Archive For The “இது புதுசு” Category

‘தினை’ என் அடுத்த நாவல் ஆரம்பமாகிறது

By |

‘தினை’ என் அடுத்த நாவல் ஆரம்பமாகிறது

ஒரு வழியாக அடுத்த நாவல் (பெரு நாவல்?) ‘தினை’ எழுதத் தொடங்கி விட்டேன். வடக்கே போகும் நதி என்று ஒரு இந்துஸ்தானி இசைக் கலைஞர் பற்றி எழுத உத்தேசித்திருந்தேன். நான் சந்தித்த எழுத்தாள நண்பர்களில் குறைந்தது ஐந்து பேராவது இந்துஸ்தானி இசை பற்றி எழுத உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்திருப்பதால், என் எழுத்து நதி வடக்கே ஓடாது, அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அருளால் தினை மளமளவென்று விளையட்டும்




Read more »

காராபூந்தி வந்த இலக்கியக் கூட்டம்

By |

காராபூந்தி வந்த இலக்கியக் கூட்டம்

இது 15 வருடம் முன் நடந்தது. என் ‘ராயர் காப்பி கிளப்’ கட்டுரைத் தொகுதியில் இடம் பெற்ற கட்டுரை. காராபூந்தி வந்த இலக்கியக் கூட்டம்   சனிக்கிழமை சாயங்காலம் ஒரு நிகழ்ச்சி. புதுக்கவிதைத் தந்தை பிச்சமூர்த்தியின் நூற்று மூன்றாவது ஆண்டு விழா. விழாவைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன். இங்கே எழுத வந்தது ஒரு அவஸ்தையைப் பற்றி. வெங்கடசாமிநாதன் பேச வந்தார். க.நா.சு, அமிதாப்பச்சன், ஜோதிபாசு, மிதுன் சக்கரவர்த்தி, வண்ணநிலவன், சிமெண்ட் டால்மியா, சோ என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோதே…




Read more »

பாரதியாரும் ராய்ட்டர் செய்தியாக ருஷ்யப் புரட்சியும்

By |

பாரதியாரும் ராய்ட்டர் செய்தியாக ருஷ்யப் புரட்சியும்

ருஷியாவிலே  ராஜாங்கப்  புரட்சி என் ராயர் காப்பி கிளப் கட்டுரைத் தொகுதியில் இருந்து ருஷிய – ஜப்பானிய யுத்தத்தின் ஆரம்ப முதலாகவே ருஷியாவில் உள்நாட்டுக்  குழப்பங்கள் தொடங்கி விட்டன. அது முதல் ராஜாங்கப் புரட்சிக் கட்சியாருக்கு  நாள்தோறும் பலமதிகரித்துக் கொண்டு வருகிறது. அப்பால், மேற்படி யுத்தத்திலே ருஷியா தோற்றுப் போய்விட்ட பிறகு ருஷிய ராஜ  விரோதிகள் துணிவு மிகுந்தவர்களாகி, வெட்ட வெளியாகக் கலகம் செய்யத்   தொடங்கி விட்டார்கள். இதுவரை பெருங் கலகங்களும், சிறு குழப்பங்களுமாக  எத்தனையோ நடந்தன….




Read more »

’சக்கர பொங்கலும்’ கவிமணி கவிதையும்

By |

’சக்கர பொங்கலும்’ கவிமணி கவிதையும்

உச்சி வெய்யில் பட்டை உரிக்காத அபூர்வமான ஒரு மத்தியானப் பொழுதில் வடக்கு உஸ்மான் வீதிப் போக்குவரத்துக்குக் குறுக்கே நீந்திக் கடந்து போனால் இரண்டு பெயர்ப் பலகைகள் அருகருகே இருந்து வா, வா என்று காலைப் பிடித்து இழுக்கின்றன. மோர்க்கூழும், கொழுக்கட்டையும், புளி உப்புமாவும் மணக்க மணக்க விருந்து படைக்கும் ‘சக்கரப் பொங்கல்’ உணவு விடுதி ஒரு பக்கம். பா.ராகவன் குமுதம் ஜங்ஷன் ஆசிரியராக இருந்தபோது இந்த ஓட்டலைப் பற்றி முதல் பக்கத்தில் நேர்த்தியான வாழையிலை லே-அவுட்டோடு எழுதி…




Read more »

இடாகினி பேயும் இதர பேய்களும்

By |

இடாகினி பேயும் இதர பேய்களும்

  இடாகினிப் பேய்   இது பகுதியாக முன்னர் வெளியானது. அஃது படியா நின்றோர், கூறியது கூறற்றுயர் நீங்கவே தொடக்கத்தில் சில பத்திகள் கடந்து தொடர வேண்டுகிறேன். ‘இடாகினிப் பேய்களும்..’ என்ற பெயரில் என் (அண்மையில் காலம் சென்ற) நண்பர் கோபிகிருஷ்ணன் எழுதிய கதைத்தொகுப்பு பற்றிப் படித்தபோது எனக்கு இந்த இடாகினிப் பேயை எங்கேயோ பார்த்த நினைவு. சிலப்பதிகாரத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அது வசமாகப் பிடிபட்டது. மாலதி என்ற பார்ப்பனி, மாற்றாள் மகவுக்குப் பால் தரும்போது பால்…




Read more »

தகழி எழுதாத ஆத்ம கதா – சுஜாதா எழுதிய புதுக் கட்டுரை

By |

தகழியின் ஆத்மகதை தகழியின் ‘ஆத்மகத’ படிக்கக் கிடைத்தது. சொல்லப் போனால் தகழி இப்படி ஒரு புத்தகத்தை எழுதவே இல்லை. ‘பால்யகாலம்’, ‘வக்கீல் ஜீவிதம்’, ஓர்மயுடெ தீரங்ஙளில்’ என்ற அவருடைய மூன்று வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்புகளை ஒட்டு மொத்தமாக ஆத்மகதையாக்கி இருக்கிறார்கள். 1959 வரையான தன் வாழ்க்கைச் சரிதத்தைக் கால வரிசை மீறிய கட்டுரைகளாக அதுவும் பத்திரிகைத் தொடர்களாக எழுதியிருக்கிறார் தகழி. வாழ்ந்த காலத்திலேயே சர்வதேச அளவில் மிகப் பிரபலமான எழுத்துக்காரனாக ஆனதால் கடைசி நாற்பது வருடங்கள்…




Read more »