Archive For The “இது புதுசு” Category

உப்பு வணிகமும் பழநிக்கு நடைப் பயணமும்- புரவி மாத இதழில் என் பத்தி வாதவூரான் பரிகளிலிருந்து

By |

உப்பு வணிகமும் பழநிக்கு நடைப் பயணமும்- புரவி மாத இதழில் என் பத்தி வாதவூரான் பரிகளிலிருந்து

ஆடு மேய்ச்ச மாதிரியும் இருக்கணும்,  அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கணும் என்பது தெற்கத்தி  சீமையில் பரவலாக  உதிர்ந்த பழமொழி.   இப்போது பழமொழியின் இடத்தை சினிமா பஞ்ச் டயலாக் அபகரித்துக் கொண்டிருக்கிறது. நிற்க.   இன்னொரு பழைய புத்தகம் படிக்கக் கிடைத்தது. சில நூறு வருடம் முன், என்றால் கிட்டத்தட்ட ஆயிரத்து அறுநூறாம் ஆண்டு முதல் நகரத்தார் என்ற நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவர் அவ்வப்போது மேற்கொண்ட பக்திப் பயணம் பற்றிப் பேசுவது. அவர்கள் திரைகடல் ஓடியும் திரவியம்…




Read more »

பம்மிப் பம்மி நுழைந்து கொண்டிருந்த இரவு – குறுநாவல் மனை பகுதி

By |

பம்மிப் பம்மி நுழைந்து கொண்டிருந்த இரவு – குறுநாவல் மனை பகுதி

மனை       குறுநாவல்         இரா.முருகன்                பகுதி  7   மனைக்கு உள்ளே அந்தர்ஜனங்களின் நாமஜபத்தை மீறி எழுகிற மூத்த நம்பூதிரியின் குரல்.   ‘யார் இந்த தரித்திரம்? எப்படி உள்ளே வந்தது?’   குழந்தை நந்தினி விளையாடியபடி மனையின் உட்புறம் ஓடி, படியேறி வந்து கொண்டிருந்த மூத்த நம்பூதிரியின் பெரிய வயிற்றில் மோதிக் கொண்டு நின்றது.   ‘இது யார் குடுமியும் பானை வயிறுமாக? ராட்சசனா? ஏன் என்னைப் பார்த்து உருட்டி விழித்து சத்தம் போடணும்?’   பயத்தில்…




Read more »

அந்தி சூழ சர்ப்பக்காவில் ஏற்றிய விளக்கு

By |

அந்தி சூழ சர்ப்பக்காவில் ஏற்றிய விளக்கு

மனை       குறுநாவல்         இரா.முருகன்                பகுதி 6   இரவு மனையில் பம்மிப் பம்மி நுழைந்து கொண்டிருந்தது.   சர்ப்பக்காவில் விளக்கு வைத்துவிட்டுப் பகவதி திரும்பிக் கொண்டிருந்தாள்.   ‘யாரது, வாசலில் இருட்டில் நின்றுகொண்டு?’   இருமல் பதிலாக வந்தது. அப்புறம் தீனமான குரல்…   ‘திருமேனியைப் பார்க்கணும்’.   சோகைச் சிவப்பில் ஓர் இளம்பெண்.  தீப வெளிச்சத்தில் வெளிறித் தெரிந்த அவளுக்குப் பகவதி வயது காணும். தாடை எலும்பின் மேல் விடாப்பிடியாகப் பற்றியிருந்த தசை. குழி விழுந்த…




Read more »

யானைக்காரனான திருமாந்தாங்குன்னு வைத்தியனோடு ஒரு பகல்

By |

யானைக்காரனான திருமாந்தாங்குன்னு வைத்தியனோடு ஒரு பகல்

மனை       குறுநாவல்         இரா.முருகன்                பகுதி 5   பகவதி குளித்திருந்தாள்.   ’அந்தி சாயப் போகிற நேரத்தில் ஸ்திரியோடு பேசுவது பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?’   ஈரக்கால்களை நடையில் ஒற்றி உள்ளே வர, சித்ரன் தரையில் அமர்ந்து சரிகைத் துணியை மடித்து வைத்துக் கொண்டிருந்தான். காலோடு நடக்கிற கண்கள்.   ‘ஆயுர்வேதம் என்ன சொல்கிறதென்றா கேட்டாய்? அது இன்னொரு தடவை பேசச் சொல்கிறது.. இப்படி ஆரம்பித்து..’   ஈரமும் மஞ்சளும் மணத்த அவளுடைய இரு பாதங்களிலும்…




Read more »

முகபடாம் வாங்கி வந்த ஆனைக்காரன் – குறுநாவல் மனை

By |

முகபடாம் வாங்கி வந்த ஆனைக்காரன் – குறுநாவல் மனை

    மனை       குறுநாவல்         இரா.முருகன்                பகுதி 4   பிற்பகல். இன்றைக்கு இனிமேல் சித்ரன் வருவான் என்று தோன்றவில்லை.   பகவதி, உலர்ந்து கொண்டிருந்த சோற்றுப் பாத்திரத்தைப் பார்த்தாள். சித்ரனுக்குப் பிடித்த மிளகூட்டான். இதுவும் இன்று குப்பைக்குத் தான்.   ஒரு பெருமூச்சோடு பகவதியின் கை பாத்திரத்தை எடுக்க நீண்டபோது, பின்னாலிருந்து ஒரு வலுவான கரம் இணைந்தது.   ‘எனக்கு இல்லையா?’   சித்ரன் குரல்.   சட்டென்று இறங்கிய மழை போல பகவதிக்கு உடல்…




Read more »

வல்லே என்று சொல்லி வந்து பார்த்து எழுதிய பயணி – வாதவூரன் பரிகள் பத்தி – புரவி இலக்கிய இதழ்

By |

வல்லே என்று சொல்லி வந்து பார்த்து எழுதிய பயணி – வாதவூரன் பரிகள் பத்தி – புரவி இலக்கிய இதழ்

வாதவூரான் பரிகள் 2                                இரா.முருகன்   பயணம் செய்யத் தயாராவது பயணத்தைப்போல் சுவாரசியமான விஷயமாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. விரிவாகத் திட்டமிட்டு,  எல்லா நூற்றாண்டுகளிலும் சீனா, அரேபியா, போர்ச்சுகல், இத்தாலி,  இங்கிலாந்து என்று பல நாடுகளிலிருந்து உலகம் சுற்றக் கிளம்பி வந்து, பயணத்தில் முக்கியப் பகுதியாக தென்னிந்தியாவில்   பயணிகள் ஆர்வத்தோடு அலைந்திருக்கிறார்கள்.   இபன் பதூதா, பாஹியான், மார்க்கோ போலோ, யுவான் சுவாங் என்று கிட்டத்தட்ட எல்லாப் பயணிகளும்  பயணம் முடித்து ஊர் திரும்பி, உடுப்பைத் துவைக்கப்…




Read more »