா’. அங்கே பணிபுரியும் நண்பர் தளவாய் சுந்தரம் கேட்டதால் நான்  எழுதிய சிறுகதை ’ஆனைச் சத்தம்’. https://wowtamizhaa.com




Read more »

சாவக்காட்டானுக்கு வந்த வாழ்வு – (அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் முதல்) பகுதி

By |

அரசூர் வம்சம், விஸ்வருபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே நான்கு நாவல் தொகுதியில் இரண்டாவது விஸ்வரூபம். என் அரசூர் பெருநாவல்களில் எனக்குப் பிடித்த நாவல் வரிசை – விஸ்வரூபம், அரசூர் வம்சம், வாழ்ந்து போதீரே, அச்சுதம் கேசவம்.  அரசூர் வம்சம்  நாவலில் இருந்து –   சாவக்காட்டு வேதக்கார பிராமணனுக்குப் புதையல் கிடைத்திருக்கிறது. ஊர் முழுக்க இதுதான் பேச்சாக இருக்கிறது. சேரமான் காலத்துக் காசு பணம், தங்க ஆபரணங்கள், பளிங்குக் குப்பி. நூதன வஸ்துக்கள். ஒரு பெரிய…




Read more »

இரண்டாம் உலக மகாயுத்தம் – ஜப்பான் குண்டுமழை பீதியில் மதறாஸ் 1944

By |

ராமோஜி நகர் நீங்காத 1942 மதறாஸ்   கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு எங்கள் வீட்டில் நானும் ரத்னா பாயும்.   தெருவில் முதல் வீட்டிலும், கடைசி வீட்டிலும் சேர்த்து நாலைந்து பேர்வழிகள் உண்டு. மற்ற வீடெல்லாம் கதவடைத்துப் பூட்டி திண்டுக்கல் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.   பேட்டை முழுக்க ஆள் நடமாட்டம் உள்ள வீடுகளை விட  பூட்டிய வீடுகள் அதிகமாகத் தட்டுப்படுகின்றன. பலசரக்குக்கடை, பெட்டிக்கடை, காப்பிக்கடை என்று வீடுகள் உள்வாங்க, வீட்டு வாசலில், திண்ணையில் தடுப்பு எழுப்பி வைத்துப்…




Read more »

பித்தளைக் குடம் தொலைந்து போன 1964 தமிழ்ப்பட அரங்கம்

By |

குடம்   ஆகாசவாணியில் ஜவஹர்லால் நேரு இறந்து போன செய்தி படித்துக் கொண்டிருந்தபோது ஆனந்தராவ் சைக்கிளில் வந்து இறங்கினான். ஊர் முழுக்க கடையடைப்பும் அங்கங்கே வரப் போகவிடாமல் சைக்கிளை, கட்டை வண்டியை, பிளஷர் காரை எல்லாம் வழிமறிக்கிறதாகவும் தகவல் வந்துகொண்டேயிருக்க, இவன்  சைக்கிளில் எப்படித்தான் வந்தானோ.   எனக்கும் நேரு இஷ்டம்தான். ஆனாலும் அவர் இப்படித் திடீர் என்று போய்ச் சேருவார் என்று எதிர்பார்க்கவில்லை. எழுபத்து நாலு எல்லாம் ஒரு வயசா என்ன? சுதந்திர தினம், குடியரசு…




Read more »