Archive For The “இது புதுசு” Category
வக்கீல் மோகனதாசன் ஆபீஸ் களைகட்டி இருந்தது. கோர்ட் கட்சிக்காரர்களை விட, சிவப்புத் துண்டு போட்டவர்கள் தான் சாதாரணமாக் இங்கே அதிகம் தட்டுப்படுவார்கள். இப்போது, கருப்புத் துண்டு போட்ட பழக்கடை அறிவரசன், முனியாண்டி விலாஸ் தங்கராஜு, ரிக்ஷா நாச்சியப்பன் என்று ஏகக் கூட்டம். வக்கீல் வேதாத்திரி ஐயங்காரும் அங்கே தான் இருந்தார். இவர் ஒருத்தர் தான் கூட்டத்தில் கதர் சட்டை போட்டவர். நாங்கள் இடம் கிடைக்காமல் படிக்கட்டில் இடித்துப் பிடித்துக் கொண்டு நின்றோம். …
விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி 5 ‘என்னடா அம்பி.. படக்கூடாத எடத்துலே கிரிக்கெட் பந்து பட்டு வீங்கிடுத்தா?’ டாக்டர் சதானந்தம் ஒரு கட்டு வெற்றிலையை மேஜை மேல் வைத்து சாவதானமாக மென்று கொண்டிருந்தார். ‘இல்லே டாக்டர் மாமா.. இது மருந்து சீசா..’ நான் டிரவுசர் பையிலிருந்து வெளியே எடுத்தேன். ‘தாத்தாவுக்கு… மூணு நாளா..’ அசங்கிய விஷயம். எப்படிச் சொல்வது? ‘கொல்லைக்கு வரலியாமா?’ மவுனமாக சீசாவை நீட்டினேன்….
‘ராமு.. இன்னமா எழுந்திருக்கலே.. எட்டு மணியாறதே..’ ‘அவனுக்கு எவனோ வேலை மெனக்கெட்டு டெல்லியிலிருந்து ஒரு மூட்டை புஸ்தகம் அனுப்பியிருக்கான்..’ ஆபீசுக்குப் போகிற அவசரத்தில் அப்பா. ரசம் மணக்கிற கை படுக்கைக்குப் பக்கத்தில் எதையோ போட்டது. ‘பாக்கு டப்பா எங்கே?’ ‘ராமுதான் நேத்து அதுலே வெள்ளரிக்கா விதை தேடித் தேடித் தின்னுட்டிருந்தான்..’ இனியும் படுத்துக் கிடந்தால் டின் கட்டி விடுவார்கள். ஓடியே போய் சைக்கிள் பின்னாலிருந்து பாக்கு டப்பாவை எடுத்துக்…
விஷ்ணுபுரம் தேர்தல் இரா.முருகன் பகுதி – 2 அந்த ஆள் பார்க்க வினோதமாக இருந்தான். வயது கிருபாகரன் அண்ணன் புருஷோத்தமனை விட கொஞ்சம் கூட இருக்கலாம். இவனுக்குப் பெரிய மீசை இருந்தது. பட்டையாக நெற்றியில் வீபுதி பூசி இருந்தான். சந்தனம், குங்குமம், ஜெமினி கணேசன் போல தொளதொள பேண்ட். கோயிலுக்குப் போய்விட்டு, ‘காலங்களில் அவள் வசந்தம்’ பாடத் தயாராக நிற்கிற ஜெமினி. கோயில் வாசலிலேயே நிற்கிறான். ஒரு கையில் தொப்பி. கையில் ஏதோ காகிதம். கோபுரத்தை…
அடுத்த நாவல் ‘தினை’ ஏழு அத்தியாயங்கள் நிறைவடைந்து எட்டாவது அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்ன ழானர்? No Magical Realism, surrealism, historical fantasy … Not plain vanilla post modernistic by any stretch of imagination.. Let us categorize it as Hysterical Realism -recherché postmodernism. This is how the novel begins – நாவல் தினை பூர்வாங்கம் மலைப் பிரதேசம் பறவைக்…
விஷ்ணுபுரம் தேர்தல் – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 1 ’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, செப்டம்பர் 1993-ல் பிரசுரமானபோது இந்தக் குறுநாவலின் தலைப்பு – விஷ்ணுபுரம். பிறகு ‘விஷ்ணுபுரம் தேர்தல்’. இந்தக் குறுநாவலே ’பயோபிக்ஷன்’ வாழ்க்கை வரலாற்று நாவலாக 2005-ல் வாராவாரம் தினமணி கதிரில் வெளியாகிப் பின்னர் நூல் வடிவமும், குறும்பட வடிவமும் பெற்ற ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’வுக்கு ஊற்றுக்கண். என் ‘தகவல்காரர்’ குறுநாவல் தொகுப்பில்…